Thursday, February 24, 2022

பெண்மையும் - தாய்மையும்

MM January 2002
பெண்மையும் - தாய்மையும்
பெண்மையைக் கொண்டாடு வோம், வாருங்கள் ஏன்? பெண்ணாக பிறப்பதே ஓர் அழைப்பு ஒரு பெருமை. ஒரு பெண்ணை ஆறு கோணத்தில் வைத்து நாம் பார்ப்போமா? 1.படைப்பிலேயே உயர்ந்தவள் பெண் :
பெண்ணைக் கடவுள் எப்பொழுது, எப்படிப் படைத்தார்? நிலத்தில் ஒருபிடி மண்ணிலிருந்து உருவாகி யவன் ஆண். ஓர் உயிரிலிருந்து உருவாகியவள் பெண். இதனால் படைப்பிலேயே உயர்ந்தவள் அவள்.
அவள் எப்பொழுது உருவானாள்? கடவுள் ஆணைப் படைத்துவிட்டு தன்னுடைய படைப்பு முழுமை அடைய வில்லை; அதில் ஒரு குறை இருப்பதைக் கண்டார். (ஆதி 2:23)
இறைவன் உழைத்துப் பெண்ணை உருவாக்கினார்". கடவுள் சிந்தித்து, உழைத்து ஒரு சிற்பம் போல பெண்ணைச் செதுக்கினார். படைப்பு வேலை பெண்ணைப் படைத்த பிறகே முழுமையும், நிறைவும் அடைகிறது. அப்படி என்றால் வைத்தவளும் பெண்ணே.
படைப்பிற்கு முற்றுப்புள்ளி
ஆதியாகமம்
கூறுகிறது,
துணையாக ஒரு பெண்ணைப் படைத்தார்
என்று.
ஆதலால்
மகிழ்ச்சியும், வியப்பும் அடைந்தாள். இவள் எலும்பில் எலும்பும், மாமிசத்தில் மாமிசமுமாய் இருக்கின்றாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்ட படியால் "மனுஷி எனப்படுவாள். ஆதாமுக்கு (ஆணுக்கு) பெண்ணைப் துணையாகப் படைத்தார். அப்படியென்றால் பெண் இல்லாத ஆணும் குறைவு உள்ளவனே.
எனவே பெண் பலவீனமான வளல்ல; பெண் ஆணுக்கு எதிரான பிறவியும் இல்லை. இரண்டாந் தரமான படைப்பும் அல்ல. ஒன்றி லிருந்து தோன்றிய மற்றொன்றும் இல்லை. படைப்புக்கு முழுமை தேடித்தந்து மனித குலத்தை முழுமை அடையச் செய்தவள் பெண்.
2. பெண்ணின் பெருமை: "கிறிஸ்து உலகிற்கு ஒளி. பெண் வீட்டிற்கு ஒளி வீட்டின் ஒளி பெண். மாலையானால் வீட்டில் ஒளி ஏற்ற ஒரு பெண் குழந்தை வேண்டும்.
மருமகளாக அடுத்த வீட்டிற்குப் போகும் பொழுது "என் வீட்டின் ஒளியாக நீ வரவேண்டுமென்று கூறுகின்றார்கள்". வீட்டின் தலைவி இறந்து விட்டால் வீட்டின் ஒளி அணைந்து விட்டதாகக் கூறுகின்றார்கள்.
இயேசு என்னும் உலகின் ஒளி வருவதற்கு ஒரு பெண் தேவைப்
பட்டாள். இதுவே போதும் பெண்ணின் பெருமையை எடுத்துச்
சொல்ல.
சுருக்கமாகக் கூறினால் ஒவ்வொரு ஆணும் உலகத்திற்கு வந்தது ஒரு பெண்ணால், பெண்ணின் பெருமை தான் என்னே!
அதிலும் சிறப்பாக எந்த குழந்தையும் தானே வாய்திறந்து சொல்லும் முதல் சொல் “அம்மா" (நம்மோடு பிறந்து வருகின்ற முதல் வார்த்தை "அம்மா"). பெண்ணின் பெருமையை அளந்திட முடியுமோ?
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டு அம்மா என்று பெண்ணின் பெருமையைப் பாடுகின்றார் கவிமணி.
3. பெண்ணின் அழகு: ஆசைக்கு ஒரு பெண் என்று
கூறுவார்கள். ஏன்? பெற்றோர்க ளுக்கு உண்டாகிய ஆசை எல்லாவற்றையும் நிவர்த்தி செய்பவள் பெண். உடுத்தி அழகு பார்க்க, அவளால் பெருமை அடைய ஒரு பெண் வேண்டும். அவள் வளர்ந்து வருவதே ஓர்
அழகு. "பியூட்டிபுல்" என்ற ஆங்கில சொல் வந்ததே பெண்ணால் தான். அவள் ஓர் அழகி. எதில் அழகி? கண் அழகி, உடல் அழகி, அவள் உடலில் இருக்கின்ற 5 வளைவுகளும் அழகு! நடை அழகு!, இடுப்பு அழகு!, சிரித்தால் அழகு!, பல் அழகு!.... அவள் உடலில் இருக்கின்ற ஒவ்வொரு அங்கமும் அழகு.
பெண்ணின் படைப்பே அழகு. அந்த அழகில் மயங்குபவன் ஆண், ஒரு பெண்ணின் அழகுக்கு முன் ஆண் பலவீனனே. அத்தனை அழகு கொண்டவள், அழகில் சக்தி வாய்ந்தவள் பெண். (உ.ம்.) எஸ்தர்.
4. பெண்ணின் மகிமை : பெண்ணின் மகிமை அவளுடைய கற்பு, தாய்மை, தியாகத்தில் அடங்கி உள்ளது.
ஒரு பெண்ணின் நடத்தையை யும், குணத்தையும் நிரூபிப்பது அவளுடைய கற்பு.
அதைப்போலவே ஆணுக்கும் கற்பு நெறி அவனை மேன்மைக்கு உரியவனாக்குகிறது. தன் அடக்கத்தின் வெளி அடையாளம் கற்பு. அன்பின் மறுபாதி தியாகம். இந்த அன்பிலும், தியாகத்திலும் படைக்கின்றாள்.
ஓர் உயிர் அணுவுக்கு, தன் இரத்தத்தால், ஓர் உடலை உருவாக்கி, அந்த உடலை ஒரு குழந்தையாக மாற்றி, பத்து மாதங்கள் சுமந்து, இரத்தம் சிந்தி அடுத்த படைப்பைப் படைக்கின் றாள். தன் உயிர் கொடுத்தும், இரத்தத்தைப் பாலாக மாற்றி ஊட்டியும் வளர்க்கின்றாள், அந்தத் (சாதாரண) தாய்.
தன் தியாகத்தின் வழியாக, தான் படைத்த அந்தப் படைப்பின் வழியாக ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி விடுகின்றாள்.
எந்தப் பெண்ணும் தனக்கு என்று ஒரு நிமிடம் கூட வாழ்வது இல்லை. காலையில் கண் விழித்ததிலிருந்து, இரவில் கண்மூடும் வரை அவள் செய்யும் தியாகங்கள் பலப் பல. எத்தனைஇரவுகள் கண் மூடாது விழித்திருந்து பாதுகாக்கின்றாள்?.
ஒவ்வொரு நிமிடமும் ஒருபெண் மற்றவர்களுக்கு என்றேவாழ்கின்றாள். அன்பின் இருப்பிடம்,தியாகத்தின் உறைவிடம் அவள். தாய்மையின் மகிமையை அறிந்ததனால் நம் மொழிக்குத் "தாய் மொழி " என்றும், நம் நாட்டிற்குத் "தாய் நாடு" என்றும், இந்து மதத்தில் கடவுளை அம்மை, அப்பன் என்றும், கூறுகின்றார்கள். இதனால்தான் மோடு பிறக்கின்றது "அம்மா என்ற சொல். 5. பெண்ணின் குணங்கள்:
அன்பின் ஆழத்தைத் தொட்டவள் பெண். அதனால் மற்றவர்களைப் புரிந்து கொள்ளும், மற்றவர்கள் சொல்லாமலேயே மற்றவர்களின் உணர்ச்சிகளை உணர்ந்து கொள்ளும் தன்மையும் உடையவள். அதனால் ஆறுதல் கூறி, தைரியம் கூறி, வீட்டையும், ஆண்களையும் பாதுகாக்கின்றாள்.
அவள் புத்திக் கூர்மை படைத்தவள், திறமை உள்ளவள், தெய்வ பக்தியும், விசுவாசமும் உள்ளவள். பெண்களுக்குப் பிற மக்களை வசப்படுத்தி, ஆதிக்கம் செலுத்த தனிப்பட்ட சக்தி உண்டு, "ஆவதும் பெண்ணால், அழிவதும்
பெண்ணால்", என்பதைப் போல படைக்கின்ற சக்தியும், அழிக்கின்ற | சக்தியும் உள்ளவள் பெண்.
வீரத்துடன் போராடுபவள். இரக்க குணம் உள்ளவள். அக்கறை, கரிசனை, விவேக முள்ளவள். படைப்பே பெண்ணிட மிருந்து வருவதால், எல்லாக் குணங்களை உடையவளும், எல்லா குணங்களைப் படைக் கின்றவளும் பெண்ணே.
6. பெண்ணின் கடமை:
ஆவதும் பெண்ணாலே; உலகம் அழிவதும் பெண்ணாலே என்பது மட்டுமல்ல; மனிதன் உயர்வதும் பெண்ணாலே; மனிதன் தாழ்வதும் பெண்ணாலே தான். அதனால், இறைவன் எப்படி
உலகத்திற்கு ஒளியாக இருந்து என்னில் நடப்பவள் இருளில் நடக்கமாட்டாள் என்று சொல்லு கின்றாரோ, அதுபோல உலகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும், வீட்டிற்கு ஒளியாகத் திகழ்ந்து, அன்பிலும், தியாகத்திலும் மக்களை உருவாக்கி, சமாதானத்தில் நிலைத்து வீட்டையும், சமுதாயத் தையும் ஒளியில் நடத்திச் செல்ல வேண்டும். இதுவே ஒரு பெண்ணின் கடமை.....
பெண்ணே, இறைவனின் ஒளி உன் உள்ளத்தில் ஒளிர்கின்றதா? அந்த ஒளியை உன் பார்க்க முடியுமா?
ஆனந்தி

No comments:

Post a Comment

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...