Friday, September 3, 2021

4. நெருங்கிய உறவு

 4. நெருங்கிய உறவு

- Dr.M.அமலாவதி
Malarga Manitham Magazine - Dec 2019

தெய்வம்: என்ன முகம் கோபமாக தெரிகிறது. என்ன நடந்தது,
நான்: தெரியாதது போல் ஏன் நடிக்கிறீர்கள்

தெய்வம்: நானா? நடிப்பு என்றால் என்ன அர்த்தம்

நான் : ஏன் கோபத்தை உண்டாக்குகிறீர்கள். 8 மணிக்கு வா என்று சொல்லிவிட்டு இவ்வளவு நேரம் பிந்திவந்தால் கோபம் வராதா? என்ன?

தெய்வம்: ஓ! இதுக்கா கோபம் "காத்திருப்பது" "Waiting" அர்த்தம் தெரியுமா?

நான்: தெரியாது

தெய்வம்: காத்திருப்பது உன் அன்பை
வெளிப்படுத்துவது என்று அர்த்தம்

நான்: ஆஹா! அப்புறம் அரசியல் மீடிங்குக்கு போகும் பொழுது அல்லது பட்டம், பதவி வாங்க போகும் பொழுது, வரவேண்டிய ஆள், வர தமதித்தால் என்ன செய்வீர்கள்? வந்ததும் ஒரு சந்தோஷம் வரும். அப்பொழுது காத்திருந்த கோபம்
எல்லாம் மாறிவிடும் அப்படித்தானே. எனக்காக காத்திருந்தால் என்னை பார்த்த உடன் கோபம் மாறி சந்தோஷம் வேண்டுமல்லவா. ஏன் கோபம் தீரவில்லை என்றுத் தான் நான் யோசிக்கிறேன்.

நான்: அரசியல்வாதியும், நீங்களும் என்றுத்தானே எனக்கு அவர்கள் மீது நட்பு உண்டா? இல்லை அவர்கள் என்மீது நட்பு வைத்திருக்கிறார்களா?

தெய்வம்: ஒ புரியுது "நட்பு" இருப்பதால் கோபம் வருகிறது என்று சொல்ல வருகிறாயா? காத்திருக்கும் பொழுது கோபம் வரும் பார்த்த உடன் 'நட்பு' அல்லவா வரவேண்டும். வந்த உடன் ஓடி கட்டி அணைக்க வேண்டாமா. முகத்தை தூக்கி வைத்திருக்கிறாய்?ஏன்? அல்லவா

நான்: உன்னை சொல்லி புரிய வைக்க முடியாது நான் ஒன்று கேட்கட்டா நீங்கள் எனக்காக காத்திருந்து நான் பிந்தி வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்

தெய்வம்: இன்னும் இரண்டு பேரை சந்தித்து விட்டு பிந்தி வருவேன்.
எனக்கு தான் உன் சிந்தனை தெரியுமே.

நான்: இதுதான் வித்தியாசம். எனக்கு உங்கள் சிந்தனையை தெரிந்து -கொள்ள முடியவில்லை. நான் என் சிந்தைனயிலேயே இருக்கிறேன். அதுதான் கோபத்தை உருவாக்கி தருகிறது. காரணம் புரிந்தது.

தெய்வம்:மற்றொரு விஷயமும் இதில் உண்டு. ஏன் காத்திருக்கிறாய். வரவில்லை என்றால் போக வேண்டியது தானே. நான் இருக்க சொல்லவோ, காத்திரு என்று சொல். இல்லையே ஏன் காத்திருக்கின்றேன் என்று நீயே உன்னை கேள்?

நான்: நான் உன்னை அன்பு செய்வதால் பார்த்துவிட்டு போகவேண்டுமென்ற ஆர்வத்தால் மனம் காத்திருக்க சொல்லுகிறது, அதனால் காத்திருக்கிறேன்.

'தெய்வம்: அன்பு கொஞ்சமிருந்தால், கொஞ்சநேரம் காத்திருப்பாய். அன்பு அதிகம் உண்டு என்றால் அதிகநேரம் காத்திருப்பாய் அப்படித்தானே. பின் ஏன் பார்த்தஉடன் சந்தோஷத்தில் வந்து கட்டிபிடிக்காமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உன் கோபத்தை காட்டுகிறாய்.

நான்: தெரியவில்லை. பார்த்த உடன் கோபம் தான் வந்தது.

(தெய்வம்: நான் சொல்லி ருகிறேன். அது ஒரு "Emotional game"

நான்: அப்படிஎன்றால் தெய்வம்: நீ கோபத்தை காட்டினால் உன்பின்
வருவேன் கொஞ்சம், கொஞ்சுவேன். இல்லையென்றால் பழிவாங்கும் எண்ணம் நீ என்னை காக்க வைத்ததுப் போல நானும் உன்னை காக்கவைப்பேன், என்று

நான்: எனக்கு ரொம்ப கோபம் வருகிறது. நான் ஒருநாளும் யாரையும் பழிவாங்கமாட்டேன். என்று உங்களுக்கு தெரியாதா? போதும் பேசமாட்டேன்.

தெய்வம்: இதற்கு பெயர் "Emotional game" நான் சொல்லுகிறேன் ஒரு கேள். கதை ஒரு இளைனுக்கு என்னை அதிகம் பிடித்திருந்தது. அழகாக இருப்பான். ல்ல படிப்பு, நல்ல வேளை அவனுக்கு "நாய்" என்றால் உயிர். ஒருநாள் நான் கேட்டேன், "டாம் எல்லோரும் உன்வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும். என்று என்னிடம் கேட்டார்கள். ஏன் நீ என்னிடம் கேட்கவில்லை என்று கேட்டேன் அதற்கு அவன் இந்த பெண்களை சமாளிக்க எனக்கு தெரியாது. அவர்கள் மனநிலை காற்று அடிப்பதுப் போல அடித்துக் கொண்டே இருக்கும். அவர்களை சந்தோஷமாக வைக்க முடியாது அதனால் தான் நான் கேட்கவில்லை. நிம்மதியாக
சந்தோஷமாக இருக்கின்றேன். என்றான். தப்பு மனிதன் துணை கேட்டதினால் தான் நான் பெண்ணை உருவாக்கினேன். நீ நாயை துணைக்கு வைத்திருக்கிறாய். அது தப்பு. திருமணம் செய்ய வேண்டுமென்று கூறினேன். அப்படிஎன்றால் ஒரு பெண் தா என்றான். திருமணம் முடிந்தது. சில மாதங்கள் கடந்தன. என்னை பார்க்க வந்த பொழுது கிண்டலாக கேட்டேன். என்ன திருமண வாழ்வு எப்படி இருக்கிறது. என்னை கூட சில நேரம் மறந்து விட்டாயே என்றேன். அதற்கு அவன் கூறினான். ஆறுமாதம் முடிந்து விட்டது அப்படி இருந்தும். இவள் இப்படித்தான் என்று சொன்னான் வரையறுக்க முடியவில்லை. எடுத்துக்காட்டாக. நான் சற்று பிந்தி வந்தால் என்னுடைய "Ben" உர்... உர்... என்று சுற்றி, சுற்றி வரும். என் கார் சப்தம் கேட்ட உடன் வாலை ஆட்ட துடங்கும். உள்ளே போன உடன் என் மேல் குதிக்கும், முத்தும் அதுதான் அன்பை பயங்கரமாக வெளியே காட்டும். சரி! சரி ! என்று அதை சமாதான படுத்துவேன். அந்த பக்கம் திரும்பி பார்த்தால் நீங்கள் கொடுத்த மனைவி முகத்தை ஊர், ஊர் என்று வைத்து முகத்தில் நீளமும் அகலமும் கூடி கொண்டே போகும். இதுதான் என் திருமண வாழ்க்கையின் சுருக்கம். நாய்க்கும், மனைவிக்கும் உள்ள வித்தியாசம். இதை உண்மையா என்று அறிய உன்னிடம் செய்து பார்த்தேன். டாம் கூறியது உண்மைத் தான்.
போதும், போதும் நான் நான்: போதும், போய்விட்டு வருகின்றேன். ஏன் இந்த மாதிரி மனநிலையை பெண்ணுக்கு ஏன் கொடுத்தீர்கள் என்று சற்று நீங்கள் யோசித்து விட்டு வாருங்கள். போயிட்டு வரேன் Bye ஏ... வா... ஏ... வா....' Bye, Bye.

3. நெருங்கிய உறவு

 3. நெருங்கிய உறவு

- Dr.M.அமலாவதி
Malarga Manitham Magazine - Nov 2020

தெய்வம்: என்ன முகம் வாடியிருக்கிறது. வலியா, வேதனையா, அழுகையா? நான்: ஒன்றுமில்லை...

தெய்வம்: சும்மா சொல், என்னிடம் சொல்லவில்லை என்றால், யாரிடம் சொல்வாய்.

நான் : உங்களிடம் சொன்னால், உனக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், அடிவாங்கினேன், இரத்தம் சிந்தினேன், எனக்காக இதை தாங்க முடிய வில்லையா என்று சொல்வீர்கள்.

தெய்வம்:ஒ இவ்வளவு கோபமா வா! உன் தலையை என் மடியில் வை. சாந்தப்படு.

நான்: கண்ணீர் வடிய ஆரம்பித்தது. தெய்வம்: என்ன! அழுகையா?

நான்: உம்.

தெய்வம்: மன வேதனையின் காரணமென்ன? என்ன வேண்டும் சொல். நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். கேள். நான்: என் வேதனைகள் தாங்கிக் கொள்ள எனக்கு சக்தியாக, பலமாக நீ இருக்க வேண்டும்.

தெய்வம்: அவ்வளவு தானே. "உன் பலவீனத்தில் என் பலம் தாங்கி நிற்கும்." என்ன உடல் வேதனையா? மன வேதனையா?

நான்: உடல் வேதனை, மன வேதனை, தலை வேதனை எல்லா துன்பத்திலும் கஷ்டத்திலும், நஷ்டத்திலும் நீ என் ‘சக்தி'யாக இருக்க வேண்டும்.

தெய்வம்: ஒ இவ்வளவு தானே. உடனே செய்வேன். என் தூதர்கள் உனக்கு சக்தி தருவார்கள்.

நான்: உன் காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பதால் அழ கூட பயமாக இருக்கிறது. சொல்லி புலம்ப கூட ஒரு இடமில்லை. உடனே “"Report” போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது.

தெய்வம்: நீ நினைப்பது போல அவர்கள் ஒன்றும் "Watch Man" | இல்லை. "Report" கொடுக்க. நீ துன்பத்திலிருக்கும் போது. அவர்கள் அருகிலிருந்து உன் துடைத்து விட்டு உன்னை சிரிக்க வைப்பார்கள். கண்ணீரை உனக்கு பிடித்த பாடல்களை பாடுவார்கள். உனக்கு. துணையாக இருப்பார்கள். நீ மனம் வருந்துவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். எப்படியாவது உன்னை சிரிக்க வைப்பார்கள். நீ நினைப்பது போல "Report" கொடுப்பதற்கு அல்ல, அவர்கள் உன்னோடு இருப்பது. உன்னை வழிநடத்த, துன்பங்கள் வராமல் தடுக்க, எந்த நேரத்தில், யாரோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும். எப்பொழுது பேச வேண்டும். எப்பொழுது மௌனமாக இருக்க வேண்டுமென்று அவர்கள் உனக்கு சொல்லித் தருவார்கள். அப்படியே நீ செய்தால், துன்பம், வருத்தம் ஏது.

நான்: அப்படி என்றால் நான் அவர்கள் சொல்லுவதைப் போல செய்யவில்லை. அதனால் தான் துன்பம் என்று சொல்ல வாரீர்களா?

தெய்வம்: உண்மை தான். நீ அவர்களை காவல்காரர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இல்லை என்றால் தெய்வத்திடம் 'கோள்' சொல்லுபவர்கள் என்று நீ அவர்களை ஒதுக்கியதால் ஏற்பட்ட துன்பமே இது.

இனி நான் சொல்வதுப் போல நீ செய். அவர்கள் உன்னுடைய |நெருங்கிய நண்பர்கள். உன்னையும், என்னையும் சேர்த்து கட்டும் ஓர் நூல் என்று நினைத்துக் கொள். என் சிந்தனையை உடனே வாங்கி உனக்கு தருவார்கள். அவர்கள் சொல்வதை உடனே நீ செய்ய வேண்டும். ஏன், எதற்கு? இப்படி செய்தால் என்ன. அப்படி போனால் என்ன என்று கேள்வி கேட்டு நூலை 1 அறுத்து விடுகிறாய். பின் தேம்பி அழுது கொண்டிருக்கும் பொழுது. தெய்வமே காப்பாற்று என்று கூறும் பொழுதும், உடனே இவர்கள் வந்து அறுபட்ட நூலைச் சேர்த்து ஒரு முடிச்சு போட்டு விடுவார்கள். பின் நீ சந்தோஷமாக இருப்பாய். கொஞ்ச நாட்கள் அப்படியே போகும் பொழுது, திரும்பவும் சேட்டை பண்ணி நூலை அறுத்து விடுவாய். பின் அழுது கொண்டு சக்தி தா என்பாய். திரும்பவும் இவர்கள் நூலைக் கட்டி. உனக்கும், எனக்கும் உறவை ஏற்படுத்துவார்கள். இதுதான் இவர்கள் செய்வது. ஒரு பாலமாக இருப்பார்கள்.

நான்: இவர்கள் தெய்வமாக இருப்பார்கள் தானே. ஏன் கயிறு அறுந்து விடாமல் செய்ய வேண்டியது தானே, அப்பொழுது எனக்கு கஷ்டம், துன்பமில்லை. சொல்லுங்கள். அதை செய்ய

தெய்வம்: அதைத்தான் அவர்கள்செய்ய முயற்சி செய்கிறார்கள். நீ உன் பிடிவாதத்திலும், பெருமையில் எனக்கு எல்லாம் உன் தெரியும். நீ ஒன்றும் சொல்லி. தரவேண்டும். நான் படித்தவள், கெட்டிக்காரி என்று
உன் கெட்டிக்காரத்தனத்தை காட்ட அறந்து விடுகிறாய். ஒவ்வொரு முறை நீ அறந்துவிடும் பொழுது அவர்கள் எவ்வளவு மனவேதனை அடைகிறார்கள் என்று உனக்கு தெரியுமா?

நான் ஒன்று சொல்லுகிறேன் நீ கேட்பாயா? நான் விரும்பாத குணம் பெருமை" பெருமையை காட்டி, உன் முன்னோர்கள் என்னை விட்டு விலகியது போல நீயும் போய் விடுவாயோ என்று நான் பயப்படுகின்றேன்.
இரண்டாவது உன் காவல்தூதர்கள், சொல்லுவதை நீ கேட்காமல், உறவு பாலத்தை வெட்டி விட்டு என்னை விட்டு பிரிந்து போய், சுற்றி அலைவாயோ என்ற பயம் என்னிடம் உண்டு, எது செய்தாலும் அவர்களிடம் கேட்டு, அவர்கள் சொல்வதற்கு நீ கீழ்படிந்து நடந்தால் உறவு பாலம் பலப்படும். பின் ஏன் துன்பம், வருத்தம், கவலை அவர்கள் சொல்வதை கேட்பதற்கு, நீ உண்மை உள்ளவனாக இருக்க வேண்டும் உன்னில் நீ உண்மை உள்ளவனாக இருக்க வேண்டும். உன்னில் நீ உண்மையோடிருந்தால் அவர்கள் சொல்வதைப் போல் செய்தால் நாம் இருவரும் சந்தோஷமாக இருக்கலாம்.
நான் கேட்பது எல்லாம் உன்னில் நீ உண்மையோடு சொல்வதை செய் (கீழ்படி) பெருமை வேண்டாம்.

நான்: இப்பொழுது நீங்கள் என்ன சொல்லவாரீர்கள். நான் பெருமைகாரி, சொல்வதை கேட்பதில்லை. பொய்காரி என்று சொல்ல வருகிறீர்களா?
எனக்கு கோபம் வருகிறது.

தெய்வம்: உன்னையும், என்னையும் கட்டிய இந்த நூலை அறுத்தது நீபா? இல்லை நானா? ஏன் அறுத்தாய், எப்பொழுது அறுத்தாய், எத்தனை நாட்கள் நான் இல்லாமல் என்னை வருத்தப்படுத்தி தொடர்ந்த நாட்கள் எத்தனை? கணக்குப்பார் அப்பொழுது உனக்கு புரியும்.

தெய்வம்: என்ன மௌனம் பேசு

நான்: என்னை குற்றப்படுத்தாதீர்கள். நான் மனுஷி தானே உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என்ன செய்வது? நீயும் வேண்டும், உலகமும் வேண்டும். உலகத்தில் வாழ பணம், பெயர், புகழ் வேண்டும். உன்னோடு வாழ புண்ணியம் வேண்டும். இதில் "Balance" பண்ணும் பொழுது கயிறு அறுந்து போகிறது. சிலசமயம் உலகம் கைமேல் கொடுக்கிறது. ஐய்யோ! இது வேண்டாமென்று விலகினால் நீ கை கொடுக்கிறாய். என்ன செய்வதென்று சிலசமயம் முழிக்கிறேன். தடுமாறுகிறேன். என்மேல் இரக்கமாய் இருங்கள் சாமி இரக்கமாய் இருங்கள்.

தெய்வம்: நீ எத்தனை முடிச்சு போட்டிருக்கிறாய் என்று நான் கணக்கு வைப்பது அல்ல. என்றும் காத்திருப்பேன். வந்த உடன் அந்த சந்தோஷத்தில் எல்லாம் மறந்து விடுவேன். நான் கேட்பது ஒன்றே ஒன்று. இனி நீ என்னை விட்டு விலகாதே. நான் தனிமையாகிறேன். நீ இல்லாமல் எனக்கு இன்பமில்லை, சந்தோஷமில்லை. நீ என்னோடு இருக்கும் இந்த இன்ப நேரத்தை விடவா உலகம் உனக்கு கொடுக்கப் போகிறது? நானே எல்லாம் 50/50 நீர்
பாதி நான் பாதி. இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி? நான் உனக்கு எல்லாமாக இருக்கும் பொழுது ஏன் என்னை விட்டு பிரிகின்றாய்?
எந்த நேரத்திலும் என்னை கூப்பிடு நான் ஓடி வருவேன். உன்னை ஆறுதல் படுத்துவேன். இரண்டு பேரும் சந்தோஷமாக ஜீவிக்கலாம். நான் கொடுக்காத எதை உலகம் கொடுக்கும்? எல்லாம் நான் கொடுத்தது தானே. என்னிடம் இல்லாதது எது? சொல்.

நான்: நான் ஒரு முட்டாள் என்று மட்டும் புரிந்து கொண்டேன். இனி உறவின் பாலத்தை அறுக்க மாட்டேன் என்று சொல்ல தைரியமில்லை. அறுக்கக் கூடாது என்று நினைக்கின்றேன். நான் பலவீனன். நான் கூப்பிட்டால் தான் வரவேண்டும் என்று காத்திருக்காமல் அறுக்க போகிறேன் என்று தெரிந்த உடன் ஓடிவந்து கயிறை பிடித்துக் கொள்ளுங்கள். நான் திமிர் பிடித்து அறுந்தாலும் உடனே முடிச்சு போட்டு விடுங்கள். அலைய விடாதீர்கள். நாட்கள் கடந்து போகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். என் பலவீனத்தில் உங்கள் “பலம்” கிடைக்கப்படும். கொஞ்சம், கொஞ்சமாக, முழுமையாக உங்களிடம் வந்து விடுவேன். அது மட்டும் என்னிடம் பொறுமையாக இருந்து விடுங்கள். என்னை விட்டு பிரிந்து விடாதீர்கள். உங்களுக்கு பாவிகளை பிடிக்குமல்லவா. அந்த
என்னை வைத்துக் கொள்ளுங்கள். நல்ல கள்ளனைப் போல எனக்கும் நல்ல மனசு உண்டு. என்னை எப்படியாவது நான் செய்ய வந்த காரியத்தை முடித்து விட்டு தந்தையோடு போய் சேர்த்து விடுங்கள். அது போதும் எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். கூட்டத்தில்
என்னை விட்டு பிரிந்து போக மாட்டேன் என்று வாக்கு கொடுங்கள். நான் எத்தனை பாவியாக இருந்தாலும் என் நல்ல உள்ளத்தைப் பார்த்து என்னை அன்பு செய்ய வேண்டும். நீயே என் கதி என்று அவர் காலில் விழுந்தேன்.

தெய்வம்: மகளே! எழும்பு நான் உன்னை முழுமையாக அன்பு செய்கிறேன். நீ இல்லாமல் என் அன்பு முழுமைப்படாது. எப்படி நான் உனக்கு வேண்டுமோ. அப்படி நீ எனக்கு வேண்டும். அன்பிலும், ஆனந்தத்திலும் என்னை அவர் தழுவிக் கொண்டார். நான் அவரை தழுவிக் கொண்டேன் இந்த அன்பு உறவுப் பாலத்தை பலப்படுத்தியது.

2. நெருங்கிய உறவு

 2. நெருங்கிய உறவு

- Dr.M.அமலாவதி
Malarga Manitham Magazine - Oct 2019

நான்: வேலை செய்து, வேலை செய்து போர் அடித்துவிட்டது. கொஞ்சம் வாங்க. ரீலாக்ஸ் "Relax" பண்ணலாம்.

தெய்வம்: கண்ணடிச்சு கூப்பிடுவதை பார்த்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. *Relax" பண்ணவேண்டுமென்றால் என்ன அர்த்தம்.

நான்: அப்படின்னா, பக்கத்தில் உட்கார வேண்டும். சிரிக்க வேண்டும். செல்லமா கிள்ளவேண்டும், கன்னத்தில் செல்லமாக அடிக்கனும். இப்படி கொஞ்சி விளையாட வேண்டும்.

தெய்வம்: இது ஒன்றும் எனக்கு தெரியாதே

நான்: நான் சொல்லி தருவேன். இப்படி கிள்ளனும். ஐய்யோ கிள்ளமுடியவில்லை. இப்படி செல்லமா அடிக்கனும். ஐய்யோ ஒன்னும் செய்ய முடியவில்லை என்? சிரிச்ச எனக்கு கோபம் வரும்.

தெய்வம்: உன்னை மாதிரி எனக்கு ஒன்றும் உடல் இல்லை. என்னுடைய உடல் ஆன்மீக உடல் அதனால் கிள்ளி, அடிச்சு விளையாட முடியாது. நான்: சரி, நான் மற்றொரு விளையாட்டு சொல்லித்தாரேன்.

அதற்கு பெயர் "கண்ணாமூச்சி” விளையாட்டு நீங்க கண்ண மூடவேண்டும் நான் என் ஆன்மீக உடலில் ஒளிந்து கொள்வேன் நீங்க கண்டு பிடிக்க வேண்டும் சரியா?

தெய்வம்: சரி

நான்: கண்ணை மூடுங்கள். நான் சரி என்று சொல்லுமட்டும் மூடி இருக்கவேண்டும்...... சரி

தெய்வம் : தேடி, தேடி, ஏ கள்ளி வெளியே வா. வயிற்றில் போய் ஒளிந்திருக்கிறாயா? கண்டு பிடித்துவிட்டேன் வெளியே வா.

நான்: திரும்ப கண்ணை மூடுங்கள்.- சரி

தெய்வம்: தேடி, தேடி கடைசியில் ஏ வாடி வெளியே, கிட்னியில் போய் ஒளிந்து நிற்கிறாய். சீக்கிரம் வெளியே வா.
நான் திரும்ப கண்ணை மூடுங்கள்... வா

தெய்வம்: தேடி, தேடி, தேடி... அடி கள்ளி காலுக்கு அடியில் போயா
ஒழிந்திருக்கிறாய். ஓடிவா. இப்பொழுது நீ கண்ணை மூடு நான் ஒளியட்டும்.

நான்: சரி!

தெய்வம்: சரி! வா.

நான்: ஒவ்வொரு உறுப்பாக தேடி கண்டுபிடிக்கவில்லை. அழுகையாக வந்துவிட்டது. ஒளிந்து கொள்கிறேன் என்று ஓடிவிட்டாய். பயங்கர கோபம் வருகிறது வா! சீக்கிரம் வா! இல்லை என்றால் நான் கோபித்து போய் விடுவேன்.

தெய்வம்: ஐய்யோ! போய்விடாதே. நான் உன்னுடன்தான் இருக்கிறேன். ஒரே ஒரு இடத்தை விட்டுவிட்டாய் தேடு.

நான்: அப்படியா! திரும்ப list தேட ஆரம்பித்தேன். ஒரு இடமும் கிடைக்க வில்லை.

தெய்வம்: பொறுமையாக இரு: சரி! ஒரு "குளு" தருகிறேன். புத்தியை வைத்து list போட்டு தேடினால் எப்டி கிடைக்கும். உன் சின்னபிள்ளை தனத்தை விட்டு, விட்டு அழுகையை நிறுத்திவிட்டு, மனதிலும், புத்தியிலும். சமாதானம் கொண்டு வந்து விட்டு, என்னைத்தேடி அப்பொழுது கண்டு பிடிப்பாய்.

நான் : இதயத்தை நன்றாக தேடுவோம். எங்கேயாவது வால்வுக்குள் ஒளிந்திருப்பான். பொறுமையாக தேடியும் ஆள் இல்லை. சரி ஒன்று செய்வோம். இந்த இரத்தத்தில் மிதந்து போவோம் எங்கேயாவது "ஒளி" தெரியும் என்று "Relax" ஆக படுத்து, மிதக்க ஆரம்பித்தேன். படகில் போன மாதிரி இருந்தது. தேடுவதை விட்டு, விட்டு இரசிக்க ஆரம்பித்து விட்டேன். சந்தோஷமாக இருந்தது. நன்றாக சுற்றி, சுற்றி வந்தேன். திடீரென்று ஒரு 'ஒலி' கேட்டது. எவ்வளவு நேரம் தான் ஒளிந்திருப்பது. என்ன செய்கிறாய்" என்று பின்தேட ஆரம்பித்தேன். கடைசியில் பார்ந்த புத்தியிலே, ஒரு மூளையில் ஒரு ஒளி தெரிந்தது. பார்த்து விட்டேன். வெளியே வா....

தெய்வம்: இந்த விளையாட்டு வேண்டாம். நான் எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா. உன் புத்தி எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இருக்கிறது. புத்தியில் அமைதியின்றி என்னால் அங்கு இருக்கவே முடியவில்லை. உள்ளத்தை அமைதிபடுத்துவது எளிது. புத்தியை அமைதிபடுத்து. அப்பொழுது தானே என் 'அப்பா' அங்கே வந்து தங்க முடியும். இப்படி மூளை" வேலை பார்த்தால் என் அப்பா சொல்வது
எப்படி கேட்கும். எங்க அப்பா ஒன்றும் என்னை மாதிரி தங்கி காத்திருக்க மாட்டாங்க. ஓடி போய்விடுவார்கள். நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.

நான்: 'சாரி' கோபமா, சிந்திக்க தானே புத்தி கொடுத்தீர்கள். அதனால் நான் சிந்தித்து வேலை செய்கிறேன். அதுக்கு போய் கோபப்பட்டால், நான் என்ன செய்வேன்.

தெய்வம்: எங்க அப்பா, திட்டம் போட்டு எப்படி செய்யவேண்டுமென்ற திட்டமெல்லாம் புத்திக்கு தெரியும். நீ அமைதியாக, உன் சிந்தனையை கொண்டு வராமலிருந்தால் எங்கள் சிந்தனை உனக்கு தெரியும்

நான்: அப்படினா நான் என்ன செய்ய வேண்டும்.

தெய்வம்: தினமும் காலையில் அமைதியாக இருந்து, உன் கவனத்தை சுவாசத்தில் வைத்து சுவாசம் எடு. என்னுடைய ஒவ்வொரு சுவாசத்திலும் தெய்வம் உள்ளே வருகிறது ஒன்று மட்டும் உன் சிந்தனையில் வைத்து விட்டு, சுவாசம் எடு. அப்பொழுது என் தந்தை உன் புத்தியில் தங்கி அன்று முழுவதும் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டுமென்று. அவர் சொல்லித் தருவார். அப்படியே செய். நீ குருக்கே உன் சிந்தயை கொண்டு வந்தால், அவர் பேசமாட்டார். மௌனம் சாதிப்பார்.

நான்: அப்பாவிடம் உறவு வைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். நமக்குள்ளே அடிக்கலாம், சண்டைபோடலாம். அப்பாவிடம் என்ன செய்ய முடியும். சமமாக இருக்க முடியாதே.

தெய்வம்: உன் 'சுதந்திரத்தை' கொடுத்து விட்டாயே! பின் ஏது உனக்கு சுதந்திரம்.

நான்: நான் ஒரு அடிமையாகி விட்டேனா?

தெய்வம்: ஒரு வகையில் உண்மை தான். நாம் எல்லோரும் அவளால் படைக்கப்பட்டதால் நாம் அடிமை கூடாது தானே, அடிமை என்ற எதிர்மறை சிந்தனை இருக்கக் என்பதற்காக தான் 'freedom of choice' கொடுத்தார். நீ மறுபடியும் என்னோடு சேரும்மட்டும், எத்தனை பிறவி எடுத்தாலும் சரி. உனக்காக பொறுமையாக காத்திருப்பேன் என்று கூறி காத்திருக்கிறார். ஆனால் நீங்கள் ஏன் மனிதனுக்கு "சுதந்திரம்" கொடுத்தாய் அதனால் தான் நாங்கள் கெட்டுபோகிறோம். வழி தவறி செல்லுகிறோம். கொடுத்தது தப்பு என்று சொல்லுகிறீர்கள். நீயே உன் சுதந்திரத்தை, சுதந்திரமாக கொடுத்து விட்டு. இப்பொழுது கேட்கிறாய். நான் அடிமையா என்று மக்களை வைத்து என்ன செய்வது?

நான்: சாரி! உலகத்தில் வாழ்ந்து என்னை பல பேர் அடிமைப்படுத்தி, அடிமையான உணர்வு வந்ததால் இப்படி கேட்டு விட்டேன். இந்த உணர்ச்சி என்னுடைய "தனித்தன்மை” இருக்கும் மட்டும், திடீரென்று அது தலைகாட்டும். அப்பாவிடம் இந்த உணர்ச்சியை 'serious' ஆக எடுக்க வேண்டாம். என்று கூறிவிடுங்கள். நான் குழந்தை தானே. கொஞ்சம் கிறுக்கு போல பேசுவேன். கோபப்பட வேண்டாம் என்று எனக்காக நீங்கள் பரிந்து பேசுங்கள்.
மறுபடியும் சந்தோஷமாக எனக்கு கொடுத்த சுதந்திரத்தை என் தந்தையின் கையில் கொடுக்கின்றேன். அவர் “என் எஜமான், நான் அவரது வேலைக்காரி" சரியா! சந்தோஷமா, bye love

1. நெருங்கிய உறவு

 1. நெருங்கிய உறவு

- Dr.M.அமலாவதி
Malarga Manitham Magazine - Sep 2019

நான்: தெய்வமே! வா என்னோடு கொஞ்சம் இரு. எனக்கு ஒரு காரியம் பேச வேண்டும். நல்ல கவனிக்க வேண்டும். சிரிக்கக் கூடாது. சரியா?

தெய்வம்: "உம்"

நான்: தெய்வமே! எல்லாரும் உனக்கு பால், நெய், பூ கொண்டு ஸ்பெஷல் அபிஷேகம் செய்கிறார்கள். அது பெரிய காரியம் என்று நானும் செய்தேன். இப்பொழுது திரும்பிப் பார்க்கும் பொழுது சிரிப்பு வருது. நீ சிரிக்காதே. அது ஒரு குழந்தை விளையாட்டு என்று வைத்துக் கொள். இப்பொழுது யாரும் உன்னிடம் சொல்லாத விஷயத்தை நான் சொல்ல வேண்டுமென்று நினைத்து சிந்தித்து பார்த்தேன். தலைவலி வந்து விட்டது. ஒரு காலத்தில் மக்கள், உனக்கு நன்றி சொல்ல மறந்து விட்டார்கள். இப்பொழுது கொஞ்சம் படித்து விட்டார்கள். அதனால் நன்றி சொல்லுகிறார்கள். அப்படினா ஒன்றுமே இல்லை. பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. நீ என்னை கொஞ்சம் பாரு. நான் உன்னைபார்க்கின்றேன். கொஞ்ச நேரம் மெளனமாகப் பார்ப்போமா?

தெய்வம்: சரி.

நான்: தெய்வமே! என் மனசுக்குள்ள ஒரு பாட்டு பாடுது. கண்ணும் "கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுது, எண்ணும் போதே உள்ளம் பந்தாடுது." ஐய்யோ! இது யாரோ பாடிய பாட்டு, பார்த்தியா தெய்வமே, சொந்தமாக கூட ஒரு பாட்டு பாட தெரியவில்லை. அப்படினா என்ன செய்ய சொல்லுகிறாய்? அப்படினா நீ ஒரு பாட்டு பாடு,நான் கேட்கிறேன்.

தெய்வம்: சரி! I Love you, I Love you ... I.. Love... you

நான்: தெய்வமே! போதும். இதைத்தான் நீ எல்லோரிடமும் சொல்லுகிறாய். இப்படியே சொல்லி ஏமாற்றுகிறாய். எனக்கு மட்டும் ஒரு பாட்டு பாடு.

தெய்வம்: *"I Love you in a special Way",

நான்: தெய்வமே! என்னை ஒன்றும்.
ஏமாற்ற வேண்டாம். நீ இப்படி பல பேரிடம் சொல்லி இருக்கின்றாய் என்று, எனக்கு தெரியும். உன்னிடம் இருவதற்கும் ஒன்றுமில்லை, காரணம் நான் பேசுவதற்கு முன்பே என் எண்ணங்களை நீ அறிவாய். கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை. எல்லாம் நீ தந்தது. அப்படி செய்தால், கள்ளைக்கு நீ சொல்லுவாய் "நான் படைத்தேன், யாரோ தண்ணீர் ஊற்றி வளர்த்து, கஷ்டப்பட்டு பறித்துக் கொண்டு வந்தது, நீ என்னிடம் பணமிருக்கிறது என்று காட்ட வாங்கிக் கொண்டு வந்து எல்லாருக்கும் முன்பு தட்டில் கொண்டு வந்து பெருமையாக தந்தாய்" என்று இப்பொழுது நானும் அடிபட்டு, படித்து விட்டேன். அதனால் நீ படைத்ததை என்றும் நான் திருப்பி உனக்கு தரவில்லை. அதுவும் என் திருப்திக்காக, சந்தோஷத்திற்காக என்று நான் புரிந்து கொண்டேன். அப்படியென்றால், உன்னை சந்தோஷப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்? நீ சொல், நான் செய்கிறேன்.

தெய்வம்: இரு! நான் இஷ்டப்படவது ஒரே ஒரு காரியம். நீ பூமிக்கு வரும் பொழுது என் தந்தையோடு என்ன ஒப்புரவு செய்து வந்தாயோ, அதை செய்ய வேண்டும். அதுவும் என் தந்தை உனக்குக் கொடுத்த காலகட்டத்தில் செய்து முடிக்க வேண்டும். என்ன முகம் மாறி விட்டது...

நான்: எனக்குத் தெரியும். உன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தால் இப்படித்தான் ஒரு "பெரிய குண்டு" போடுவாய் என்று. எங்களையும் புரிந்து கொள். கொஞ்சம் உன்னிடம் வாதாடி ஒரு. பிரயோஜனமும் கிடையாது. அப்படினா! நான் ஒன்று கூறுகின்றேன். நீ செய். என் “ஒட்பந்தம்” என்னவென்று எனக்கு தெரியும். அதை செய்து முடிப்பது என்னவென்றால், "சுதந்திரம்" என்று கொடுத்து "Yes or No" என்று பதில் கொடு என்று இனி அது வேண்டாம். எல்லாவற்றிற்கும் ஒட்டுமொத்தமாக "Yes" என்று இப்பொழுதே சொல்லி விடுகிறேன். செய்ய வைக்க வேண்டியது உன் பொறுப்பு. சரியா. நான் கொஞ்சம் திமிர் பிடித்தவன் என்று உனக்குத் தெரியுமல்லவா? மண்டையில் ஒரு கொட்டு கொடுத்து செய்ய வைப்பது உன் பொறுப்பு (வலிக்காமல் கொட்டு) சிலசமயம் காது இருந்தும் காது கேட்காத செவிடனாக, பேசிக்கிட்டிருப்பேன். "TV" அல்லது "Cell" பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பொழுது நீ என் கண்களை கட்டி விடு. (கொஞ்ச நேரத்திற்கு இதுதான் என்று என் கண் பார்வையை எடுத்து விடாதே) சில நேரம் வேண்டவே வேண்டாம் என்று முரண்டு பிடிப்பேன். செல்லமாக ஒரு அடி கொடு. இருத்தி அடித்தால் தாங்க முடியாது. அப்புறம் ஓங்கி ஓங்கி அழுவேன். பிறகு நீ தான் வந்து சமரசம் பண்ண வேண்டியிருக்கும். சிலசமயம் என் ஆன்மீக காது கேட்காது. காரணம் எல்லா எதிர்மறை சிந்தனைகளை, சிந்தித்தோ, மற்றவர்கள் சொல்வதை கேட்டோ, அது தன் காதை பஞ்சு வைத்து அடைத்துக் கொள்கிறது. நீ தான் சுத்தமாக வைத்துக் கொள். உன் பேச்சைக் கேட்டு தெளிவு அடையும் மட்டும் கொஞ்சம் மறுபடியும் மறுபடியும் சொல்ல வேண்டும். சரியா?
இப்பொழுது நல்ல கவனமாக கேட்க
வேண்டும். யாரும் கேட்காத ஒன்றை நான் கேட்கப் போகிறேன். 'அப்பாவா'.....

தெய்வம்: என்ன! திரும்பச் சொல்லு. நான்: "அப்பாவை மெல்ல கூட்டிக் கொண்டு வந்து என் புத்தியில் ஒட்ட வைத்து விடு, அப்படியென்றால் என் புத்தி, அவர் புத்தியாகி விடும். அவர் புத்தி என் புத்தியாகி விடும். அப்படியென்றால் நான் ஒழுங்காக செய்து முடித்து விடுவேன். அப்பாவும் சரியான "Command" கொடுப்பார்கள். என் உடல் செய்து முடித்து விடும். சரியா.

தெய்வம்: ஆஹா... ஆஹா... ஆஹா... நான்: சிரித்தது போதும். எனக்கு கோபம் வருகிறது.

தெய்வம்: இதை எங்கிருந்து பிடித்தாய்? யார் இதைச் சொல்லிக் கொடுத்தார்?

நான்: உனக்குத் தெரியாது தெய்வமே. இது "Computer" உலகம். அவர் பெரிய programme யை உள்ளே வைத்து விட்டு அதற்கு ஒரு short cut desk- top ல் வைப்பார்கள். அதுபோல பெரிய agreement உள்ளே இருக்கட்டும். Short cut என் புத்தியில் இருக்கட்டும். அவ்வளவு தான். அப்பாவை கூப்பிட்டேன் என்று நீ கோபித்துக் கொள்ளாதே. நீ என் இதயத்தில் இரு. அப்பா புத்தியில் பின்னே எனக்கு என்ன கவலை. சொன்னதை செய்து விட்டு சமாதானமாக படுத்து தூங்குவேன் சரியா.

தெய்வம் : ரொம்ப கெட்டிகாரியாகி விட்டாய்.

நான் : புத்தியும் நீ தந்தது தானே. "சிந்தனை” என்னுடையது மற்றொரு காரியமும் சொல்லவேண்டும். நல்ல
கேட்டுக்கோ. அப்பாவை கூட்டிக்கொண்டு வரும்பொழுது ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். தெய்வம் : அப்பாவிடம் நான் ஒப்பந்தம்
செய்யவேண்டுமா எதற்கு?

நான் : அதுதானே சொல்ல. போகிறேன். சரியாக கேட்டுக்கொள் நான் சாகும்பொழுது "அப்பா என்னிடம் நீ அது செய்யவில்லை. இப்படி செய்தாய். என் திட்டம் போல நீ செய்யவில்லை என்று என்னை குற்றம. சொல்ல கூடாது. அப்படின்னா நான் சொல்வேன். அந்த குற்றத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு. ஏன் நீங்கள் செய்யவைக்கவில்லை. நான் தான் என் சுதந்திரத்தை உங்களிடம் கொடுத்து விட்டேனே செய்யவைக்க வேண்டியது உங்கள் பொறுப்புத்தானே அப்படினா" அந்த குற்றத்திற்க நீங்கள் தான் பொறுப்பு என்று நான் சொல்வேன். சரியா யாரும் கேட்காததை நான் கேட்க வேண்டுமென்று நினைத்தேன் இப்பொழுது கேட்டு விட்டேன். அதனால் இப்பொழுதே தெளிவாக அப்பாவிடம் சொல்லி விடுங்கள். கடைசிகாலத்தில் தீர்ப்பு கொடுக்க ஒன்றுமே இல்லை. "வா, மகளே! வா என்று கூறி அனைத்து முத்தமிடவேண்டும். "சரியா என்ன மௌனம்: முகம் சுருங்கி விட்டது ஆழ்ந்த சிந்தனையில்.

தெய்வம்: இனி நீ பேச கூப்பிட்டால், நான் போசித்து தான் வரவேண்டும். கடைசியில் எப்படி மடக்குகிறாய்.

நான்: கோவப்படாதீர்கள். தெய்வத்தை எப்படி கொள்ளை அடிக்க வேண்டுமென்று படித்து விட்டேன். "Iloveyou" கொஞ்ச சிரியுங்கள் "Bye i love you in my own special way" bye...

6. நெருங்கிய உறவு

 


6. நெருங்கிய உறவு

- Dr.M.அமலாவதி
Malarga Manitham Magazine - Jan 2020


ஆனந்தி: சீக்கிரம் வாங்க, ஒரு 'surprise' வைத்திருக்கிறேன்.

தெய்வம் : 'surprise' ஆ. அது எனக்கு ரொம்ப பிடிக்குமே.

ஆனந்தி: நான் ஒரு பாட்டு கட்டிட்டு வந்திருக்கேன். பாடட்டுமா?

தெய்வம்: உன் ராகத்தை கேட்டு வேறு எதுவும் வந்து விடாதே.

ஆனந்தி : ஏன், நீர் பிறக்கும் பொழுதே கழுதை, மாடு தானே இருந்தது. அவர்களும் வரட்டும்.

தெய்வம்: கோபம், மூக்கு முனையில் தான். சரி, பாடு.

ஆனந்தி : நீயே என் முதல் சுவாசம்,
நீயே என் கடைசி சுவாசம் நீயே என் காதலன் - நீயே என் அன்பு
தெய்வம் : ஆஹா, ஆஹா, பிரமாதம் பாடு...

ஆனந்தி : சுப்! பேசக்கூடாது.
நீயே என் சொத்து, நீயே எல்லாம் நீயே என் இரத்தம், நீயே என் சதை நீயே என் சக்தி, நீயே என் எல்லாம்
நீயே என் முதல் மூச்சு, நீயே என் கடைசி மூச்சு
நீயே என் காதலன், நீயே என் அன்பு நீயே என் அழகு, நீயே என் பார்வை நீயே என் ஆசை, நீயே என் சொத்து நீயே என் நினைவு, நீயே என் கனவு
நீயே என் முதல் மூச்சு, நீயே என் கடைசி மூச்சு
நீயே என் காதலன், நீயே என் அன்பு நீயே எனக்கு எல்லாம், நீயே என் நிறைவு நீயே நான், நானே நீ.... நாம் இரவரும் ஒன்று... ஒன்று... ஒன்று.
(பாடி சரிந்தாள் அவன் மடியில், வெட்கம் அவளை போர்வையாக பொத்தியது. அணைத்து முத்தம் கொடுத்தான் தலையில். அமைதி நிலவியது)

தெய்வம்: ஆமா என் அம்மாவைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே.

ஆனந்தி: அவர்கள் எனக்கு மாமியார் அல்லவா, கொஞ்சம் பயம்.

தெய்வம்: என்ன மாமியாரா? நீ மற்றவர்களை திருமணத்திற்கு தயார் செய்வதை உனக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன். "நீங்கள் ஒரு தாய் தந்தையை
விட்டு விட்டு அடுத்த தாய் தந்தையிடம் போகிறீர்கள். அதனால் அவர்களை அப்பா, அம்மா என்று கூப்பிட வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கும் பிள்ளை என்ற பாசம் உண்டாகும். மாமியார், மருமகள் என்றால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்வது கடினம் என்றெல்லாம் புத்தி சொல்லி விட்டு இப்பொழுது நீயே என் அம்மாவைப் பார்த்து மாமியார் என்று சொல்லுகிறாய்.

ஆனந்தி: Sorry!
என்னத்தான் மற்றவர்களுக்கு புத்தி சொன்னாலும் நமக்கு என்று வரும்பொழுது நம் தலையில் எழுதிவைத்தது தன் வருகிறது. சரி, சரி கோபம் வேண்டாம். உடனே பாடி விடுகிறேன்.
அம்மா நீ வாழ்க, அம்மா நீ வாழ்க தாயே நீ வாழ்க, தாயே நீ வாழ்க என் காதலனை பெற்ற தாயே நீ வாழ்க என் காதலனை எனக்கு கொடுத்த தாயே நீ வாழ்க
என் காதலனுக்கு தோல் கொடுத்த தாயே நீ வாழ்க என் காதலனை வளர்த்து எடுத்த தாயே நீ வாழ்க அம்மா நீ வாழ்க, அம்மா நீ வாழ்க தாயே நீ வாழ்க, தாயே நீ வாழ்க
போதுமா! சந்தோஷமா! அப்பா, அப்பா என்ன அன்பு. உன் அன்பு. தாயை நேசிக்க உன்னிடமிருந்து தான் படிக்க வேண்டும்.

தெய்வம்: உண்மை தான். தாய் தானே தன் இரத்தத்தால்
நமக்கு உடல் கொடுத்தவள். ஒவ்வொரு நிமிடமும் அவள் பட்ட துன்பத்தை நான் அவள் வயிற்றிலிருக்கும் பொழுதே உணர்ந்தேன். எத்தனை ஆசையோடு எனக்கு உடை செய்தாள் தெரியுமா? அவள் கனவே நானாக இருந்தேன். அவளுடைய ஒவ்வொரு சிந்தனையும் நானாக இருந்தேன். அவளுடைய ஒவ்வொரு சுவாசமும், என் சுவாசமாக இருந்தது. அவளுடைய ஒவ்வொரு இரத்ததுடிப்பும் (Pulse) என் பல்சாக இருந்தது. சதையும் இரத்தமும் ஒன்றாக இருக்கும் பொழுது எப்படி தாயை அன்பு செய்யாமல் இருக்க முடியும்?

ஆனந்தி: நான் என் அம்மாவுக்கு
கொடுத்த துன்பத்தை விட நீங்கள் உங்கள் அம்மாவுக்கு ரொம்பதுன்பத்தை கொடுத்தீர்கள். எனக்குத் தெரியும்.
தெய்வம்: என்னை குற்றம் சொல்லுகிற ஒரே ஆள் நீ தான். என்னுடைய அம்மாவை நான் எப்படி கஷ்டப்படுத்தினேன்?

ஆனந்தி: கடைசி மாதம், கழுதையின் மேல் ஏறி எவ்வளவு துரம் போனார்கள். அப்பா நடந்தே சென்றார்கள். இடம் கிடைக்காமல், அவர்கள் மனம் எப்படி துன்பம் பட்டது. தன்னுடைய அக்கா எலுசபெத் குழந்தையோடு இருக்கிறாள் என்று எப்படி ஓடி உதவி செய்தால். இங்கு உதவ கையில்லாமல் எப்படி மனசு நொந்துபோய் இருந்திருப்பார்கள்.

தெய்வம்: இதை உணர்ந்து என்
தந்தை எத்தனை பேரை கீழே இறங்கி விட்டு, பாடி மகிழ்வித்தார்கள் தெரியுமா. ஆன்மாவிற்கு உடல் கொடுக்க வரும் பொழுது எல்லா தாய்யும், பிள்ளைகளும் அவருக்கு சமம் தான்.

ஆனந்தி : சரி, சரி, கோபம் வேண்டாம்.
உங்களுக்கு பிறந்த நாள் அன்று நான் அதிகமாக நன்றி கூறுவது என் அம்மாவிக்கே அவர் இல்லை என்றால், நீங்கள் வந்திருக்க முடியுமா?

தெய்வம் என் தாயை அன்பு செய்யும் பொழுது. அது என்னை அதிகமாக சந்தோஷப்படுத்துகிறது. அதனால் தான் என் தாயை உன்னிடம் கொடுத்து சென்றேன். என் தாயை அதிகமாக அன்பு செய்வதால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை. தாய் இல்லாமல் சேய் இல்லை. சேய் இல்லாமல் தாய் இல்ல வா! நாம் இருவரும் தாய்யிடம், உடல் கொடுத்த தாயே நீ வாழ்க! தந்தைக்கு 'ஆம்' என்று கூறி விண்ணகத்தை மகிழ்வித்த தாயே நீ வாழ்க. நன்றி! நன்றி!! நன்றி!!!. என்று கூறுவோம்.
திருக்குடும்பம் ஒன்றாக மகிழ்ந்தது.

மனித பிரபஞ்ச சக்தி தியானம்

 அன்புள்ள சகோதர சகோதரிகளே நமஸ்தே! நாம் அனைவரும் உடல் அளவிலும் மன அளவிலும் ஆன்ம அளவிலும்  நலமாக இருக்கிறோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டுகி...