புதிய மலர்களை நோக்கி...
(MM FEB, 2006)அன்பு மலர்களே!
இந்த புதிய வருடத்தில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். இந்த அட்டைப்படம் வரலாறு கண்டு விட்டது. 42 அகில உலக மாற்று மருத்துவ மகாநாடு நடத்தியவர் Prof. Dr. Sir. Anton Jayasuriya. இவர்கள் ஆங்கில மருத்துவம் படித்திருந்தாலும், இலங்கை அரசாங்கம், சீனாவுக்கு அனுப்பி இவர்களை அக்குபஞ்சர் படிக்க அனுப்பிவைத்தது. இதை தான் மட்டும் படிக்காமல், உலக முழுவதும் கொண்டு சென்ற பெருமை இவர்களுக்கே சாரும். மாற்று மருந்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மக்களை படிக்க வைக்க இலங்கையில் ஒரு (University) கல்லூரியையும் திறந்துவைத்த பெருமையும் இவர்களுக்கே சாரும்.
நான் இவர்களை என் வாழ்க்கையில் சந்தித்தது 32வது அகில உலக மகாநாட்டில். இவர்களிடமிருந்து நான் நேரடியாக அஃகுபஞ்சர் படித்தேன். பிறகு இவர்கள் கல்லூரியில்தான் MDயும் (T.M.) Ph.D. Holistic-க்கும் செய்தேன். இந்த கல்லூரிதான் மாஸ்டர் டாங்குக்கும் எனக்கும் D.Sc. என்ற பட்டத்தை தந்தது. இவர்கள் இருவரும் பெரிய தலைவர்கள். ஒருவர் ஆன்மீக பள்ளிகூடத்தை நடத்துகிறார். மற்றொருவர் உலகத்தை சார்ந்த பள்ளிகூடத்தை நடத்துகிறார். தன் காலத்திற்கு பிறகு தம் கல்லூரியை மாஸ்டர் டாங்கின்கையில் கொடுத்த ரகசியத்தை இந்த அட்டை படம் நமக்கு விளக்கித்தருகிறது.
40வது மகாநாட்டை, ஆஸ்திரேலியாவில் நடத்தி, மாஸ்டர் டாங்குக்கு பட்டத்தை கொடுத்தார். இவர்கள் இருவரும் வெளியே சந்தித்தாலும் வேலை ரீதியில் சந்திக்க முடியாத ரகசியம். டாக்டர் Antony Jayasuriyaவின் சக்கரங்கள் 100% திறக்கப்படவில்லை. அந்த மகாநாட்டிற்கு நான் சென்றேன். இரண்டு பேரும் எனக்கும் மாஸ்டர்கள். டாக்டர் நினைத்தார். Dr. அமலா என் மாணவி என்று. மாஸ்டர் டாங் Dr. அமலா எனக்கு Director என்று இவர்கள் இருவரையும் சேர்த்த பெருமை உங்கள் Directorக்கே சாரும். இதைதான் நீங்கள் அட்டை படத்தில் பார்க்கின்றீர்கள். Dr. Antony Jayasuriya MEL குடும்பத்தில் ஒரு நபர்.
டாக்டரிடமிருந்து நான் படித்த பெரிய பாடம் - நான் இறந்தால் என் உடல் அடக்கம் செய்ய என் குடும்பத்தை சார்ந்த 5 பேர் இருந்தால் போதும். என்னை என் பெற்றோருக்கு அருகில் அடக்கம் செய்யவேண்டும். எனக்கு கல்லறை கட்டக்கூடாது. மூன்று வருடம் கழித்து அந்த இடத்தை மற்ற உடலுக்கு கொடுக்க வேண்டும். என்னை. நினைக்க விரும்புபவர்கள். என்னிடமிருந்து பெற்றுக் கொண்ட அறிவை நினைத்து - அறிவில் வாழ்ந்தால் போதும் என்று. அவர் விருப்பத்திற்கு இணங்க கழிந்த 2005 ஏப்ரல் 7-ம் தேதி அவருடைய உடல் 5பேரால் அடக்கம் செய்யபட்டது. (மனைவி - அண்ணன் - அவருடன் வேலை செய்த 3 பேர்) இந்த வருடம் இந்த இரண்டு பெரிய தலைவர்கள் இல்லாமல் அவர்கள் ஆன்மாசக்தி 43 வருட மகாநாட்டை நடத்தியது.
வாழ்வது ஒருமுறை - வாழ்தட்டும் தலைமுறை" என்ற சொல்லுக்கு இவர்களை நாம் முன்வைத்து நடப்போம். உடலால் பெரிய காரியத்தை சாதித்தாலும் ஆன்மாவின் நிலையை உணர்ந்து நான் எதற்காக உலகத்திற்கு வந்தேனோ அதை செய்து விட்டு செல்லுகின்றேன் என்று தன் வாழ்க்கை மூலம் நமக்கு நல்லதொரு பாடம் கற்று தந்துவிட்டார்கள் நாமும் அவர்கள் கால் அடியை பின்பற்றுவோம். அன்பிலும்/உண்மையிலும்
உங்கள் ஆசிரியர்.
No comments:
Post a Comment