Thursday, February 24, 2022

நம் முன்னோர்களின் ஞானத்தின் விழிப்புணர்வு

 Malarga Manitham Magazine (June, 2016)

நம் முன்னோர்களின் ஞானத்தின் விழிப்புணர்வு
சளிக்கு எளிய மருத்துவம்
குழந்தைகளின் கபநோய்களை தீர்க்க
உதவும் எளிய மருத்துவ முறைகள்:
1. துளசியினை சுத்தமாக எடுத்து வந்து சாறு எடுத்துக் கொடுக்க சளி சரியாகும்.
2. தூதுவளை இலையை அரைத்து பசும்பாலுடன் கலந்து தரலாம்.
3. துளசியை ஆவியில் வேகவைத்து சாறு எடுத்து, சிறிது மிளகு சேர்த்து கொடுக்கக் குணமாகும்.
4. தூதுவளை, புதினா, கொத்த மல்லி, மிளகு, இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து கடு சாதத்துடன் தர கபம் அகலும்.
5. ஆடாதோடை இலையை சாறு எடுத்து, தேன் கலந்து சாப்பிட சளி இருமல் குறையும்.
6. ஓமவல்லி, கற்பூரவல்லி இலை களை சாறு எடுத்து தர சளி குறையும். ஓமவல்லி, கற்பூரவல்லி இலைகளை சிறிய துண்டுகளாக்கி இட்லி அல்லது தோசை மாவுடன் கலந்து காலை பலகாரத்துடன் உண்ணலாம்.
7. தூதுவளை பழங்களை தேனில் போட்டு வைத்து சாப்பிட சளி குறையும்.
8. வில்வ இலையுடன் மிளகு சேர்த்து அரைத்து சாப்பிடலாம்.
9 கரிசலாங்கண்ணி இலையுடன் மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட சளி வெளியேறும்.
10. விஷ்ணுசக்தி செடியை நிழலில் உலர்த்தி, பொடி செய்து வெந்நீரில் சாப்பிட சளி, காய்ச்சல் குணமாகும்.
11. மருள் பட்டையின் சாறுடன் சுக்கு, மிளகு, பூண்டு சிறிது கலந்து அரைத்துச் சாப்பிட கபம் கலைந்து வெளியாகும்.
12. குப்பைமேனி இலையுடன் மிளகு, பூண்டு சிறிது கலந்து அரைத்துச் சாப்பிட கபம் வெளியேறும்.
13. அதிமதுர வேர்த்துண்டை வாயில் அடக்கிக் கொண்டு சுவைக்கு சளி, இருமல், தொண்ட கரகரப்பு
அகலும். 14. முற்றிய வெண்டைக்காய் சூப் இருமலைக் குறைக்கும்.
15. துளசியில் வகைகள் பல உண்டு. கருந்துளசியில் காரம் அதிகம். சளியை விரைவில் வெளியேற்றும்.
16. சுக்கு, மிளகு, திப்பிலியை பொடித்து திரிகடுகு என்று ரெடிமேடாக கிடைக்கிறது. இத்துடன் சிறிது துளசிச் சாறும், தேனும் கலந்து சாப்பிட சளி, இருமல் அகலும்.
17, நெல்லி வற்றல் சூரணம் என்று நாட்டு மருந்து கடையில் கிடைக்கிறது. அரை தேக்கரண்டி முதல் ஒரு தேக்கரண்டி வரை வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட உடலும் தேறும். சளியும் அதலும். நெல்லிக்காய் லேகியமும் தொடர்ந்து உண்டு பயனடையலாம்.
'முள்ளங்கி'யின் மகத்துவம்
கமகம் என்று மணக்கும் முள்ளங்கி சாம்பார் வைத்தால் ஒரு பிடி பிடிக்கச் சொல்வதற்கு காரணம் அதன் சுவைதான். முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் நம் பசியை தூண்டி, சாப்பிட்டவுடன் திருப்தியையும் தரும். வெள்ளை முள்ளங்கியும், ரோஸ் கலர் முள்ளங்கியும் உண்டு. கலர் வேறுபட்டாலும் பலன் ஒன்றுதான். முள்ளங்கியில் அதிக அளவு இரும்பு, கால்சியம், சோடியம் போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் நீர்க்கடுப்பையும், நீர் கட்டையும் மாற்றும்,
முள்ளங்கியை உரலில் போட்டு இடித்துப் பிழிந்து சாறு எடுத்து தினசரி காலை வேளையில் 6 தேக்கரண்டி அல்லது 100 மிலி அளவு சாப்பிட்டால் சிறுநீரக
கோளாறுகள் ஐந்து நாட்களில் மாறுவதை காணலாம். சிலருக்கு சதா வயிற்று வலி இருந்துகொண்டே இருக்கும். மருந்துகள் சாப்பிட்டும் தீராது. அப்படிப்பட்டவர்கள் முள்ளங்கி சாறு எடுத்து ஏழு நாட்கள் சாப்பிட்டால் தீராக வயிற்றுவலி தீரும். காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி போதும் பலன் கிடைக்கும்.
முள்ளங்கி குளிர்ச்சியூட்டும் கிழங்கு என்பதால் நீர்க்கடுப்பு நோயினால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி உண்ணலாம். 50 மில்லி ஜுஸுடன் நிறைய நீரும் அருந்த வேண்டும். மூத்திரக்குழாயில் கற்கள் உருவானாலும் மூத்திரப்பை வீக்கத்திற்கும் முள்ளங்கி இலை ஜூஸ் 10 நாட்கள் தினமும் 100 மில்லி அருந்தலாம். படிப்படியாக வீக்கம் குறைவதுடன் சிறுநீரகக் கற்களும் கரைந்து சிறுநீர்ப்பாதை சீர்படும்.
கக்குவான் இருமல், தொண்டை கம்முதல் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாற்றுடன் ஒரு ஸ்பூன் தேன், சிறிது கல் உப்பு மூன்றும் கலந்து மூன்று வேளை சாப்பிட நோய்கள் கட்டுப்படும். மஞ்சள் காமாலை நோயினால் அவதிப்படுபவர்கள் முள்ளங்கி இலைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு இடித்து சாறு பிழிந்து அதனுடன்சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் 300 மில்லி லிட்டர் ஜுஸ் சாப்பிட்டால் நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
இந்த முள்ளங்கி ஜூஸ் பசியைத் தூண்டி உடல் கழிவுகளை அகற்ற துணை புரிகிறது. இத்துடன் கொழுப்பில்லாத உணவு வகைகளை மோர், இளநீர், கரும்பு ஜுஸ், சாத்துக்குடி ஜுஸ் போன்றவற்றை அளவாக சாப்பிட்டு உடல் உஷ்ண நோய்களை மாற்றனாம். முள்ளங்கியின். விதைகளை நன்றாக பொடி
செய்து வினிகருடன் கலந்து ‘நூக்கோடெர்மா' என்ற வெண்குஷ்டம் உள்ள இடங்களில் தடவி வந்தால் இந்நோய் சரியாகும். இத்துடன் கீரைகளும், பழங்களும், அதிக அளவு உண்ண வேண்டும். முள்ளங்கி இலைகளை நிழலில் உலர்த்தி பவுடராக்கி சம அளவில் சர்க்கரை கலந்து ஒரு டீஸ்பூன் அளவில் காலை. மாலை இருவேளை தொடர்ந்து சாப்பிட மூலநோய் குணமாகும்.
மேலும் முள்ளங்கி சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்த்தடை, ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசகாசம், கபநோய். இருமல் ஆகியவையும் தீரும். கிழங்குகளை இரவில் உண்பது தவிர்க்கவும்.
M. விக்டர் மாசிலாமணி

No comments:

Post a Comment

மனித பிரபஞ்ச சக்தி தியானம்

 அன்புள்ள சகோதர சகோதரிகளே நமஸ்தே! நாம் அனைவரும் உடல் அளவிலும் மன அளவிலும் ஆன்ம அளவிலும்  நலமாக இருக்கிறோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டுகி...