புதிய மலர்களை நோக்கி...
(Malarga Manitham - March 2006)அன்பு மலர்களே!
வணக்கம்! அட்டை படம், இயேசுவின் பணி என்று குறிக்கப்பட்டிருக்கின்றது. இயேசு பிரானின் பணி என்னதாக இருந்தது என்று சற்று சிந்திக்க அழைக்கின்றேன்.. என் வாழ்க்கையில் ஒரு முறை, ஒரு நபர், ஒரு கேள்வி கேட்டார். சிஸ்டர்! தன்னையே நீங்கள் இவ்வளவு வளர்த்துக் கொண்ட பின் இன்னும் நீங்கள் கிறிஸ்துவ அடையாள சின்னத்தை கழுத்தில் போட்டு நடக்கின்றீர்களே, இதிலிருந்து எப்பொழுது விடுதலை பெறுவீர்கள் என்றார். எதிர்பார்க்காமல் வந்த இந்த கேள்வி, சற்று நேரம் என்னை மௌனத்தில் சிந்திக்க வைத்தது. நீங்கள் இந்த சிலுவையை கிறிஸ்துவ மதத்தின் அடையாள சின்னமாக பார்க்கின்றீர்கள் நான் எப்படி பார்க்கின்றேன் என்றால், நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்ததால் நான் கிறிஸ்துவன். பல வருடங்களுக்கு முன்பு இயேசு பிரான் யார் என்ற கேள்வியை, என்னில் போட்டு, அதிகமான ஆராய்ச்சியில் இறங்கினேன். இயேசுபிரான் ஒரு தீர்க்கதரசி. உலகத்தில் பிறந்து வாழ்ந்து, உலகத்திற்கு வந்து தன் பணியை செய்து, மக்களுக்காக இறந்து, உயிர்த்து தன்னையும், மக்களையும் தன் தந்தையோடு இணைத்த ஒரே தீர்க்கதரசி அவர்தான் என்று அறிந்தேன். எனக்கு பிடித்த காரியம் என்னவென்றால், உலகத்தில் வாழ்ந்த 33வருடத்தில் எல்லா அனுபவங்களையும் பெற்று, இந்த மண்ணுலகத்தில் எப்படி வாழ வேண்டுமென்று நமக்கு தெள்ளத்தெளிய சொல்லி கொடுத்திருக்கின்றார். ஒரு டைமன் கல்லை உருட்டி, திரட்டி மாற்றி பார்ப்பதுப்போல பல கோணத்தில் பார்த்தேன். எந்த கோணத்தில் பார்த்தாலும் அவர் பேசிய ஒரேச் சொல் 'அன்பு' அந்த இறையன்பை புரியவைக்க நமக்கு சொல்லிய கதைகள், உதாரணங்கள்தான் எத்தனை, எத்தனை? ஆராய்ச்சியின் கடைசி பாகத்தில் என்னை அறியாமலே, அவர் அன்பில் சிக்கி, காதலியாக மாறிவிட்டேன். இப்படி சில ஆண்டுகள் கழிந்தன., உறவு நெருங்க. நெருங்க. அவர் என்னிடம் கேட்டார், காதலியாத்தான் இருப்பாயா? இல்லை கல்யாண உறவுக்கு வருவாயா என்றார்.. காதலி எப்பொழுதாவது மாறிக் கொள்ளலாம் அல்லவா... பயம் வந்துவிட்டதா என்றேன். இல்லை. (If you become, life partner, you can continue my Mission on Earth) காதலி, என்னுடைய வாழ்கையின் பாதி ஆளாகமாறினால், நான் செய்த பணியை தொடர்ந்து. செய்ய கட்டளை இடலாம் என்றார். உடனே நான் என் வாழ்வின் பாதியாக அவரை மாற்றிக் கொண்டேன். நானும் அவரில் மறைந்து கொண்டேன். அந்த உறவில் அவர் என்னிடம் கேட்டது. "அன்பை மீண்டும் உலகத்தில் கொண்டுவா” என்றார். நான் கழுத்தில் போட்டிருப்பது, நீங்கள் நினைப்பதைப் போல கிறிஸ்துவ மதத்தின் சின்னம் அல்ல. அவர் எனக்காக உயிர் கொடுத்த அன்பின் சின்னம் ‘தாலி’ என்றேன். அதனால் நான் சாகும் மட்டும் இந்த தாலி என் கழுத்தில் இருக்கும். நான் கிறிஸ்துவமதத்தில் இருக்கிறேனோ இல்லையோ, நான் மதத்தை தாண்டி "கடவுள் ஒருவரே, மனித குலம் ஒன்றே" என்ற நிலைக்கு வந்துவிட்டேன். ஆனால் நான் உயிரோடு இருக்கும் மட்டும் அவர் கட்டிய தாலி என்னுடன் இருக்கும் என்றேன்.
ஆம்! "கடவுளே அன்பு, அன்பே கடவுள்" என்று நாம் HUE-க்கு வந்த பிறகு ஆழமாக உணர்ந்திருக்கின்றோம்... அன்பே நம் பணி என்று மாஸ்டர்! திரும்பவும், திரும்பவும் சொல்லுகின்றார்கள்... இந்த புதிய வருடத்தில் நாம் இந்த "அன்பை" ஆழமாக புரிந்து. நம் அன்புக்குள் வந்து இறைவனின் உண்மையான தத்துவங்களை தனதாக்கி அதை செயலில் வெளிகாட்டுவோம்... அப்பொழுது தான் ‘அன்பு’ மலரமுடியும். அன்பைப்பற்றி பேசினாலோ, இல்லை பக்கம், பக்கமாக எழுதினாலோ... அன்பு நம் வரப்போவதில்லை. நாம் நம்மை அறிந்து, நம்மில் அன்பை முதலில் வாழ்க்கையில் கொண்டு வந்தால்தான் நாமும் நம்மை அன்பு செய்ய முடியும், மற்றவர்களையும் அன்பு செய்யமுடியும். இயேசுபிரான் கொடுத்து சென்ற ஒரே கட்டளை "நீ உன்னை முதலில் அன்பு செய், தூரம் நீ உன்னை அன்பு செய்கின்றாயோ, அதே அளவுக்கு பிறரை அன்பு செய்" இந்த ஒரு கட்டளையை நாம் தனதாக்கினால் இறைதந்தையை விரைவில் அறிந்து கொள்வோம். ஏன் இணைந்து கொள்வோம்... இதை செய்கின்ற ஒவ்வொரு மனிதனும் இயேசுபிரானின் பணியை செய்கின்றார்கள்..
அன்பு பணியை செய்கின்ற எல்லோரும் கிறிஸ்துவர்களா? இல்லையே. கிறிஸ்துவர்கள் எல்லோாரும் அன்பு பணியா செய்கின்றார்கள். அதுவும் இல்லையே... அதனால் அன்பு பணி, மதத்தை தாண்டபட்ட அறிகின்றார்களோ ஒரு செயல். யார் இறைவனை - அவர்கள் அறிந்து உணர்ந்து கொள்வார்கள். அன்பே கடவுள், கடவுளே அன்பு" என்று அவர்கள் எல்லோரும் அன்பு பணி ஆட்கள்.. HUE-ன் அடிப்படைதத்துவம் இது. அதனால் நமக்கு அதிகமான கடமை உண்டு. கடவுள் நம் சக்கராக்களை 100% திறந்து கொடுத்து மீண்டும் அன்புக்குள் வர கொடுத்திருக்கின்றார். அதனால் மாஸ்டர் கூறுவதுப்போல இந்த வருடம், அன்பு பணியை மிகவும் ஆழமாக செய்வோம். வரம்
Dr.Sr. அமலாவதி
ஆசிரியர்
No comments:
Post a Comment