Friday, September 3, 2021

1. நெருங்கிய உறவு

 1. நெருங்கிய உறவு

- Dr.M.அமலாவதி
Malarga Manitham Magazine - Sep 2019

நான்: தெய்வமே! வா என்னோடு கொஞ்சம் இரு. எனக்கு ஒரு காரியம் பேச வேண்டும். நல்ல கவனிக்க வேண்டும். சிரிக்கக் கூடாது. சரியா?

தெய்வம்: "உம்"

நான்: தெய்வமே! எல்லாரும் உனக்கு பால், நெய், பூ கொண்டு ஸ்பெஷல் அபிஷேகம் செய்கிறார்கள். அது பெரிய காரியம் என்று நானும் செய்தேன். இப்பொழுது திரும்பிப் பார்க்கும் பொழுது சிரிப்பு வருது. நீ சிரிக்காதே. அது ஒரு குழந்தை விளையாட்டு என்று வைத்துக் கொள். இப்பொழுது யாரும் உன்னிடம் சொல்லாத விஷயத்தை நான் சொல்ல வேண்டுமென்று நினைத்து சிந்தித்து பார்த்தேன். தலைவலி வந்து விட்டது. ஒரு காலத்தில் மக்கள், உனக்கு நன்றி சொல்ல மறந்து விட்டார்கள். இப்பொழுது கொஞ்சம் படித்து விட்டார்கள். அதனால் நன்றி சொல்லுகிறார்கள். அப்படினா ஒன்றுமே இல்லை. பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. நீ என்னை கொஞ்சம் பாரு. நான் உன்னைபார்க்கின்றேன். கொஞ்ச நேரம் மெளனமாகப் பார்ப்போமா?

தெய்வம்: சரி.

நான்: தெய்வமே! என் மனசுக்குள்ள ஒரு பாட்டு பாடுது. கண்ணும் "கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுது, எண்ணும் போதே உள்ளம் பந்தாடுது." ஐய்யோ! இது யாரோ பாடிய பாட்டு, பார்த்தியா தெய்வமே, சொந்தமாக கூட ஒரு பாட்டு பாட தெரியவில்லை. அப்படினா என்ன செய்ய சொல்லுகிறாய்? அப்படினா நீ ஒரு பாட்டு பாடு,நான் கேட்கிறேன்.

தெய்வம்: சரி! I Love you, I Love you ... I.. Love... you

நான்: தெய்வமே! போதும். இதைத்தான் நீ எல்லோரிடமும் சொல்லுகிறாய். இப்படியே சொல்லி ஏமாற்றுகிறாய். எனக்கு மட்டும் ஒரு பாட்டு பாடு.

தெய்வம்: *"I Love you in a special Way",

நான்: தெய்வமே! என்னை ஒன்றும்.
ஏமாற்ற வேண்டாம். நீ இப்படி பல பேரிடம் சொல்லி இருக்கின்றாய் என்று, எனக்கு தெரியும். உன்னிடம் இருவதற்கும் ஒன்றுமில்லை, காரணம் நான் பேசுவதற்கு முன்பே என் எண்ணங்களை நீ அறிவாய். கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை. எல்லாம் நீ தந்தது. அப்படி செய்தால், கள்ளைக்கு நீ சொல்லுவாய் "நான் படைத்தேன், யாரோ தண்ணீர் ஊற்றி வளர்த்து, கஷ்டப்பட்டு பறித்துக் கொண்டு வந்தது, நீ என்னிடம் பணமிருக்கிறது என்று காட்ட வாங்கிக் கொண்டு வந்து எல்லாருக்கும் முன்பு தட்டில் கொண்டு வந்து பெருமையாக தந்தாய்" என்று இப்பொழுது நானும் அடிபட்டு, படித்து விட்டேன். அதனால் நீ படைத்ததை என்றும் நான் திருப்பி உனக்கு தரவில்லை. அதுவும் என் திருப்திக்காக, சந்தோஷத்திற்காக என்று நான் புரிந்து கொண்டேன். அப்படியென்றால், உன்னை சந்தோஷப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்? நீ சொல், நான் செய்கிறேன்.

தெய்வம்: இரு! நான் இஷ்டப்படவது ஒரே ஒரு காரியம். நீ பூமிக்கு வரும் பொழுது என் தந்தையோடு என்ன ஒப்புரவு செய்து வந்தாயோ, அதை செய்ய வேண்டும். அதுவும் என் தந்தை உனக்குக் கொடுத்த காலகட்டத்தில் செய்து முடிக்க வேண்டும். என்ன முகம் மாறி விட்டது...

நான்: எனக்குத் தெரியும். உன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தால் இப்படித்தான் ஒரு "பெரிய குண்டு" போடுவாய் என்று. எங்களையும் புரிந்து கொள். கொஞ்சம் உன்னிடம் வாதாடி ஒரு. பிரயோஜனமும் கிடையாது. அப்படினா! நான் ஒன்று கூறுகின்றேன். நீ செய். என் “ஒட்பந்தம்” என்னவென்று எனக்கு தெரியும். அதை செய்து முடிப்பது என்னவென்றால், "சுதந்திரம்" என்று கொடுத்து "Yes or No" என்று பதில் கொடு என்று இனி அது வேண்டாம். எல்லாவற்றிற்கும் ஒட்டுமொத்தமாக "Yes" என்று இப்பொழுதே சொல்லி விடுகிறேன். செய்ய வைக்க வேண்டியது உன் பொறுப்பு. சரியா. நான் கொஞ்சம் திமிர் பிடித்தவன் என்று உனக்குத் தெரியுமல்லவா? மண்டையில் ஒரு கொட்டு கொடுத்து செய்ய வைப்பது உன் பொறுப்பு (வலிக்காமல் கொட்டு) சிலசமயம் காது இருந்தும் காது கேட்காத செவிடனாக, பேசிக்கிட்டிருப்பேன். "TV" அல்லது "Cell" பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பொழுது நீ என் கண்களை கட்டி விடு. (கொஞ்ச நேரத்திற்கு இதுதான் என்று என் கண் பார்வையை எடுத்து விடாதே) சில நேரம் வேண்டவே வேண்டாம் என்று முரண்டு பிடிப்பேன். செல்லமாக ஒரு அடி கொடு. இருத்தி அடித்தால் தாங்க முடியாது. அப்புறம் ஓங்கி ஓங்கி அழுவேன். பிறகு நீ தான் வந்து சமரசம் பண்ண வேண்டியிருக்கும். சிலசமயம் என் ஆன்மீக காது கேட்காது. காரணம் எல்லா எதிர்மறை சிந்தனைகளை, சிந்தித்தோ, மற்றவர்கள் சொல்வதை கேட்டோ, அது தன் காதை பஞ்சு வைத்து அடைத்துக் கொள்கிறது. நீ தான் சுத்தமாக வைத்துக் கொள். உன் பேச்சைக் கேட்டு தெளிவு அடையும் மட்டும் கொஞ்சம் மறுபடியும் மறுபடியும் சொல்ல வேண்டும். சரியா?
இப்பொழுது நல்ல கவனமாக கேட்க
வேண்டும். யாரும் கேட்காத ஒன்றை நான் கேட்கப் போகிறேன். 'அப்பாவா'.....

தெய்வம்: என்ன! திரும்பச் சொல்லு. நான்: "அப்பாவை மெல்ல கூட்டிக் கொண்டு வந்து என் புத்தியில் ஒட்ட வைத்து விடு, அப்படியென்றால் என் புத்தி, அவர் புத்தியாகி விடும். அவர் புத்தி என் புத்தியாகி விடும். அப்படியென்றால் நான் ஒழுங்காக செய்து முடித்து விடுவேன். அப்பாவும் சரியான "Command" கொடுப்பார்கள். என் உடல் செய்து முடித்து விடும். சரியா.

தெய்வம்: ஆஹா... ஆஹா... ஆஹா... நான்: சிரித்தது போதும். எனக்கு கோபம் வருகிறது.

தெய்வம்: இதை எங்கிருந்து பிடித்தாய்? யார் இதைச் சொல்லிக் கொடுத்தார்?

நான்: உனக்குத் தெரியாது தெய்வமே. இது "Computer" உலகம். அவர் பெரிய programme யை உள்ளே வைத்து விட்டு அதற்கு ஒரு short cut desk- top ல் வைப்பார்கள். அதுபோல பெரிய agreement உள்ளே இருக்கட்டும். Short cut என் புத்தியில் இருக்கட்டும். அவ்வளவு தான். அப்பாவை கூப்பிட்டேன் என்று நீ கோபித்துக் கொள்ளாதே. நீ என் இதயத்தில் இரு. அப்பா புத்தியில் பின்னே எனக்கு என்ன கவலை. சொன்னதை செய்து விட்டு சமாதானமாக படுத்து தூங்குவேன் சரியா.

தெய்வம் : ரொம்ப கெட்டிகாரியாகி விட்டாய்.

நான் : புத்தியும் நீ தந்தது தானே. "சிந்தனை” என்னுடையது மற்றொரு காரியமும் சொல்லவேண்டும். நல்ல
கேட்டுக்கோ. அப்பாவை கூட்டிக்கொண்டு வரும்பொழுது ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். தெய்வம் : அப்பாவிடம் நான் ஒப்பந்தம்
செய்யவேண்டுமா எதற்கு?

நான் : அதுதானே சொல்ல. போகிறேன். சரியாக கேட்டுக்கொள் நான் சாகும்பொழுது "அப்பா என்னிடம் நீ அது செய்யவில்லை. இப்படி செய்தாய். என் திட்டம் போல நீ செய்யவில்லை என்று என்னை குற்றம. சொல்ல கூடாது. அப்படின்னா நான் சொல்வேன். அந்த குற்றத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு. ஏன் நீங்கள் செய்யவைக்கவில்லை. நான் தான் என் சுதந்திரத்தை உங்களிடம் கொடுத்து விட்டேனே செய்யவைக்க வேண்டியது உங்கள் பொறுப்புத்தானே அப்படினா" அந்த குற்றத்திற்க நீங்கள் தான் பொறுப்பு என்று நான் சொல்வேன். சரியா யாரும் கேட்காததை நான் கேட்க வேண்டுமென்று நினைத்தேன் இப்பொழுது கேட்டு விட்டேன். அதனால் இப்பொழுதே தெளிவாக அப்பாவிடம் சொல்லி விடுங்கள். கடைசிகாலத்தில் தீர்ப்பு கொடுக்க ஒன்றுமே இல்லை. "வா, மகளே! வா என்று கூறி அனைத்து முத்தமிடவேண்டும். "சரியா என்ன மௌனம்: முகம் சுருங்கி விட்டது ஆழ்ந்த சிந்தனையில்.

தெய்வம்: இனி நீ பேச கூப்பிட்டால், நான் போசித்து தான் வரவேண்டும். கடைசியில் எப்படி மடக்குகிறாய்.

நான்: கோவப்படாதீர்கள். தெய்வத்தை எப்படி கொள்ளை அடிக்க வேண்டுமென்று படித்து விட்டேன். "Iloveyou" கொஞ்ச சிரியுங்கள் "Bye i love you in my own special way" bye...

No comments:

Post a Comment

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...