மன மேடையில்...
நாடகம் பல விதம் நாடக மேடையும் பல ரகம். நாம் பார்த்து ரசித்த நாடகங்களோ பல பல ரகங்கள். நாம் பல காரியங்களை செய்யும் பொழுதும் செயல்படும் பொழுதும் நம் மனமேடையில் நாடகம் நடக்கின்றது இந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா... இதோ ஒரு நாடகம்.
Thinking
எண்ணம்: ஹலோ! உணர்ச்சி இன்று எப்படி இருக்கின்றீர்கள். சௌக்கியமா??
உணர்ச்சி: பரம சௌக்கியம்!
நீங்க எப்படி?
எண்ணம்: மனிதனுக்குள்ளே இருந்து அவிந்தது போதும், அதனால் கொஞ்சம் உல்லாசமா, வெளியே வரலாமே என்று வந்தேன். உணர்ச்சி : நீங்க வெளியே வந்ததைப் பார்த்ததும், நானும் உடனே ஓடிவந்து விட்டேன். கொஞ்ச நேரம் காற்று வாங்கி விட்டு போவோம்.
எண்ணம்: இன்று இந்த “Ego" நடந்த ஒரு காரியத்தை, திரும்ப, திரும்பச் சொல்லி, சொல்லி என்னை ரொம்ப Tention ஆக்கி விட்டது. அதனால் தான் கொஞ்சம் வெளியே வந்து விட்டு போகலாம் என்று நினைத்தேன்.
உணர்ச்சி: ஏன் கேட்கின்றீர்கள். 10 நிமிடம் போட்ட சப்தத்தில் என் உணர்ச்சியே கொதித்து விட்டது. அதனால் கொஞ்சம் Cool ஆகி
விட்டு போகலாம் என்று நான் வந்தேன்.
எண்ணம்: இத்தனை நாட்களும் நான் சொல்லுவதை அவன் கேட்பான். எனக்கு Easy ஆக அவனை Control பண்ண முடிந்தது. இப்பொழுது கொஞ்ச நாட்களாக நமக்கு Mental shock தருகின்றான்.
உணர்ச்சி : என்னை தான் குழப்புகிறான் என்று நான் நினைத்தேன். உன்னையும் குழப்புகிறானா? எப்படி இது நமக்குள் வந்தது??
எண்ணம் : ஏன் கேட்கின்றாய். இத்தனை நாட்களும் உறங்கி கிடந்த அந்த ஆன்மா கண்ணை திறந்து விட்டது. அது தலை தூக்க ஆரம்பித்து விட்டது. அதை எப்படி அடக்கி வைக்கலாம் என்று தான் நான் சிந்திக்க வந்தேன்.'
உணர்ச்சி : என்னையும் இப்பொழுது அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். அதனால் ஒரே நிலையில் எனக்கு கொண்டு போக முடியவில்லை.
எண்ணம் : நீ சொல்வது
புரியவில்லை. புரிகிற மாதிரி சொல். உணர்ச்சி : முன்பு எல்லாம் கோபபடுவார்கள், கத்துவார்கள், சண்டை போடுவார்கள். பிறகு அந்த ஆளை திரும்பி பார்க்க மாட்டார்கள். அதனால் எனக்கு உடல் Temperature யை இரத்த கொதிப்பை Maintain பண்ண முடிந்தது. இப்பொழுது எல்லாம்
சண்டை போடுகிறார்கள். பின்பு போய் மன்னிப்பு கேட்கின்றார்கள். பழையபடி அன்பு செய்கின்றார் கள். அதனால் என் Temperature யும் கொதிப்பும் மேலேயும். கீழேயும் போகின்றது. என்ன செய்வது என்று தெரியவில்லை. இதற்கும் காரணம் அந்த ஆன்மா வாகத்தான் இருக்க வேண்டும்.
இரண்டு பேரும் சேர்ந்து இதற்கு ஒரு முடிவு கட்டுவோமா? ஆமா அண்ணன் எண்ணம்! உன் Computer-யை On பண்ணு. இதற்கு Root Cause என்ன எப்பொழுது இந்த மாற்றம் வந்தது என்று பார்... ஜனவரி 2006... நிறைய புதிய எண்ணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நான்கு நாட்கள், வாழ்க்கையில் பல மாற்று சிந்தனைகள் உள்ளே வந்திருக்கின்றது. இந்த நான்கு நாட்களும் என்னுடைய Control இல்லாமல் automatic ஆக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. Automatic பட்டனை யார் on பண்ணியிருப்பார்கள்? Ego வா, இல்லை ஆன்மாவா இல்லை இந்த இரண்டும் சேர்ந்தா?? இந்த பட்டனை நான் ஒழித்து வைத்திருந் தேனே இதை எப்படி இவர்கள் கண்டு பிடித்தார்கள். இதற்கு மாற்று சிந்தனை உண்டா என்று யோசி.
எண்ணம் : ஐடியா வருது... ஐடியா வருது... உணர்ச்சி உன்னால் தான் இது முடியும். நீ தானே நம்ம Transport Minister. ஆன்மா என்ன சொன்னாலும்... நீ அதை ஏற்றுக் கொள்ளாமல் Check out பண்ணி விடு. இதை
எனக்கு Transmit பண்ணாதே. நான் உனக்கு என்ன சொல்லு கின்றேனோ அதை மட்டும் சேர்ந்து உடலுக்கு Transmit பண்ணிவிடு நாம் இருவரும் ஆன்மாவை ஓரம் விடுவோம் சரிதானே. கட்டி
உணர்ச்சி : அண்ணே! இதில் தான் நீ ஓட்டை விட்டுவிட்டாய்... ஆன்மா சொல்லதை நான் Check out பண்ணி விடலாம். நீ அனுப்பும் செய்தி புதிய Record லிருந்து வருமா இல்லை பழைய Record லிருந்து வருமா. எனக்கு எப்படி தெரியும். எதை உடலுக்கு கொடுக்க வேண்டுமென்று எனக்கு எப்படி தெரியும். அண்ணே complication. ஆகிபோச்சு... அண்ணே! நான் சொல்லுவதை நீ செய். Ego க்கு தெரியாம இப்பொழுது தானே புதிய Record யை delit பண்ணி விடு. நான் Ego க்கு சொல்லாமல் கெட்டிக்காரதனமாய் நடந்து கொள்வேன். Extra Boost நான் Egoக்கு கொடுத்து விடுவேன்... அது கண்டுபிடிக்காதப்படி நான் பார்த்துக் கொள்வேன். சரியா...? எண்ணம் : படைப்பிலேயே கடவுள் செய்த தப்பு இதுதானே. Automatic Record ULL Delit பட்டனையும் Ego control ல் விட்டுவிட்டார். அதனால் தான் நான் இந்த இரண்டு பட்டனையும் எல்லா தாய் சிந்தனைக்கும் அடியில் ஒழித்து வைத்தேன். இந்த ஆன்மா இதை கிளறி விட்டது. அதனால் இப்பொழுது என்ன செய்வது...
உணர்ச்சி : நான் மற்றொரு காரியம் செய்யட்டுமா? வெளியே இருந்து வரும் உணர்ச்சி, ஆன்மா கொடுக்கும் உணர்ச்சி... நீ கொடுக்கும் உணர்ச்சி... எல்லா உணர்ச்சிகளும் என்னை தொடவிடாமல் Total strick பண்ணி விடுவேன். அப்பொழுது 'Ego' வுக்கு ஒன்றும் செய்ய முடியாது. அப்படியே ‘Ego' அமுங்கி போய் விடும்... அப்பொழுது உடலில் சக்தியும் போய் விடும்... ஆன்மா சக்தியால் ஒன்றும் செய்ய முடியாது. எப்படி நம்ம Suggestion. எண்ணம் : சிந்திக்க வேண்டியது தான்.
உணர்ச்சி ரொம்ப சிந்திக்காதே... மண்டை ஒட்டில் இன்னும் 10 முடிதான் ஒட்டி கொண்டிருக்கு... அப்புறம் குல்லா வைக்க வேண்டும். எண்ணம் : உணர்ச்சி செத்து... Ego செத்து... உடல் செத்து... ஆன்மா செயல் இழந்தால்... நான் என்ன செய்வேன்... என் சக்தியும் இழந்தால்... நானும் செத்து போவேனே...
ஏய் உணர்ச்சி நீ என்னை மிகவும் குழப்பி விட்டுப்பயத்தை கொடுத்து விட்டாய். செத்து போய்விடுவேனே என்ற பயம் 'வந்து விட்டது. சரி! ஓடி வா Ego நம்மை தேடும்... மனிதனுக்குள் ஓடிவிடுவோம்.
ஆன்மா: இரண்டு பேரும் இங்கே வாங்க! இவ்வளவு நேரம் என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க! உடலை விட்டு வெளியே போய் பேசினால் எனக்கு தெரியாது என்று நினைத்தீர்களா? உண்மையை
சொல்லுங்கள்.
எண்ணமும், உணர்ச்சியும், நல்ல மாட்டிக்கிட்டோமே. செய்வது, எப்படி தப்புவது, நீ என்ன சொல்லு, நான் சொல்லு என்று ஒருவரை ஒருவர் பார்த்துகிட்டு மௌனமாக இருந்தாங்க?
ஆன்மா : நான் சொல்லுகிறேன். இந்த ஆன்மாவை எப்படி அடக்க வேண்டும். இதை தலைதூக்க விடாமலிருக்க என்ன செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டு விட்டு வறீங்க. அப்படி தானே? இரண்டும் சேர்ந்து... இல்லை ஆன்மா என்றது.
Ego: இந்தா...இனி என்னிடம் பொய்யே இருக்க கூடாது. இத்தனை நாட்களும் என்னை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தீர்கள் பொய் சொல்ல வைத்தீர்கள், திருட வைத்தீர்கள். இனி இதுவெல்லாம் நடக்காது. நான் ஏற்கனவே உங்களிடம் சொன்னேன். என் வாழ்க்கையை மாற்றி விட்டேன். பழைய எண்ணத்தை புத்தியிலிருந்து delit பண்ண போறேன். இனி எனக்கு எதிர்மறை உணர்ச்சியே வேண்டாம். இனி நான் என் ஆன்மீக பாதையை கண்டு பிடித்து என் ஆன்மா காட்டும் வழியில் செல்லப் போகிறேன்.
எண்ணம்: ஐயா! மாஸ்டர் Ego. இதுதான் எங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. 25 வருடம் நீங்கள் எங்கள் கட்டுப் பாட்டிலிருந்தீர்கள். வண்டி ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுது எல்லாவற்றையும் குழப்பிவிட்டீங்க! எப்படி உங்கள் வாழ்க்கையை. கொண்டு செல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை.
உணர்ச்சி: மத்தளத்திற்கு ஜால்ரா போடுகிற மாதிரி, எனக்கு ரொம்ப Insecurity ஆக இருக் கிறது. despair-ல் மூச்சே விட முடியவில்லை. அதனால்தான் கொஞ்சம் உங்களிடமிருந்து வெளியே போய் சுவாசித்து விட்டு, கொஞ்சம் Plan போடலாம் என்று நினைத்து தான் போனோம். ஆன்மா: உணர்ச்சியே இப் பொழுதே மூச்சு விட முடிய வில்லை.Despair ஆக இருக் கிறது என்று உணர்ந்து விட்டு Total strick பண்ண போகிறேன் என்று எப்படி முடிவு எடுத்தாய். உன் வழியாக எங்களை மெதுவாக சதை சதையாக சாக அடிக்கணும் என்று எப்படி முடிவு எடுத்தாய்.
Ego: என்ன! என்னை சாகடிக்கப் போகின்றாயா? இத்தனை நாட் களும்தான் என்னை வாழ்வதாக காட்டி சாகடித்தாய். இனியாவது என்னை வாழ விடு...
ஆன்மா: வாங்க!
Ego, எண்ணம், உணர்ச்சி, உடல் எல்லோரும் வாங்க கொஞ்சம் உட்கார்ந்து பேசுவோம்.
எப்படி இருக்குமோ என்ற சந்தேகம். நான் பதித்து வைத்திருக்கின்ற எண்ண மெல்லாம் என்ன ஆக
போகிறது... உங்களுடைய உணர்ச்சிகளை நான் புரிந்து கொள்கின்றேன். நான் தலை தூக்கியதால் நாம் சந்தோஷமாக,
ஒற்றுமையாக ஜீவிக்க போகின் றோம். என்னை நம்புங்கள். நான் உலகமே தெரியாமல், மேல் உலகத்திலிருந்து இறங்கும் பொழுது எனக்கு இந்த உடல் கிடைத்தது. இந்த சொந்தமாக்கி உடலை நான் கீழே வந்தேன். ஆனால் என்ன நடந்தது என்றால், உடல்தான் காலியாக இருந்தது. நான் வரும் பொழுதே. இந்த உடலுக்குள் உணர்ச்சி இருந்தது... பயம் இருந்தது...சில குற்ற உணர்வுகள் இருந்தது... என் புத்தியில் பலவிதமான எண்ண அலைகள் பதிவு செய்யபட்டிருந்தது. எனக்கு எதுவுமே புரியவில்லை... பின்பு நான் என் பெற்றோர்கள் சொல்லுவதுப் போல, நான் நண்பர் கூறியதுப் போல, என் கண்ணால் கண்ட சில காட்சிகள் வழியாக, நான் கேட்ட சில வார்த்தைகள். இது எல்லாம் மேலும், மேலும் என் எண்ண அலைகளாக மாறி பதிவு செய்யப்பட்டது. என் புத்தி என்ன கூறியதோ அதை உடல் செய்தது. அதற்கு தகுந்தாற் போல உணர்ச்சி மாறின. சில சமயம் உணர்ச்சிக்கு அடிமையாக உடல் செயல்பட்டது. நான் இருக்கிற உங்களுடைய பயம், வாழ்க்கை இடம் தெரியாமல் அமைதியாக இருந்தேன். உங்களை விட்டால் வேற வழி இல்லை என்று நான் நடக்கிறது எல்லாம் நடக்கட்டும் என்று போன வழி போகட்டு மென்று விட்டேன். ஆனால் ஒன்றுமட்டும் தெரிந்தது. நான் போகும் வழி சரியல்ல. என் ஏக்கமும், தாகமும் வேறு. ஆனால்
எப்படி அதை செயல்படுத்துவது என்று தெரியாமல் இருந்தேன். ஜனவரி மாதம் "மனித பிரபஞ்ச சக்தியும், ஆன்மீக யோகாவும்" என்ற வகுப்புக்கு என் தோழி அழைத்து சென்றாள். வகுப்பில் என் சந்தேகங்கள் தெளிவு அடைய பெற்றது. நான் எதற்கு உலகத்திற்கு வந்தேன். இந்த உடலை எப்படி பெற்றுப் கொண்டேன். என் புத்தியில் எழுதப்பட்ட எண்ணங்கள், என் உடலில் ஏற்பட்ட உணர்ச்சிகள் எல்லாம், என் தாயிடமிருந்து வந்தது. நானாக எழுதியது அல்ல. இதை வைத்து தான் வாழ்க்கையயை துவங்க வேண்டும். பின் தனக்கு என்று சில தெளிவுகள் கிடைத்த உடன் எது நல்லது. எது கெட்டது. எது என் வாழ்க்கைக்கு வேண்டும். எது வேண்டாம். இப்படித்தான் நாம் இருக்க வேண்டுமென்ற தெளிவு கிடைத்த உடன். நான் இந்த வேண்டாத, எதிர்மறையான சிந்தனைகள், எண்ணங்கள், உணர்ச்சிகளை எப்படி என் புத்தியிலிருந்து அழிப்பது என்று தேடிய பொழுது, நம்முடன் வாழும் தெய்வீக புத்தி, இந்த எண்ணங்களின் அடியில்
அழிக்கும்" பட்டன் இருக்கின்றது. வேண்டாதவைகளை எல்லாம் Select செய்து அந்த பட்டனை அழுத்தினால் இது எல்லாம் போய் விடும் என்று கூறியது. இதனால் நீங்கள்
தான் எல்லோரும் என்னை பயந்துவிட்டீர்கள்... கண்ட உங்களை நான் புரிந்து கொள்கின்றேன்.
நான் உலகத்திற்கு வந்ததோ கடவுள் அன்பானவர், நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்ய வேண்டும். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் மதித்து, அன்போடு வாழ வேண்டும்... பின் வாழ்க்கையில் யார், யாரை சந்திக்கின்றோமோ, அவர்களையும் மதித்து அன்பு செய்து, வாழ்ந்து காட்டத்தான். நான் மேல் உலகத்திலிருந்து வந்தேன். இந்த உடலை எடுத்தேன். இதை நீங்கள் எல்லோரும் என்னுடன் சேர்ந்து ஒத்துழைத்தால், இதை சீக்கிரம் செய்து முடிக்கலாம். எப்பொழுதும் நாம் மகிழ்ச்சியாக, அமைதியாக, திருப்தியாக வாழலாம். இப்படி வாழ்ந்தால், கடவுளின் ஆசீர் நமக்கு மேலும், மேலும் கிடைக்கும். அவரும் நம்மை கண்டு சந்தோஷப்படுவார். நாமும் அவருடன் சந்தோஷமாக இருப் போம். பின் நம்மாள், ஒரு அன்பான, சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைத்தால் செய்யலாம்... என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.
Ego: ஆன்மாவே, இத்தனை தெளிவாக சொன்ன பிறகு, எதற்கு தயக்கம். வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை... நாங்கள் எல்லோருமாக சேர்ந்து அழிக்கின்ற 'Delit' பட்டனை அமுக்க போகின்றோம். புத்தி... ஒன்... டு... திரி... உணர்ச்சி... அழுத்திட்டேன் . ஆ...ஹா... ஆ...ஹா... மகிழ்ச்சியின் ஒளி உடலையும் தாண்டி வெளியே வந்தது.
No comments:
Post a Comment