MM JANUARY 2002
யார் நோயாளி?
'டாக்டர்! உங்களிடம் ஏதோ மலர் மருத்துவம் இருப்பதாகவும், அது குழந்தைகளின் குணங்களை மாற்ற உதவுவதாகவும் அறிந்தேன். என் மகனுக்கு பயங்கர பிடிவாதம். நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும். கேட்டதை உடனே கையில் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கையில் கிடைத்ததை நாலு பக்கம் தூக்கி எறிகின்றான்...
'டாக்டர்! இரண்டு நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது தெரியுமா? அப்பாவிடம் Two Wheeler வாங்கி தர வேண்டும், வாங்கித் தரவில்லை என்றால் பள்ளிக்கு போக மாட்டேன் என்று அழுதான். கொஞ்ச நேரம் சப்தம் காண வில்லையே என்று பார்க்கும் பொழுது, அப்பா Scooterல் போய் காற்றை (air) பிடுங்கி விட்டான். 3ம் வகுப்பு படிக்கின்றான். எப்படி டாக்டர் Scooter வாங்கி கொடுக்க முடியும்...? என்ன டாக்டர்! நான் பேசிக் கொண்டே இருக்கின்றேன்... நீங்க'.நான் சிந்தித்துக் கொண்டுத்தான். இருக்கின்றேன்... மருந்து யாருக்கு தேவை? யாருக்கு கொடுப்பது? தாய்க்கா? இல்லை பிள்ளைக்கா?
'ஐய்யோ டாக்டர்! நான் சொன்ன கதை எல்லாம் என் பிள்ளையைப் பற்றி... என் கதை அல்ல'.
'புரிந்து கொண்டேன்...'
'பின் எதற்கு எனக்கு?"
'இந்த குழந்தைக்கு பிடிவாத
குணம் வந்தது உன்னால் தான் என்று நான் சொன்னால் உன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
'ஐய்யோ.டாக்டர் எனக்கு பிடிவாத குணமே கிடையாது.. நான் யாரோடும் adjust பண்ணி போய் விடுவேன். வேணு மென்றால் என்னோடு வேலை செய்கின்ற மற்ற டீச்சரிடம் கேட்டுப் பாருங்களேன்'.
'டீச்சர்! நான் யாரிடமும் வந்து கேட்க வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக நான் சொல்லுவதை நீங்கள் கேட்டால் போதும். கேட்பீர்களா? குழந்தை பிறந்த முதல் மாதத்திலிருந்து நீங்கள் எத்தனை முறை அவனை Scooterல் கொண்டு சென்றீர்கள்? அவன் புரிந்து வைத்திருப்பது. சாவியைப் போட்டு திருக்க வேண்டும். காலால் ஒரு எத்து கொடுக்க வேண்டும். டூர் என்று ஓட்ட வேண்டும். அதனால் அவனுக்கு Scooter நன்றாக ஓட்ட தெரியும். அதனால் மகன் Two Wheeler கேட்டவுடன் வாங்கி கொடுக்க வேண்டியது தானே? அவனை ரோட்டில் நடக்க விடாமல், அப்பா அவனை பள்ளியில் கொண்டு விட்டும், அழைத்தும் வருகின்றார். எதற்கு அப்பாவுக்கு கஷ்டம்? Two Wheeler வாங்கி தந்தால் நாமே போய், வரலாமே என்று நினைக்கின்றான். அதற்குப் பெயர் பிடிவாதமா? இல்லை. பிறர் சிநேகமா?...
எப்பொழுதும் Scooterல் ஏற்றி சென்றாயே. எப்பொழுதாவது அவனை எளிமையாக இருக்கப் பழக்கினாயா? நடந்து போகச் சொன்னாயா? வண்டியில் செல்லும் போதும் அவனிடம் ரோட்டில் சட்டங்கள் உண்டு. அதை எப்படி கையாள வேண்டும். வண்டிக்கு Licence எடுக்க வேண்டும். அதற்கு அவனுக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். இந்த விபரங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தாயா? பிள்ளைகளின் முகம் பார்க்கவே எங்களுக்கு நேரம் இல்லை. பேச எங்கு நேரம் என்று கேட்கின்றாயா? அதுவும் உண்மைதான். காற்றைத் (Air) தானே பிடுங்கி விட்டான். 5 வகுப்பு படித்திருந்தால், Scooterல் தீயே வைத்திருப்பான்'.
'டாக்டர்! நானே வேதனை அடைந்திருக்கின்றேன். நீங்கள் பேசுவது வேதனையை கிளறி விடுவதுபோல இருக்கு.
ஆம்.. உண்மை, எப்பொழுதும் நமக்கு வேதனையை கொடுக்கும். அந்த வேதனையில் உண்மையை நாம் ஏற்று, சிந்தித்து, அதை மாற்றி அமைத்தால், துன்பம் இன்பமாக மாறும். வேதனை தான் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். இதனால் தான் நான் ஆரம்பத்தில் கூறினேன்... யாருக்கு மருந்து கொடுக்க வேண்டுமென்று நான் சிந்திக்கிறேன் என்று...
'ஒன்றே போதும், இரண்டே போதும் என்று பெற்ற எல்லா தாய்மார்களும் இந்த கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி வரும். குழந்தையாக இருக்கும் பொழுது,
பிள்ளைகள் கேட்கும் பொழுதெல் லாம் உடனுக்குடன் வாங்கி கொடுத்து பிள்ளைகளை தன்னலமாக்கி விட்டீர்கள். அதனால் இவர்கள் வளர்ந்தாலும் "தான்”, "தனக்கு" என்ற சுபாவம் மாற போவதில்லை. உங்கள் பெற்றோரைப் போல பிள்ளைகளைப் பெற்று கஷ்டப்பட வேண்டாம் என்று நீங்கள் நினைத்தீர்கள். இப்பொழுது பிள்ளைகளால் கஷ்டப்பட போவதும் நீங்கள் தான். எப்படி இப்பேர்பட்ட குழந்தைகள் மற்றவர்களைப் பற்றி நினைக்கும்? மற்றவர்களோடு பகிரும் தன்மையும், மற்றவர்களோடு adjust பண்ணும் குணமும் எப்படி இவர்களுக்கு வரும்? வராது. டீச்சர் அம்மா வராது. அதை எதிர்பார்க்காதீர்கள்'.
‘டாக்டர் Please என் நெஞ்சு வெடித்து விடும்'.
'ஆமாம் கண்டிப்பாக வெடிக்கும். காலையிலிருந்து மாலை வரை இப்படி எத்தனை தாய்மார்களின் கண்ணீர் கதையைக் கேட்டு, கேட்டு என் நெஞ்சம் வெடித்து விட்டது. அந்த ரிசல்ட் தான் இந்த குமறல். எதை விதைத்தோமோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும். உன் வீடு மட்டும் அல்ல, பாரதமே இந்த குழந்தைகளின் விளைவை அனுபவிக்க போகின்றது. கடவுள் தான் பாரதத்தையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும். சரி! வா! இரண்டு பேருக்கும் மருந்து தருகின்றேன். நானும் உங்களோடு சேர்ந்து எடுக்காவிட்டால் என் ரத்த அழுத்தம் கூடி விடும்.'
ஆனந்தி
No comments:
Post a Comment