Wednesday, November 12, 2025

முழுமையை நோக்கி....

முழுமையை நோக்கி....

டாக்டர். அமலாவதி
(MM. ARTICLE YEAR JUNE, 2002)


ஒரு காலக் கட்டத்தில் பெண்கள் கொடிகளை உயர்த்தி, நாங்கள் ஆண்களுக்கு சமம்; ஆண்களைப் போல எல்லா வேலைகளையும், ஏன் ஆண்களை விட மிக உயர்வாக, எங்களுக்கு வேலை செய்ய முடியும் என்று கூறி, எங்களுக்கும் உரிமை தர வேண்டும்; வேலைவாய்ப்பு வேண்டும் என்று அரசாங்கத் தினரிடமும், தனியாரிடமும் சம உரிமை கேட்டதுண்டு. அதன் பாக்கியம், பெண்கள் இன்று பேருந்து ஓட்டுகின்றார்கள், டிக்கட் கிழித்து கொடுக்கின்றார்கள். பெட்ரோல் பம்பில் நிற்கின்றார்கள். சுருக்கச் சொல்லின், பெண்கள் இல்லாத வேலை? இடம் ஏது? கலெக்டர் ஆபீஸிலிருந்து பஞ்சாயத்து முடிய பெண்கள் ஆட்சி தானே இன்று?

ஒருபுறம் பார்த்தால் இன்று பெண்கள் ஆண்களை நம்பி, வாழவில்லை. குடிகாரனை நம்பி வாழ்வதும் இல்லை. நான் சம்பாதிக்கிறேன். என் காலில் நிற்கிறேன். என் பணம், நான் என் இஷ்டத்திற்கு செலவு செய்வது என் உரிமை, என் சுதந்திரம். இதில் கணவனான நீ தலையிடக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு வந்து விட்டார்கள்.

இந்த நிலையில் பெண்கள் வளர்ந்து விட்டார்களா? இல்லை இழந்து விட்டார்களா? இழப்பு யாருக்கு?

வீட்டிற்கு ஒளியேற்றி லட்சுமி யாக இருக்கின்ற ஒரு பெண்ணை இன்றைய சமுதாயத்தில் காண்பது அரிதிலும் அரிதாகி விட்டது. பெண் ஓர் ஆணாகி விட்டாள். ஆண் ஒரு பெண்ணாக மாறவில்லையே. அதனால் குழந்தைகளுக்கு ஓர் அன்புத்தாய் வீட்டில் இல்லையே. இது எவ்வளவு பெரும் இழப்பு?? இதை அவர்களின் வாழ்க்கையில் ஈடு செய்ய முடியுமா? பணம் வந்து வசதிகளைக் கூட்டின. ஆனால் பணத்தைக் கொண்டு அன்பை எப்படி வாங்குவது?? எங்கு போய் வாங்கு வது என்று இன்று குழந்தைகள் தெருவில் அலைகின்றார்களே. இதை எப்படி ஈடு செய்வது???

படைத்தவர், ஆணையும் ஒரு பெண்ணையும் முழுமையாகப் படைத்தார். ஓர் ஆணுக்குள் பெண்மையையும், பெண்ணுக்குள் ஆண்மையையும் இணைத்து படைத்தார். (yin/yang) எல்லா படைப்பிலும் சிவனும்/சக்தியும் உண்டு. பெண்கள் நாங்கள் ஆண்களுக்கு அடிமை யாகி விட்டோம். எங்களை ஆண்கள் அடிமைப் படுத்துகின் றார்கள். அதனால் எங்களுக்கு மீட்பு வேண்டும். வேலைக்கு செல்ல வேண்டும். சொந்த காலில் நிற்க வேண்டும் என்று தப்பான முடிவுக்கு வந்து விட்டார்கள்.

ஆண்களும்/பெண்களும் யாரும் ஒருத்தரை ஒருத்தர் அடிமைப் விட்டோம் என்ற உணர்வு படுத்த முடியாது. அடிமை ஆகி எங்கிருந்து வந்தது என்றால் பெண்கள் தம்மிடம் உள்ள ஆண்மையை வளர்த்துக் கொள்ள வில்லை. ஆண்கள் தம் பெண்மையை வளர்த்து எடுக்க மறந்து விட்டார்கள். அதனால் ஆண்கள் Man-லிருந்து Male-ஆகவும், பெண்கள் Woman-லிருந்து Female-ஆகவும் மாறி இருவரும் அன்பிலிருந்து விலகி அரக்கத்தனத்திற்கு சென்று விட்டார்கள். இதனால் இழந்தது அன்பு குடும்பம். வீட்டில் சண்டை, அடி, சச்சரவுகள், இதனால் இருவருக்கும் குடிப்பழக்கம். இதனால் குழந்தைகள் இழந்தது 'அன்பு பெற்றோரை'!

நம்முள் இருக்கும் ஆண்மை, பெண்மையை எப்படி வளர்ப்பது?

பெண்:

பெண்மைக்கே உரிய எல்லா குணங்களையும் தன்னுள் கொண்டது இந்த Yin தன்மை, அன்பில் தொடங்கி தியாகத்தில் முடிகின்றது. இது ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய குணம். ஏனென்றால் ஒவ்வொரு ஆணும் உலகத்தில் தோன்றுவது ஒரு பெண்ணால். தாயிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருக்கின்றதோ அதில் பாதியாவது அவள் இருந்தால் அல்லவா அகப்பையில் பெண்ணுக்குள் ஆண்மையையும்

இணைத்தானே. அந்த ஆண்மை யின் தன்மை என்ன? Yang-சக்தி தால் நிமிர்ந்து நிற்க முடியும். தன் இதை அவள் வளர்த்து எடுத்திருந் உணர்வுகளை தெளிவாக எடுத்துக் கூற முடியும். தன் சிந்தனையில் பின் விளைவுகளை முன்னே கூறி தன் கணவனை வழிநடத்க முடியும். தன் குடும்ப பொறுப்பில் ஆணாக நின்று செயல்பட முடியும். தன்னுள் இருக்கும் Yin/Yang சக்தியை வளர்த்து எடுத்திருந்தால் அவள் தன் படைப்பின் முழுமையை அடைவாள். அவள் வாழ்க்கையில் நிறைவையும் காண்பாள். பிள் யார் நம்மை அடிமைப்படுத்த முடியும்???

ஆண்:

தன்னுள் இருக்கும் பெண்மையை வளர்த்து எடுத்திருந்தால் அன்பு செய்யவும் தியாகம் செய்யவும் படித்திருப்பார்கள். அன்பை வளர்த்து, வேலை செய்து, குடும்ப பொறுப்பை எடுத்திருப்பார்கள். மனைவியும், குழந்தைகளும் தன் தோளில் சாய இடம் கொடுத்திருப் பார்கள். அதனால் தானே ஆண் களுக்கு தோள்பட்டையை வலிமைப் படுத்தினார். குடும்பத்தைத் தாங்க வேண்டியவர்கள், பின் ஏன் குடும்பத்தைச் சுமையாக மாற்றி விட்டார்கள்? அதனால் எப்படி தப்பித்து ஓடலாம் என்று சாராயக் றார்கள். பொறுப்பற்ற எல்லா கடையை நோக்கி நடைபோடுகின் குற்ற உணர்வை மறைக்க குடிப் வரும் பொழுதே, அன்பு இல்லாத
ஆண்களாக, சண்டை சச்சரவு களை ஏற்படுத்துகின்றார்கள்.

பெண்களாகிய நாம் இந்த உண்மையை அறியாமல் இன்று சம்பாதிக்கும் ஆண்களாக மாறி விட்டோம். உண்மை தான் நமக்கு மீட்பு தரும். நாம் சிந்தித்து வளர்த்து எடுக்க நம்முள் இருக்கும் உண்மையில் வேண்டியதெல்லாம் ஆண்/பெண் தன்மையை குறித்தே. இதற்கு பதிலாக நாம் ஆண்/பெண் சமத்துவத்தைப் பற்றி

சிந்தித்து செயல்பட்டதால் இரு பான்மையோரும் ஒருவரை ஒருவர் அழிக்கின்றோமே தவிர வாழ வில்லை என்பதும் அடுத்த உண்மை. அதனால் ஒரு பெண்ணுக்குள்ளே இருக்கும் ஆண்மையுைம், ஆணுக்குள்ளே இருக்கும் பெண்மையையும் சேர்த்தே படைத்த, படைத்தவரின் குறிக் கோளை அறிந்து, முழுமை பெறு வோம். நாமும், குடும்பமும், தேசமும் முழுமை அடைவோம்!

No comments:

Post a Comment

ஒரே மனிதகுலம், ஒரே கடவுள்

அட்டைப் படத்தின் விளக்கம். 1988ம் வருடம் பல சமய மதத்தினர் சேர்ந்து ஜெபிப்பதாக கூறி என்னை அழைத்தார்கள். அங்கு நான் பார்த்தது: தரை...