Friday, September 3, 2021

3. நெருங்கிய உறவு

 3. நெருங்கிய உறவு

- Dr.M.அமலாவதி
Malarga Manitham Magazine - Nov 2020

தெய்வம்: என்ன முகம் வாடியிருக்கிறது. வலியா, வேதனையா, அழுகையா? நான்: ஒன்றுமில்லை...

தெய்வம்: சும்மா சொல், என்னிடம் சொல்லவில்லை என்றால், யாரிடம் சொல்வாய்.

நான் : உங்களிடம் சொன்னால், உனக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், அடிவாங்கினேன், இரத்தம் சிந்தினேன், எனக்காக இதை தாங்க முடிய வில்லையா என்று சொல்வீர்கள்.

தெய்வம்:ஒ இவ்வளவு கோபமா வா! உன் தலையை என் மடியில் வை. சாந்தப்படு.

நான்: கண்ணீர் வடிய ஆரம்பித்தது. தெய்வம்: என்ன! அழுகையா?

நான்: உம்.

தெய்வம்: மன வேதனையின் காரணமென்ன? என்ன வேண்டும் சொல். நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். கேள். நான்: என் வேதனைகள் தாங்கிக் கொள்ள எனக்கு சக்தியாக, பலமாக நீ இருக்க வேண்டும்.

தெய்வம்: அவ்வளவு தானே. "உன் பலவீனத்தில் என் பலம் தாங்கி நிற்கும்." என்ன உடல் வேதனையா? மன வேதனையா?

நான்: உடல் வேதனை, மன வேதனை, தலை வேதனை எல்லா துன்பத்திலும் கஷ்டத்திலும், நஷ்டத்திலும் நீ என் ‘சக்தி'யாக இருக்க வேண்டும்.

தெய்வம்: ஒ இவ்வளவு தானே. உடனே செய்வேன். என் தூதர்கள் உனக்கு சக்தி தருவார்கள்.

நான்: உன் காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பதால் அழ கூட பயமாக இருக்கிறது. சொல்லி புலம்ப கூட ஒரு இடமில்லை. உடனே “"Report” போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது.

தெய்வம்: நீ நினைப்பது போல அவர்கள் ஒன்றும் "Watch Man" | இல்லை. "Report" கொடுக்க. நீ துன்பத்திலிருக்கும் போது. அவர்கள் அருகிலிருந்து உன் துடைத்து விட்டு உன்னை சிரிக்க வைப்பார்கள். கண்ணீரை உனக்கு பிடித்த பாடல்களை பாடுவார்கள். உனக்கு. துணையாக இருப்பார்கள். நீ மனம் வருந்துவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். எப்படியாவது உன்னை சிரிக்க வைப்பார்கள். நீ நினைப்பது போல "Report" கொடுப்பதற்கு அல்ல, அவர்கள் உன்னோடு இருப்பது. உன்னை வழிநடத்த, துன்பங்கள் வராமல் தடுக்க, எந்த நேரத்தில், யாரோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும். எப்பொழுது பேச வேண்டும். எப்பொழுது மௌனமாக இருக்க வேண்டுமென்று அவர்கள் உனக்கு சொல்லித் தருவார்கள். அப்படியே நீ செய்தால், துன்பம், வருத்தம் ஏது.

நான்: அப்படி என்றால் நான் அவர்கள் சொல்லுவதைப் போல செய்யவில்லை. அதனால் தான் துன்பம் என்று சொல்ல வாரீர்களா?

தெய்வம்: உண்மை தான். நீ அவர்களை காவல்காரர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இல்லை என்றால் தெய்வத்திடம் 'கோள்' சொல்லுபவர்கள் என்று நீ அவர்களை ஒதுக்கியதால் ஏற்பட்ட துன்பமே இது.

இனி நான் சொல்வதுப் போல நீ செய். அவர்கள் உன்னுடைய |நெருங்கிய நண்பர்கள். உன்னையும், என்னையும் சேர்த்து கட்டும் ஓர் நூல் என்று நினைத்துக் கொள். என் சிந்தனையை உடனே வாங்கி உனக்கு தருவார்கள். அவர்கள் சொல்வதை உடனே நீ செய்ய வேண்டும். ஏன், எதற்கு? இப்படி செய்தால் என்ன. அப்படி போனால் என்ன என்று கேள்வி கேட்டு நூலை 1 அறுத்து விடுகிறாய். பின் தேம்பி அழுது கொண்டிருக்கும் பொழுது. தெய்வமே காப்பாற்று என்று கூறும் பொழுதும், உடனே இவர்கள் வந்து அறுபட்ட நூலைச் சேர்த்து ஒரு முடிச்சு போட்டு விடுவார்கள். பின் நீ சந்தோஷமாக இருப்பாய். கொஞ்ச நாட்கள் அப்படியே போகும் பொழுது, திரும்பவும் சேட்டை பண்ணி நூலை அறுத்து விடுவாய். பின் அழுது கொண்டு சக்தி தா என்பாய். திரும்பவும் இவர்கள் நூலைக் கட்டி. உனக்கும், எனக்கும் உறவை ஏற்படுத்துவார்கள். இதுதான் இவர்கள் செய்வது. ஒரு பாலமாக இருப்பார்கள்.

நான்: இவர்கள் தெய்வமாக இருப்பார்கள் தானே. ஏன் கயிறு அறுந்து விடாமல் செய்ய வேண்டியது தானே, அப்பொழுது எனக்கு கஷ்டம், துன்பமில்லை. சொல்லுங்கள். அதை செய்ய

தெய்வம்: அதைத்தான் அவர்கள்செய்ய முயற்சி செய்கிறார்கள். நீ உன் பிடிவாதத்திலும், பெருமையில் எனக்கு எல்லாம் உன் தெரியும். நீ ஒன்றும் சொல்லி. தரவேண்டும். நான் படித்தவள், கெட்டிக்காரி என்று
உன் கெட்டிக்காரத்தனத்தை காட்ட அறந்து விடுகிறாய். ஒவ்வொரு முறை நீ அறந்துவிடும் பொழுது அவர்கள் எவ்வளவு மனவேதனை அடைகிறார்கள் என்று உனக்கு தெரியுமா?

நான் ஒன்று சொல்லுகிறேன் நீ கேட்பாயா? நான் விரும்பாத குணம் பெருமை" பெருமையை காட்டி, உன் முன்னோர்கள் என்னை விட்டு விலகியது போல நீயும் போய் விடுவாயோ என்று நான் பயப்படுகின்றேன்.
இரண்டாவது உன் காவல்தூதர்கள், சொல்லுவதை நீ கேட்காமல், உறவு பாலத்தை வெட்டி விட்டு என்னை விட்டு பிரிந்து போய், சுற்றி அலைவாயோ என்ற பயம் என்னிடம் உண்டு, எது செய்தாலும் அவர்களிடம் கேட்டு, அவர்கள் சொல்வதற்கு நீ கீழ்படிந்து நடந்தால் உறவு பாலம் பலப்படும். பின் ஏன் துன்பம், வருத்தம், கவலை அவர்கள் சொல்வதை கேட்பதற்கு, நீ உண்மை உள்ளவனாக இருக்க வேண்டும் உன்னில் நீ உண்மை உள்ளவனாக இருக்க வேண்டும். உன்னில் நீ உண்மையோடிருந்தால் அவர்கள் சொல்வதைப் போல் செய்தால் நாம் இருவரும் சந்தோஷமாக இருக்கலாம்.
நான் கேட்பது எல்லாம் உன்னில் நீ உண்மையோடு சொல்வதை செய் (கீழ்படி) பெருமை வேண்டாம்.

நான்: இப்பொழுது நீங்கள் என்ன சொல்லவாரீர்கள். நான் பெருமைகாரி, சொல்வதை கேட்பதில்லை. பொய்காரி என்று சொல்ல வருகிறீர்களா?
எனக்கு கோபம் வருகிறது.

தெய்வம்: உன்னையும், என்னையும் கட்டிய இந்த நூலை அறுத்தது நீபா? இல்லை நானா? ஏன் அறுத்தாய், எப்பொழுது அறுத்தாய், எத்தனை நாட்கள் நான் இல்லாமல் என்னை வருத்தப்படுத்தி தொடர்ந்த நாட்கள் எத்தனை? கணக்குப்பார் அப்பொழுது உனக்கு புரியும்.

தெய்வம்: என்ன மௌனம் பேசு

நான்: என்னை குற்றப்படுத்தாதீர்கள். நான் மனுஷி தானே உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என்ன செய்வது? நீயும் வேண்டும், உலகமும் வேண்டும். உலகத்தில் வாழ பணம், பெயர், புகழ் வேண்டும். உன்னோடு வாழ புண்ணியம் வேண்டும். இதில் "Balance" பண்ணும் பொழுது கயிறு அறுந்து போகிறது. சிலசமயம் உலகம் கைமேல் கொடுக்கிறது. ஐய்யோ! இது வேண்டாமென்று விலகினால் நீ கை கொடுக்கிறாய். என்ன செய்வதென்று சிலசமயம் முழிக்கிறேன். தடுமாறுகிறேன். என்மேல் இரக்கமாய் இருங்கள் சாமி இரக்கமாய் இருங்கள்.

தெய்வம்: நீ எத்தனை முடிச்சு போட்டிருக்கிறாய் என்று நான் கணக்கு வைப்பது அல்ல. என்றும் காத்திருப்பேன். வந்த உடன் அந்த சந்தோஷத்தில் எல்லாம் மறந்து விடுவேன். நான் கேட்பது ஒன்றே ஒன்று. இனி நீ என்னை விட்டு விலகாதே. நான் தனிமையாகிறேன். நீ இல்லாமல் எனக்கு இன்பமில்லை, சந்தோஷமில்லை. நீ என்னோடு இருக்கும் இந்த இன்ப நேரத்தை விடவா உலகம் உனக்கு கொடுக்கப் போகிறது? நானே எல்லாம் 50/50 நீர்
பாதி நான் பாதி. இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி? நான் உனக்கு எல்லாமாக இருக்கும் பொழுது ஏன் என்னை விட்டு பிரிகின்றாய்?
எந்த நேரத்திலும் என்னை கூப்பிடு நான் ஓடி வருவேன். உன்னை ஆறுதல் படுத்துவேன். இரண்டு பேரும் சந்தோஷமாக ஜீவிக்கலாம். நான் கொடுக்காத எதை உலகம் கொடுக்கும்? எல்லாம் நான் கொடுத்தது தானே. என்னிடம் இல்லாதது எது? சொல்.

நான்: நான் ஒரு முட்டாள் என்று மட்டும் புரிந்து கொண்டேன். இனி உறவின் பாலத்தை அறுக்க மாட்டேன் என்று சொல்ல தைரியமில்லை. அறுக்கக் கூடாது என்று நினைக்கின்றேன். நான் பலவீனன். நான் கூப்பிட்டால் தான் வரவேண்டும் என்று காத்திருக்காமல் அறுக்க போகிறேன் என்று தெரிந்த உடன் ஓடிவந்து கயிறை பிடித்துக் கொள்ளுங்கள். நான் திமிர் பிடித்து அறுந்தாலும் உடனே முடிச்சு போட்டு விடுங்கள். அலைய விடாதீர்கள். நாட்கள் கடந்து போகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். என் பலவீனத்தில் உங்கள் “பலம்” கிடைக்கப்படும். கொஞ்சம், கொஞ்சமாக, முழுமையாக உங்களிடம் வந்து விடுவேன். அது மட்டும் என்னிடம் பொறுமையாக இருந்து விடுங்கள். என்னை விட்டு பிரிந்து விடாதீர்கள். உங்களுக்கு பாவிகளை பிடிக்குமல்லவா. அந்த
என்னை வைத்துக் கொள்ளுங்கள். நல்ல கள்ளனைப் போல எனக்கும் நல்ல மனசு உண்டு. என்னை எப்படியாவது நான் செய்ய வந்த காரியத்தை முடித்து விட்டு தந்தையோடு போய் சேர்த்து விடுங்கள். அது போதும் எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். கூட்டத்தில்
என்னை விட்டு பிரிந்து போக மாட்டேன் என்று வாக்கு கொடுங்கள். நான் எத்தனை பாவியாக இருந்தாலும் என் நல்ல உள்ளத்தைப் பார்த்து என்னை அன்பு செய்ய வேண்டும். நீயே என் கதி என்று அவர் காலில் விழுந்தேன்.

தெய்வம்: மகளே! எழும்பு நான் உன்னை முழுமையாக அன்பு செய்கிறேன். நீ இல்லாமல் என் அன்பு முழுமைப்படாது. எப்படி நான் உனக்கு வேண்டுமோ. அப்படி நீ எனக்கு வேண்டும். அன்பிலும், ஆனந்தத்திலும் என்னை அவர் தழுவிக் கொண்டார். நான் அவரை தழுவிக் கொண்டேன் இந்த அன்பு உறவுப் பாலத்தை பலப்படுத்தியது.

No comments:

Post a Comment

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...