அட்டைப் படத்தின் விளக்கம்.
1988ம் வருடம் பல சமய மதத்தினர் சேர்ந்து ஜெபிப்பதாக கூறி என்னை அழைத்தார்கள். அங்கு நான் பார்த்தது: தரையில் பூக்களால் ஒரு சிலுவை, ஒரு ஓம், ஒரு நிலாவும் நட்சத்திரமும் தனித் தனியாக போடப்பட்டிருந்தது. சேர்ந்து ஜெபிக்க வந்த நாம் ஏன் இப்படி தனித்தனியாக (துண்டு துண்டாக வெட்டி) போட்டிருக் கின்றோம். இந்த மலர்கள் ஒரு நாளும் சேராதா, அப்படி என்றால் இந்த கூட்ட ஜெபத்திற்கு என்ன பலன் உண்டு என்ற கேள்வியும், வேதனை யும் என் மனதில் தோன்றியது.
தியானத்தில் இறைவன் எனக்கு வெளிப்படுத்திய படத்தைத்தான் அட்டைப் படமாக கொடுத்திருக்கின்றேன். படைத்தவன், மனித குலம், ஒரே குடும்பமாக வாழ்ந்து - தன்னை நோக்கி (ஒரே கடவுளை நோக்கி) மனிதன் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தன் அன்பை தன் சாயலாக, தான் படைத்த எல்லா படைப்புகளுக்கும் கொடுத்த இறைவன், அதிலும் மனித குலத்திற்கு. விசேஷமாக கொடுத்தது யாரும் எடுக்க முடியாத மனசாந்தியும், மகிழ்ச்சியும்! அன்பு, சாந்தி, மகிழ்ச்சி என்பது நமக்குள் இருக்கும் புதையல்.
உலகத்தில் வாழ வந்த நாம் முதலில் நமக்குள் இருக்கும் இந்த புதையலை தேடி நமதாக்க வேண்டும்
அன்பின் தன்மை வேண்டும். பி ன் கொடுக்க ஆரம்பித்து விட்டால் மன அமைதியும், மகிழ்ச்சியும், தன்னை அதிகமாக வளர்த்து இறை தன்மைக்கு கொண்டு போய் -இதனை இழந்தவர்களுக்கு மீட்கும் பணியாக செயல்பட நம்மை தூண்டுகிறது. இதைத் தான் இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார்.
இன்று அன்பு, சாந்தி, மகிழ்ச்சியை இழந்த மனிதகுலம் இழந்ததை மீண்டும், மீட்க முயற்சிகள் எடுக்காமல் மீண்டும், மீண்டும் வெட்டி பிரிப்பேன் என்று மத வெறியர்களாக மாறிக் கொண்டே இருந்தால்... ஓ மனித குலமே இழப்பு யாருக்கு??? மனித தெய்வமாக மாற வேண்டிய நாம், மனித-மிருகமாக மாறி விட்டோம் என்பதை நாம் உணர்ந்து விட்டோமா??? பல சமய ஜெப வழிபாடுகள் என்று கூறிக்கொண்டு, ஒவ்வொரு வேத புத்தகத்திலி ருந்தும் ஒரு பகுதியை வாசித்து விட்டால் ஒரே மனித குலத்திற்கு அந்த ஜெப வழிபாடு வழி நடத்துமா?? உதட்டால் சேர்ந்து -மனதால் வேறுபட்டு செய்யும் ஜெப வழிபாடுகளை அந்த ஒரே கடவுள் ஏற்றுக் கொள்வாரா??
அமலாவதி
MM ARTICLE FROM JULY, 2002
No comments:
Post a Comment