Saturday, October 15, 2022

பகிர்வு

 பகிர்வு


நமஸ்தே!


நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த இதழின் மூலம் மீண்டும் உங்களை சந்திப்பதற்கு நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். (Holistic Drugless Therapy) மருந்தில்லாச்சிகிச்சை பற்றிய ஒரு படிப்பு. இந்த படிப்பை படிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு முதலில் நன்றி கூறி தொடங்குகிறேன்.


இந்த வகுப்பில் என்னை இன்னும் செதுக்குவதற்காக, அதாவது என்னிடம் உள்ள வேண்டாத எண்ணங்கள், தேவையில்லாத சிந்தனைகளைக்களை எடுப்பதற்கு மிகப்பெரும் உதவியாக இருந்தது. ஏனோதானோ என்று இருந்த என் வாழ்க்கையைப் பொறுப்புணர்வோடு, கடமையுணர்வோடு இது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து, என் தன்னம்பிக்கையிலும் கூட ஒரு மாற்றத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. எது எப்படி எங்கு எந்த நேரத்தில் கிடைக்க வேண்டுமோ அதைச் சரியான காலகட்டத்தில் எனக்கு கொடுத்து வாழ்வின் அர்த்தங்களைப் புரிய வைத்திருக்கிறது. வாழ்ர்ானயைத் திருப்பிப் போட்டிருக்கிறது.


இத்துடன் நின்று போகவில்லை. நான் உண்ணும் உணவிலும் மிகப் பெரிய மாற்றத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது இந்த படிப்பு.


நாம் உண்ணும் உணவை இரண்டாகப் பிரிப்போம். 1.சைவம் 2. அசைவம். ஆனால் உணவில் நான்கு வகை இருக்கிறது.அவை


1. உயிருள்ள உணவு

உயிர் ஊட்டப்பட்ட உணவு 3. செத்த உணவு


4. சாகடிக்கப்பட்ட உணவு


1.உயிருள்ள உணவு என்பது அனைத்து பச்சை காய்கறிகள், கீரை வகைகள் கிழங்கு வகைகள். 2. உயிர் ஊட்டப்பட்ட உணவு என்பது முளைக்கட்டிய பயிர் வகைகள் 3. செத்த உணவு என்பது ஆடு, கோழி, மீன் போன்ற அனைத்து மாமிச உணவும்.


4. சாகடிக்கப்பட்ட உணவு ஊறுகாய் போன்றவை.


இந்த உணவு முறையே எதை உண்ண வேண்டும் எதைத் தவிர்க்க வேண்டும் என தெளிவாக நமக்குச்


சுட்டிக்காட்டுகிறது.


உயிருள்ள உணவு, பச்சை காய்சுறி களை உண்பது என்பதை விட எப்படி உண்பது என்பது மிக முக்கியம். வாயில் நன்கு பென்று கூழ் போல் ஆக்கி உமிழ்நீருடன் கலந்து விழுங்க வேண்டும். செரிமானமும் சரியாக நடக்கும்.


நாம் என்ன காய்கறிகள் பயன்படுத்து கிறோபோ அந்த காய்கறிகளை முதலில் தண்ணீரில் போட்டு சிறிது மஞ்சள் தூள், உப்பு போட்டு, ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு நல்ல தண்ணீரில் விட்டு கழுவி காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள நச்சுப் பொருட்கள், பூச்சிக் கொல்வி பருந்து இவை அனைத்துப் வெளியேறி விடும்.


1.பீட்ருட் சூஸ்: பீட்ருட்டைச் சிறியதாக வெட்டி நன்றாக


மிக்ஸில் அரைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய்பால் எடுத்து ஏலக்காய் பொடித்து கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து குடித்தால் ரத்தத்தின் அளவு கூடும்.


2.


உடல் பருமன் குறைய: தேங்காய் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என்று என் பக்கத்து வீட்டில் உள்ள தோழியிடம் கூறினேன்.உடனே அவர் சாப்பாட்டிற்கு முன்னாடியா, பின்னாடியா என்று கேட்டார். சாப்பாட்டிற்கு முன்னும் இல்லை, பின்னும் இல்லை. சாப்பாடே இதுதான் என்றேன். ஆம் நண்பர்களே மூன்று வேளையும் பெருமளவு தேங்காய் 2 வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.


3. காய்கறிகள் சாலட் முளைக் கட்டிய பாசிபயறு, தக்காளி, வெங்காயம்,வெள்ளாரி வெண்டைக்காய் மிளகு தூள் உப்பு தூவி சாப்பிட்டுப் பாருங்கள்.


4. கறிவேப்பிலை சூப்: கறிவேப்பிலையை உருவாமல் குச்சியோடு தேவையான கண்ணி வீட்டு நன்கு கொதிக்க விட்டு நீரை மட்டும் குடித்துப் பாருங்கள்.


5.வெண்டைக்காய் சூப்: வெட்டிய வெண்டைக்காய், பூண்டு, சீரகம், மிளகுத்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.வெண்டைக்காய் நசுக்கி விடவும்.சுவையான சூப்பை வெண்டைகாயோடு அருந்திதான் பாருங்களேன்.


6. வேர்க்கடலை: வேர்க்கடலை10 எடுத்து 5 நாள் ஊற வைத்து,ஒவ்வொரு நாளும் நீரை மாற்ற வேண்டும். 5நாள் கழித்து வேர்க்கடலை சிறியதாக முளை விட்டு இருக்கும். அதை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய்க்கு குட்பை சொல்லி விடலாம்.


7.உளுந்தங்கஞ்சி: தோல் உளுந்து 20கிராம் வேர்கடலை-3 தேக்கரண்டி, வெள்ளை எள் 3தேக்கரண்டி. பாசிபருப்பு 3தேக்கரண்டி, புழுங்கலரிசி-3 தேக்கரண்டி, சுக்கு-பெரியதுண்டு, பனைவெல்லம் - 3தேக்கரண்டி, தேங்காய்-துருவியது.


செய்முறை:பனைவெல்லம், தேங்காய் தவிர மீதம் உள்ள அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து ஒன்றாகப் போட்டு மிக்ஸியில் பொடியாக அரைத்து கொதிக்கும் நீரில் போட்டு கிளறி, கடைசியாகப் பனைவெல்லம் தேங்காய் சேர்த்து கிளறிச் சூடாக பரிமாற சுவையாக இருக்கும், இது பெண்களுக்கு இடுப்பு சம்பந்தமான அனைத்து வலிகளுக்கும் நல்லது.


மேலே கூறிய அனைத்து உணவு வகைகளும் Drugless Therapy - வகுப்பில் ஒவ்வொரு நாளும் உணவாக கொடுக்கப்பட்டது. இப்படியாக எண்ணத்திலும், உண்ணும் உணவிலும் அதிரடி மாற்றத்தையே கொண்டு வரமுடிந்தது.


இப்படி ஒரு நல்ல வாய்ப்பினைக் கொடுத்த எங்கள் குரு டாக்டர் அமலாவதி அவர்களுக்கும், எங்களுக்கு உறுதுணையாக நின்று உதவிய நண்பர் ராமன் அவர்களுக்கும் மாணவர்கள் சார்பில் நன்றியை உரித்தாக்குகிறேன்.


நன்றி! வணக்கம்!!.


மா. விமலா ( லால்குடி )

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...