Wednesday, November 12, 2025

குணங்கள்

குணங்கள்

கடவுள் நமக்கு கொடுத்த ஒரே குணம் உண்மை. அதனால் தான் நாம் சொல்லுகின்றோம் கடவுள் இருக்கின்ற இடத்தில் உண்மை இருக்கும். உண்மை இருக்கின்ற இடத்தில் கடவுள் இருப்பார் என்று. உண்மை என்ற குணம் எப்படி கடவுளிடம் பிறந்தது. எப்படி அது கடவுளின் குணமாக மாக மாறியது. கடவுளின் சிந்தனையி லிருந்து படைப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக தோன்றின. கடவுள் திருப்தி அடைகின்றார். "எல்லாம் நிறைவாக, அழகாக, திருப்தியாக இருக்கிறது என்று அவர் கூறியது உண்மை என்று உணர்ந்ததும், “சத்தியம்" என்ற குணம் பிறந்தது. அதனால்தான் நாம் கூறுகின் றோம். உண்மை உள்ள இடத்தில் இறைவன் இருப்பார். இறைவன் இருக்கின்ற இடத்தில் உண்மை இருக்குமென்று.....சத்தியம் என்ற வாக்கு பிறந்தது. இறைவனின் சிந்தனையில் ..... அதனால் சத்தியம் இருக்க வேண்டிய இடம் நம் சிந்தனை.

நம் சிந்தனையில் சத்தியம் இருந்தால் அது செயல்படும் பொழுது நம் பேச்சில் செயலில் வெளிபடும். அது செயல்படும். பொழுது அது உண்மை என்ற குணமாக வெளியே வருகின்றது. உ.ம், அவர் கூறுவது உண்மை அவர் செய்தது உண்மை என்று படைப்பெல்லாம் வனிடமிருந்து வந்தது. உண்மை இறை அவர் எல்லாம் நன்றாக இருக்
கின்றது என்று கூறியதும் உண்மை.........

"அன்பிலிருந்து வந்த இறைவன் உருவாக்கி விட்ட குணம் உண்மை. சத்தியம்".

பல குணங்கள் உலகத்தில் இன்று உருவாகிவிட்டது. அந்த குணங்கள் எங்கிருந்து வந்தது யாரால் உருவாக்கப்பட்டது. அன்பு செயலில் வெளிபடும் பொழுது செயலுக்கு ஏற்ற பெயரை மக்கள் சூட்டினார்கள். உ.ம். மற்றவர்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படும் பொழுது அன்பு இரகசியமாக செயல் பட்டது........ அதனால் இரக்க முள்ளவன் கருணை உள்ளவன் என்று கூறுகின்றோம். கடவுளை யும் இரக்க குணமுள்ளவர் என்று கூறுகின்றோம்.

அன்பு -மற்றவர்கள் நமக்கு கொடுத்த துன்பத்தை மன்னிக்கும் பொழுது இவன் பெரிய மனசு படைத்தவன் - மன்னிக்கும் குண முள்ளவன் என்று பெயர் வாங் கியது. அதனால்தான் கடவுளை பார்த்து மன்னிக்கும் கடவுள் என்று கூறுகின்றோம்.

பல வார்த்தைகள் கூறிய பல குணமாக நமக்கு தெரிகின்றது. எல்லா குணத்தின் பிறப்பிடம் "அன்பு" மாத்திரமே.

அதே போல "சத்தியம்" கூறுகின்றோம். இவன் உண்மை செயல் படும் பொழுது நாம் உள்ளவன். சத்தியம் தோற்றுப்
கொண்டாலும் அவர்கள் சிந்தனை யிலிருந்து "அவனை” மாற்ற முடியாது. அது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக் கும். அவன் செய்கின்ற எல்லா செயலுக்கும் பெயர் தான் "பொறாமை" - பொறாமையின் உச்சி கட்டம் - நீ இருக்கும் மட்டும். என்னால் வாழ முடியாது - ஏன் என் சிந்தனை யில் நீ இருந்து கொண்டு உன்னால் ஆட தெரியாது என்ற உண்மையை என் "Ego"வுக்கு கூறி கொண்டே இருக் கின்றாய். நீ ஒரு முள்ளாக மாறி விட்டாய். அதனால் நான் உன்னை அழித்தே தீருவேன் என்று முடிவு எடுத்துக்கொண்டு -அன்பிலிருந்தும் சத்தியத்தி லிருந்தும் வெளியே வந்து உன்னை அழிப்பேன் என்று ஒரு அழிவு செயலுக்கு அவன் "ஈகோ" அவன் உடலை செயல்படுத்த செய்கின்றது.

எல்லா எதிர்மறை குணங் களின் பிறப்பிடம், "உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத தன்மை....... இது செயல்படும் பொழுது கோபமாக - பொறாமை யாக மாறி இதன் முடிவு செயல் அழிக்கும் தன்மை. இதனால் தான் நாம் கூறுகின்றோம். உண்மை இல்லாத இடத்தில் தெய்வம் இருக்க முடியாது. தெய்வம் படைக்கும், அழிக்காது என்று மேலும் சில தீய குணங் களை எடுத்துப் பாருங்கள். கோள் சொல்வது பிறரைப்பற்றி பின்னால் பேசுவது இங்கும் அங்கும் பகைமையை பற்றிவைப் பது - இப்படி நம்முடைய எல்லா

எதிர்மறை குணங்களையும் எடுத்து அலசி பாருங்கள் -கடைசியில் என்ன உண்மை வரும். உண்மையை சரியான ஆளிடம் சரியான இடத்தில் சொல்ல தைரியம் இல்லை..... உண்மை பேச தைரியம் இல்லை என்றால்...... அதை ஏற்று வாய் அடைத்திருந்தால் இந்த கெட்ட குணங்களை நாம் வளர்க்க வேண்டாம். உண்மையை சொல்ல தைரியம் இல்லை. ஆனால் பொய் சொல்லவும் இங்கு அங்கு பேசவும் நமக்கு தைரியம் உண்டு பார்த்தீர்களா? பார்த்துக் கொள்ளுங்கள்!.

கோபத்தை சற்று அலசிப் பார்ப்போமா? உண்மை உள்ளவன் போல பேசலாம் - செயலில் காட்டலாம் - மற்றவர்களை நம்ப வைக்கலாம்.......யாராவது உண்மையை கண்டு பிடித்து இவர்களிடம் இதை சுட்டி காட்டினால் -இல்லை ஒரு கேள்வி கேட்டால் போதும்... சத்தத்தை உயர்த்தி கத்துவார்கள் - உடனே கோபப்படுவார்கள்.... ஏன். சத்தத்தை உயர்த்தி கத்தும் பொழுது மற்றவர்கள் இவன் கோபத்தை பார்த்து சரியப்பா நான் போகிறேன் என்று விலகி கொள்வார்கள். ஆனால் எதற்கும் பயப்படாமல் - உண்மையை கூறி அதற்காக என்ன கஷ்டங்களை அனுபவித்தாலும் நான் உண்மையை எடுத்துக்காட்டு வேன் என்று கூறி திரும்ப, திரும்ப உண்மையை கூறிக் கொண்டே இருப்பார்கள். உண்மையை நீ எற்றுக் கொள் - உண்மைக்குள் நீ வா என்று கூறி உண்மையை திரும்பி, திரும்பி...நாலுபேருக்கு முன் கூறுவார்கள். சில சமயம் இவன் ஏற்றுக் கொள்ளலாம் -ஆனாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் - இவன் இருந்தால் நமக்கு ஆபத்து என்று கூறி இவனை கொல்லபார்ப்பார் உண்மையை, கள். இது தான் நடந்தது. இயேசு பிரானுக்கு.....அவர் கூறிய ஏற்று, தன் வாழ்வில் ஏற்றுக் கொண்டவர்கள் சிலர். அவரை எதிர்த்தவர்கள் பலர். ஆனால் ஏசுபிரான் கூறினார், உண்மைக்கு சாட்சியம் சொல்லவே நான் வந்தேன் என்று. ஏற்றுக் கொள்ளாதவர்களின் பகைமை உணர்ச்சிக்கு ஆள் ஆனால் என்ன முடிவு என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

இறை தூதர்கள் எல்லோரும் "அன்பையும், உண்மையையும்" நன்கு அறிந்தவர்கள். அதனால் தான் இறைவனின் கருவியாக திகழ விரும்புகின்ற எல்லோரும் இந்த உண்மையை முதலில் தனதாக்க வேண்டும் - வாழ வேண்டும் - வாழ்க்கையில் அது செயல்பட வேண்டும். இதற்காகத் தான் பவுல் அடியார் ஜெபித்தார். "கடவுளே ஆம் என்று சொல்லும் இடத்தில் ஆம் என்றும் இல்லை ஆம் என்று சொல்லும் இடத்தில் இல்லை என்று சொல்லும் வரத்தை தா என்று கூறினார்.

HUE மாணவ மாணவிகளே ! நான் கடவுளின் கருவியாக மாற வேண்டும், தொட்டும் சுகமளிக்கும்

வரம் எனக்கு வேண்டும் என்று நாம் கடவுளை கேட்கின்றோம். கடவுளின் கரத்தில் பயன்படுத்தும் கருவியாக நாம் திகழ வேண்டுமென்றால்....... உங்கள் சிந்தனையில் உண்மை உண்டா? உங்கள் உள்ளத்தில் அன்பு உண்டா என்று முதலில் பாருங்கள். அதை வளர்த்து கொள்ளுங்கள். HUE மற்றவர்களுக்கு படித்து கொடுக்க விரும்புபவர்கள் முதலில் உங்கள் யை வாழ்க்கையில் இந்த குணம் இருக்கின்றதா என்று பார்த்து வளர்த்து கொள்ளுங்கள். அப்படி இருந்தால் தான் நீங்கள் எடுக்கும் வகுப்பில், வார்த்தையைவிட உங்கள் வாழ்க்கை பேசும்...... அது மற்றவர்களை மாற்றும் இல்லை என்றால் பவுல் அடியார் சொல்லுவதுப் போல வெறும் மணியின் ஓசையாக போய்விடும். மாணவர்கள் நன்றாக எடுத்தீர்கள் என்று சொல்லுவார்கள். ஆனால் நீங்கள் எடுத்த வகுப்பு அவர் களின் வாழ்க்கையை தொடாது. நான் HUE ல் பயிற்று கொடுப்பது Lecter வகுப்பு அல்ல அல்ல பிரசங்கம் அல்ல........ வாழ்க்கை கல்வி... ஆன்மீக கல்வி என்பதை மறந்து விடாதீர்கள்.

கடவுள் இதன் வழியாக உங்களுக்கு கூற விரும்பும் பாடங்களை படித்து - தியானித்து தனதாக்கி கொள்ளுங்கள். இறை ஆசிர் உங்களை வழி நடத்தட்டும்.

அமலாவதி 
மலர்கள் மனிதம் மாத இதழ் 
டிசம்பர், 2025

No comments:

Post a Comment

ஒரே மனிதகுலம், ஒரே கடவுள்

அட்டைப் படத்தின் விளக்கம். 1988ம் வருடம் பல சமய மதத்தினர் சேர்ந்து ஜெபிப்பதாக கூறி என்னை அழைத்தார்கள். அங்கு நான் பார்த்தது: தரை...