Thursday, February 24, 2022

அன்பை இழந்தோம் பயன்?

 Malarga Manitham Monthly Magazine -

May 2005
அன்பை இழந்தோம் பயன்?
ஆதி காலத்தில் பிரபஞ்சம் அமைதியாய் காணப்பட்டது. அதில் வாழ்ந்த உயிரினங்கள், புல் பூண்டுகள், செழுமையாய் வளர்ந்து மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்தன. இறைவன் எங்கும் உலாவிக் கொண்டிருந்தார்.
தற்பொழுது பிரபஞ்சம் அமைதியை இழந்து காணப்படு கிறது. அதில் வாழும் உயிரினங்கள் செழுமையை இழந்து வறட்சியுடன் இனி என்ன நிகழுமோ என்ற பயத்துடன் வாழ்ந்து வருகின்றன. கடவுளை இங்கு காண இயல வில்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கடவுள் மனிதனுக்கு கொடுத்த அறிவின் காரணமாக மனிதன் கடவுளையும் மிஞ்சுகிறான்.
உலகம் அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மனிதன் தன் மனம்போன போக்கிலே சென்று கொண்டிருக்கிறான். மனிதன் அமைதியை தேடுகிறான். அமைதி அவனுள்ளே காணப்படு கிறது. அதை புரிந்து கொள்ள இயலாத காரணத்தால் அங்கே, இங்கே என்று ஓடிக்கொண்டே இருக்கின்றான். ஒரு மனிதன் தன்னுள் அன்பு என்ற ஒன்றை குடியமர்த்தினால் போதும். மற்ற நற்பண்புகளும் தானாகவே வந்து விடும். கோபம், பெருமை, பொறாமை ஆகிய மூன்று தீக்
குணங்களும் அவனை ஆளும் போது அவன் கொலைகாரனாக, மிருக குணமுள்ளவனாக மாறு கிறான்.
ஒரு மனிதன் அழிவின் நேராக எவ்விதம் கடந்து செல்கிறான் என்பதை ஒருகணம் சிந்தித்து பார்ப்போம். (நீதிமொழிகள்: 27:4) கோபம்:
ஏழை விவசாயி ஒருவர் தன் மகன் படித்து கலெக்டராக வேண்டும் என்ற ஆசையில் இரவு பகலாக கஷ்டப்பட்டு உழைக்கி றார். மகனும் நன்முறையில் படிக் | கிறான். மேல்நிலைப் படிப்பை முடித்தபின்னர் கல்லூரியில் அவனை சேர்ப்பதற்காக தனக் கிருந்த விளைநிலத்தையும் விற்று கட்டணம் செலுத்துகிறார். கல்லூரி யில் சேர்ந்த சிறிது நாட்களில் பட்டணத்து வாலிபர்களின் சொகுசு வாழ்க்கையில் அடிமைப்பட்டு சீரழிகிறான். குடிக்கிறான். உலக சிற்றின்பத்தில் சிக்கி விட்டான். தாயும் தந்தையும் எவ்வளவோ எடுத்துக் கூறினார்கள். அவன் கேட்பதாக இல்லை. இறுதியாக ஒருநாள் தினமும் வாங்குவது போக செலவிற்கு தாயிடம் பணத்தை கேட்கிறான். தாயோ தன் நிலைமையை எடுத்து கூற அதை ஏற்றுகொள்ள முடியாத மகன் தன் தாயை கெட்ட வார்த்தை களால் அர்ச்சித்து
, அடித்து துவம்சம்
பண்ணுகிறான். அப்போது வெளியில் சென்றிருந்த தந்தை வந்து தட்டிக் கேட்க மகன் கோபத் தால் அருகிலிருந்த ஆயுதத்தால் தந்தையின் தலையில் பலமாக அடிக்க, அவர் அதே இடத்தில் மரணமடைந்தார். தாயோ அலறி துடிக்கிறார். மகன் கம்பிகளுக் கிடையில், கணவன் - பிணமாய். மகன் கோபம் தணிந்து தான் கோபத்தில் செய்ததை நினைவு படுத்தி அழுகிறார். "ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டேனே" என்று முகத்திலறைந்து கதறி அழுகிறார்.
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் இந்த சம்பவங்கள் தான் அரங்கேறிக் கொண்டிருக் கின்றன. ஆத்திரத்தில் பெற்ற மகளையே கொன்ற தந்தை, மனைவி - கணவன், மகன் தந்தை இன்னும் எத்தனை எத்தனையோ, இதன் பின்னணி தான் என்ன? சாந்த குணமுள்ள மனிதனை கோபமானது தன் தீவினையை செய்ய தூண்டும் போது அவன் கோபத்திற்கு அடிமையாகிறான். இதனால் பலன் என்ன? தங்கள் வாழ்க்கையை இழந்து அழிவு நிலையை நோக்கி சென்று விட்டார்கள். ஒரே ஒரு நிமிட கோபத்தை அடக்கிக் கொள்பவன் இந்த உலகத்தையே ஆள்பவனா கிறான்.
"சிந்தையில் ஒருமனப்படு செயலில் அதை செய்துகாட்டு அப்போது அமைதி தானாய் உன்னில் சேரும்".
"கோபத்தை விவேகத்தால் வென்றுவிடு"!
பெருமை:
"தேவன் பெருமையுள்ள வனுக்கோ எதிர்த்து நிற்கிறார்". ஐசுவரியவான் ஒருவன் தன் மக்களை அடிமைப்படுத்தி அவர் களை கசக்கி பிழிந்து அறுவடைக் காலத்தில் நெல்லை தன் களஞ்சி யத்தில் சேர்த்து வைக்கிறான். களஞ்சியத்தில் நிரப்பியது போக நிறைய நெல் மூட்டைகள் மீதம் காணப்படுகின்றன. அப்போது இரவு படுக்கும்போது ஐசுவரிய வான் தன் சிந்தையில் "என் களஞ்சியத்தை இடித்து இன்னும் பெரியதாக கட்டுவேன்" என்று எண்ணிக் கொண்டு படுக்கையில் துயில்கின்றான். அவனது கனவில் கடவுளது குரல் கேட்கின்றது. மதிகேடனே! இன்று இராத்திரி யிலே உன்னுயிர் உன்னைவிட்டு பிரிந்து விடும். நீ சேமித்தவைகள் யாருடையதாகும்!” என்று கேட்கி றார். பாருங்கள் இவ்வுலக சொத்துக்கள் மாயை. அவை பூச்சியும் பொட்டும் அரித்து விடும். திருடனும் கொள்ளையடிப்பான். தேவனுடைய ராஜ்யத்திற்கு வேண்டிய சொத்துக்களை சேகரித்து வையுங்கள்.
நேபுகாத் நேச்சர் என்னும் அரசன் பெருமை கொண்டு மகா பாபிலோனை கட்டி முடித்தான். அவனது பெருமையினால் மகா பாபிலோன் முறியடிக்கப்பட்டது. ராஜாவாகிய நேபுகாத் நேச்சர் "மிருகங்களை போல் புல்லைத் தின்றான்". தாழ்மையுள்ளவர் களுக்கோ தேவன் கிருபையளிக் கிறார். பெருமையை உன்னில்
அழிக்கும் போது நீ தேவனுடைய புத்திரனாகிறாய். பொறாமை:
"பொறாமைக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்?" ஆதி காலத்திலிருந்தே பொறாமை என்ற பாவம் எழுந்தது. ஆதி மனிதனான காயீன் தன் தம்பி தேவனுடன் பிரியமாய் இருப் பதைப் பார்த்து பொறாமையினால் கொலை செய்தான். தன் பாவத்தை மறைக்க மேலும் மேலும் பல பாவங்கள் செய்தான். அன்று முதல் இன்று வரை பாவத்திலே மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
யாக்கோபின் மக்கள் தன் தகப்பன் தம்பியின் மேல் பிரியமாய் இருப்பதைப் பார்த்து கொலை செய்ய வகை தேடி அன்னியருக்கு அவனை விற்றுப் போட்டார்கள். பாருங்கள் பொறாமையின் மூலம் எதிர்வரும் பேராபத்துக்கள். ஆனால் தேவனை யோசேப்பு இடைவிடாது பற்றிக் கொண்டிருந்த காரணத்தினால் தேவன் அவனுக்கு நன்மையே செய்தார்.
நாம் நம்முடைய வாழ்க்கை யில் உலகப் பிரகாரமான பாவங் களினால் நம் உடல், உள்ள, ஆன்மாவை கெடுத்து விடுகின் றோம். இதை விட்டு விட்டு அமைதி யான தியானத்தின் மூலம் இறைவனை தியானித்து நம் வாழ்வை வளப்படுத்துவோம்.
இந்த மூன்று குணநலன்களை விட்டு விட்டு கடவுளை பற்றிக் கொண்டு வாழ்ந்தால் நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்போம்.
HUE மாணாக்கரே! நாம் நம்முடைய குணநலன்களில் அன்பு போன்ற நற்குணங்களால் நம்மை நிரப்பி, தீய குணங்களை வெளிவிடுவோம். இம்மூன்று தன்மைகளையும் மன்னித்து, மறந்து, ஏழைகளோடு ஒத்து பணி செய்யும்போது, கடவுள் நமக்கு தந்திருக்கும் குணமளிக்கும் வரத்தை, மென்மேலும் அவருடைய நாமம் விளங்க அதிகரிப்பார்.
"செயல்கள் மனிதனுடை யவை அல்ல!
அவை தேவனுடையவை!"
HUE மாணாக்கரே!
சிந்திப்பீர்!
செயல்படுவீர்!
ஆசிரியர்

No comments:

Post a Comment

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...