Thursday, February 24, 2022

பெண்ணுக்குப் பரிசு எது?

 MM NOVEMBER 2001

பெண்ணுக்குப் பரிசு எது?
ஒரு கல்யாண வீட்டிற்கு சென்றேன். பெண்ணின் தந்தை "என் மகளுக்கு Latest ஆக வந்த Kitchen க்கு வேண்டிய எல்லா Machine, latest ஆக வந்த Washing machine, T.V. எல்லாமே வாங்கி சீதனமாக கொடுக்கிறேன்" என்று பெருமையாக கூறினார். நான் தலையை ஆட்டிக் கொண்டேன்.
என்ன சிஸ்டர்! இரண்டு வார்த்தை சொல்லிப் பாராட்டுவீர்கள் என்று நினைத்தேன்."
"இல்ல.. இதை எல்லாம் செயல்படுத்த உங்கள் மகளுக்கு தெரியுமா என்று யோசித்தேன்?"
வீட்டை துடைத்து கொடுத்து, இதை எல்லாம் அறிந்த ஒரு நபரையும் வேலைக்கு அமர்த்தி விட்டேன்.
"கெட்டிக்கார அப்பா. ஆமா! பையன் என்ன செய்கின்றான்?
"டாக்டர்; அதுவும் எலும்பு Specialist. அவர்கள் அப்பாவும் நம்ம ஊரில் ஒரு பிரபலிய டாக்டர், அதனால் நம்ம மரியாதை போய் விடக்கூடாதே.
உங்கள் மகள் B.Sc. அவன் ஏன் ஒரு டாக்டரை கட்டாமல் ஒரு B.Sc. பிள்ளையை கட்டுகின்றான்?
“இரண்டு பேரும் டாக்டராக இருந்தால் வீடும் ஆஸ்பத்திரி ஆகி விடும். அதனால் ஒரு பெண் வீட்டோடு இருந்தால் போதும் என்று என்மகளை கேட்டார்".
புத்தி உள்ள டாக்டர்!
''காலையில் போகும் டாக்டர் இரவு வருவார். அதுவரைக்கும் மகள் தனியாக இருக்க வேண்டுமே. அதற்குத்தான் T.V. கொடுத்திருக்கின்றேனே. அதுவும் Flat T.V.35 Channel இருக்கின்றது. 24 மணி நேரமும் படம் ஓடிக்கொண்டே இருக்கின்றது. இருந்த இடத்தில் இருந்து கொண்டு Channel-யை மாற்றினால் போதும். பின் அவள் சந்தோசமாக இருக்கலாமே".
"உம்!சரி" என்றேன். "சமைக்க தெரியுமா?"
அதற்கும் ஏற்பாடு செய்து விட்டேன். கண்டிப்பாக டிவி பார்க்க படித்திருப்பாள். சாப்பிடவாவது தெரியுமா இல்ல சீரியலில் மயங்கி சாப்பிட மறந்து விடுவாளா?
"சிஸ்டர்! இது கொஞ்சம் Too much என்றார். "மன்னிக்கவும்" என்று கூறி கூட்டத்தில் போய் அமர்ந்து
கொண்டேன்.
கல்யாணச் சடங்குகள் துவங்கின. என் மனம் கனத்துவிட்டது. இப்படி பெண்கள் இருந்தால் சமுதாயம் எப்படி இருக்கும்? இவர்கள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள் எப்படி இருக்கும்? அவர்களால் இனி வரும் சமுதாயம் எப்படி இருக்கும்? இனி வரும் Generation-க்கு குணம், அன்பு என்றால் என்னவென்று தெரியுமா? இதுதான் பிள்ளை வளர்ப்பா? இனி பாரத நாடு எப்படி இருக்கும்? கேள்விக்கு மேல். கேள்வி மழையாகப் பொழிந்து என் உணர்ச்சிகளை தாங்கி ஆறாக ஓடியது. இப்பேர்ப்பட்ட பெண்கள் இனி நாட்டிற்கு தேவையா? என்ற கேள்வி என் உணர்ச்சி ஆற்றில் வெள்ளத்தை ஏற்படுத்தியது. சமுதாயத்திற்கு குல விளக்காக இல்லாத பெண்களை இந்த வெள்ளம் இழுத்துச் செல்லட்டும் என்று கூறியது.
"சிஸ்டர்! சாப்பிட வாருங்கள்" என்ற அழைப்பு என்னை நிதானப் படுத்தியது. ஐய்யோ! தாலி கட்டிய நேரம் கூட தெரியவில்லையே. ஆசீர்வதிக்க வந்த நான் என்ன செய்து விட்டேன். ஏன் தவறிவிட்டேன்? நானும் ஒரு பெண்தானே! ஏன் மற்றொரு சந்து பெண்ணை மதிக்கவில்லை என்ற கேள்வியை கேட்டுக் கொண்டே இலையில் வந்த இட்டலியை விழுங்கினேன்.
படைத்தவனே, பெண்ணை Too மதித்து அவளுக்கு உள்ள ஒவ்வொரு பாகத்திலும் அழகை கொடுத்து, தனக்குப்பின் படைக்கின்ற தாய்மையை அவளுக்கு கொடுத்து கடமைகளையும் - பொறுப்புணர்ச்சி யையும் நம்மிடம் கொடுத்தானே. அப்படி இருக்க படைக்க வேண்டிய நாம் T.V யின் முன் எப்படி பொழுதை கழிப்பது என்று வாயில் போட்ட இட்டலியை விழுங்கினேன். மற்றொரு துண்டை வாயில் போட்டேன். இல்லத்து லட்சுமியாக, வீட்டிற்கு ஒளியாக, இருக்க வேண்டிய ஒரு பெண் எப்படி 24 மணி நேரம் T.V யை போட்டு, வீட்டை எப்படி சினிமா, என்ற பேய்க்கு இடமாக மாற்ற முடியும். குழந்தைச் செல்வம் தான்
பெரிய செல்வம் என்று நம் முன்னோர் கள் சொன்ன வாக்குறுதியின் அர்த்தத்தை இவர்கள் புரிந்திருந்தால், எப்படி இவர்களின் பெற்றோர்கள், இவர்களை இப்படி வளர்த்திருக்க முடியும்? இப்படியாக என் உணர்ச்சி வெள்ளம் பொங்கி, பொங்கி வந்தது.
பெண்ணே உன்னோடு பிறந்த தாய்மை எங்கே????
தாய்மையோடு வந்த தியாக உணர்ச்சிகள் எங்கே????
ஊற்றில் அன்பு இல்லை என்றால் ஆற்று நீரில், அன்பு, மனித நேயம் எப்படி வரும்? கைகள் இலையை தடவின. இட்டலியை காணோம். எப்படி விழுங்கினேன் என்று கூட தெரியாமல் இலையை மூடிவிட்டு, கைகளை கழுவி விட்டு வாசலில் வந்தேன். அங்கு பெண்ணின் பெற்றோர்கள் நன்றி, நன்றி என்று கை உயர்த்தி நன்றி என்றார்கள். என் கரம் உயர்ந்தது. தலை ஆடியது. வயிறு நிறைந்தது, உள்ளம் கனத்தது...
பெண்ணே! சிந்திக்க அழைக் கின்றேன்! - இனி வரும் பாரதம், பெண்ணே! உன் கையில் உண்டு என்ற உண்மையை அறிந்து சிந்தித்துச் செயல்ப... செல்வத்தில் எல்லாம் சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம்... அந்தச் செல்வத்தை உருவாக்குவது உன் கையில் பெண்ணே! மறந்து விடாதே.
சிற்பியாக இரு! குழந்தை செல்வத்தை செதுக்கி எடு!!! உன்னால், உன் ஆசிர்வதிக்கப்படும். குடும்பம்
-Dr. அமலா

No comments:

Post a Comment

Achieve - think

Achieve -  think ----------------------------------- Science Perspective:- Our thinking is created by the brain communicating with the frequ...