Friday, September 3, 2021

6. நெருங்கிய உறவு

 


6. நெருங்கிய உறவு

- Dr.M.அமலாவதி
Malarga Manitham Magazine - Jan 2020


ஆனந்தி: சீக்கிரம் வாங்க, ஒரு 'surprise' வைத்திருக்கிறேன்.

தெய்வம் : 'surprise' ஆ. அது எனக்கு ரொம்ப பிடிக்குமே.

ஆனந்தி: நான் ஒரு பாட்டு கட்டிட்டு வந்திருக்கேன். பாடட்டுமா?

தெய்வம்: உன் ராகத்தை கேட்டு வேறு எதுவும் வந்து விடாதே.

ஆனந்தி : ஏன், நீர் பிறக்கும் பொழுதே கழுதை, மாடு தானே இருந்தது. அவர்களும் வரட்டும்.

தெய்வம்: கோபம், மூக்கு முனையில் தான். சரி, பாடு.

ஆனந்தி : நீயே என் முதல் சுவாசம்,
நீயே என் கடைசி சுவாசம் நீயே என் காதலன் - நீயே என் அன்பு
தெய்வம் : ஆஹா, ஆஹா, பிரமாதம் பாடு...

ஆனந்தி : சுப்! பேசக்கூடாது.
நீயே என் சொத்து, நீயே எல்லாம் நீயே என் இரத்தம், நீயே என் சதை நீயே என் சக்தி, நீயே என் எல்லாம்
நீயே என் முதல் மூச்சு, நீயே என் கடைசி மூச்சு
நீயே என் காதலன், நீயே என் அன்பு நீயே என் அழகு, நீயே என் பார்வை நீயே என் ஆசை, நீயே என் சொத்து நீயே என் நினைவு, நீயே என் கனவு
நீயே என் முதல் மூச்சு, நீயே என் கடைசி மூச்சு
நீயே என் காதலன், நீயே என் அன்பு நீயே எனக்கு எல்லாம், நீயே என் நிறைவு நீயே நான், நானே நீ.... நாம் இரவரும் ஒன்று... ஒன்று... ஒன்று.
(பாடி சரிந்தாள் அவன் மடியில், வெட்கம் அவளை போர்வையாக பொத்தியது. அணைத்து முத்தம் கொடுத்தான் தலையில். அமைதி நிலவியது)

தெய்வம்: ஆமா என் அம்மாவைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே.

ஆனந்தி: அவர்கள் எனக்கு மாமியார் அல்லவா, கொஞ்சம் பயம்.

தெய்வம்: என்ன மாமியாரா? நீ மற்றவர்களை திருமணத்திற்கு தயார் செய்வதை உனக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன். "நீங்கள் ஒரு தாய் தந்தையை
விட்டு விட்டு அடுத்த தாய் தந்தையிடம் போகிறீர்கள். அதனால் அவர்களை அப்பா, அம்மா என்று கூப்பிட வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கும் பிள்ளை என்ற பாசம் உண்டாகும். மாமியார், மருமகள் என்றால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்வது கடினம் என்றெல்லாம் புத்தி சொல்லி விட்டு இப்பொழுது நீயே என் அம்மாவைப் பார்த்து மாமியார் என்று சொல்லுகிறாய்.

ஆனந்தி: Sorry!
என்னத்தான் மற்றவர்களுக்கு புத்தி சொன்னாலும் நமக்கு என்று வரும்பொழுது நம் தலையில் எழுதிவைத்தது தன் வருகிறது. சரி, சரி கோபம் வேண்டாம். உடனே பாடி விடுகிறேன்.
அம்மா நீ வாழ்க, அம்மா நீ வாழ்க தாயே நீ வாழ்க, தாயே நீ வாழ்க என் காதலனை பெற்ற தாயே நீ வாழ்க என் காதலனை எனக்கு கொடுத்த தாயே நீ வாழ்க
என் காதலனுக்கு தோல் கொடுத்த தாயே நீ வாழ்க என் காதலனை வளர்த்து எடுத்த தாயே நீ வாழ்க அம்மா நீ வாழ்க, அம்மா நீ வாழ்க தாயே நீ வாழ்க, தாயே நீ வாழ்க
போதுமா! சந்தோஷமா! அப்பா, அப்பா என்ன அன்பு. உன் அன்பு. தாயை நேசிக்க உன்னிடமிருந்து தான் படிக்க வேண்டும்.

தெய்வம்: உண்மை தான். தாய் தானே தன் இரத்தத்தால்
நமக்கு உடல் கொடுத்தவள். ஒவ்வொரு நிமிடமும் அவள் பட்ட துன்பத்தை நான் அவள் வயிற்றிலிருக்கும் பொழுதே உணர்ந்தேன். எத்தனை ஆசையோடு எனக்கு உடை செய்தாள் தெரியுமா? அவள் கனவே நானாக இருந்தேன். அவளுடைய ஒவ்வொரு சிந்தனையும் நானாக இருந்தேன். அவளுடைய ஒவ்வொரு சுவாசமும், என் சுவாசமாக இருந்தது. அவளுடைய ஒவ்வொரு இரத்ததுடிப்பும் (Pulse) என் பல்சாக இருந்தது. சதையும் இரத்தமும் ஒன்றாக இருக்கும் பொழுது எப்படி தாயை அன்பு செய்யாமல் இருக்க முடியும்?

ஆனந்தி: நான் என் அம்மாவுக்கு
கொடுத்த துன்பத்தை விட நீங்கள் உங்கள் அம்மாவுக்கு ரொம்பதுன்பத்தை கொடுத்தீர்கள். எனக்குத் தெரியும்.
தெய்வம்: என்னை குற்றம் சொல்லுகிற ஒரே ஆள் நீ தான். என்னுடைய அம்மாவை நான் எப்படி கஷ்டப்படுத்தினேன்?

ஆனந்தி: கடைசி மாதம், கழுதையின் மேல் ஏறி எவ்வளவு துரம் போனார்கள். அப்பா நடந்தே சென்றார்கள். இடம் கிடைக்காமல், அவர்கள் மனம் எப்படி துன்பம் பட்டது. தன்னுடைய அக்கா எலுசபெத் குழந்தையோடு இருக்கிறாள் என்று எப்படி ஓடி உதவி செய்தால். இங்கு உதவ கையில்லாமல் எப்படி மனசு நொந்துபோய் இருந்திருப்பார்கள்.

தெய்வம்: இதை உணர்ந்து என்
தந்தை எத்தனை பேரை கீழே இறங்கி விட்டு, பாடி மகிழ்வித்தார்கள் தெரியுமா. ஆன்மாவிற்கு உடல் கொடுக்க வரும் பொழுது எல்லா தாய்யும், பிள்ளைகளும் அவருக்கு சமம் தான்.

ஆனந்தி : சரி, சரி, கோபம் வேண்டாம்.
உங்களுக்கு பிறந்த நாள் அன்று நான் அதிகமாக நன்றி கூறுவது என் அம்மாவிக்கே அவர் இல்லை என்றால், நீங்கள் வந்திருக்க முடியுமா?

தெய்வம் என் தாயை அன்பு செய்யும் பொழுது. அது என்னை அதிகமாக சந்தோஷப்படுத்துகிறது. அதனால் தான் என் தாயை உன்னிடம் கொடுத்து சென்றேன். என் தாயை அதிகமாக அன்பு செய்வதால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை. தாய் இல்லாமல் சேய் இல்லை. சேய் இல்லாமல் தாய் இல்ல வா! நாம் இருவரும் தாய்யிடம், உடல் கொடுத்த தாயே நீ வாழ்க! தந்தைக்கு 'ஆம்' என்று கூறி விண்ணகத்தை மகிழ்வித்த தாயே நீ வாழ்க. நன்றி! நன்றி!! நன்றி!!!. என்று கூறுவோம்.
திருக்குடும்பம் ஒன்றாக மகிழ்ந்தது.

No comments:

Post a Comment

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...