MM NOVEMBER 2001
மாஸ்டர். டாங்
அவர்களுடன் இணைந்து அமைதிக்காக
மன்றாடுவோம்!
எல்லாம் வல்ல இறைவா! உம்மிடம் வேண்டுகிறேன்.
எல்லா மனிதர்களையும் ஒரே அமைப்பில்தான் நீர் உருவாக்கினீர்.
எல்லா மனிதர்களும் ஒரே குடும்பமாக வாழத்தான் நீர் ஏற்பாடு செய்தீர்.
உமது நிழலில்தான் அனைவரும் வாழ்கிறோம். உம் திருமுன்தான் அனைவரும் நிற்கிறோம்.
உமது திருவருளால்தான்
உமது திருவுளப்படிதான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அனைத்தையும் படைத்த
ஆண்டவராகிய உம்மிடமே மன்றாடுகிறேன். நீர் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறீர்.
ஒவ்வொருவரையும் உருவாக்கியவரும் ஒவ்வொருவருக்கும் ஆற்றலையும் திறமையையும் அளவுக்கு அதிகமாக அளித்தவரும் நீரே.
உயிர் கொடுத்தவரும் நீரே.
பரந்து விரிந்த கடலைப் போன்ற உம் அதே உமது ஆசீரால், மீண்டும் மனிதர்களை நிரப்பி அவர்களை ஒருங்கிணைத்தருளும். எல்லா மதங்களுக்குள்ளும்
அருள் வரங்களாலும் ஆசீராலும் மக்களை நீர் நிரப்பி வருகின்றீர்.
ஒற்றுமையைக் கொண்டுவாரும். எல்லா நாடுகளையும் ஒன்றிணைத்தருளும்.
ஒரே குடும்பத்தைச் சார்ந்த சகோதர சகோதரிகளாக
மனிதர்கள் ஒருவர் மற்றவரைப் பார்க்கவும் இந்த உலகையே ஒரே நாடாகக் கருதவும் எல்லாரும் அமைதியில் வாழவும்
உமதருளை வேண்டுகிறேன். எல்லா மக்களையும் ஒருங்கிணைக்கும் சக்தியை
எமக்கு அளித்தருள வேண்டுமென மன்றாடுகிறேன். அமைதியின் அடித்தளத்தை
நீர் அமைத்திடவும்
எல்லா இதயங்களையும் ஒன்று சேர்க்கவும் மன்றாடுகிறேன்.
கருணைக் கடலே! உமது அன்பின் நறுமணத்தால்
எமது இதயங்களை நிரப்பியருளும். உமது தெய்வீக ஒளியால்
எமது கண்களைத் திறந்தருளும்.
உமது இதமான வார்த்தைகளால் எமது செவிகளைத் திறந்தருளும்.
உமது திருவுளத்தின் கோட்டையில் எங்களை வைத்துப் பாதுகாத்தருளும்.
ஆதியும் அந்தமும் நீரே.
ஆற்றலும் சக்தியும் நிறைந்தவர் நீரே. கருணை மயமானவர் நீரே.
மனிதர்களின் பிழை பொறுப்பவரும் நீரே.
என் மன்றாட்டுகளுக்குச்
செவிசாய்ப்பீர் என்ற நம்பிக்கையில் உம்மிடம் வேண்டுகிறேன்.
மாஸ்டர் லுவாங் மின் டாங்
No comments:
Post a Comment