Malarga Manitham Magazine- May 2005
உலகம் உன்னை நோக்கும்
பிரபஞ்சம் உள்ளே
பிறக்கும் உயிர்களே சக்தி தவழும் வேளையிலே
சாந்தம் தரும் நிலையிலே பகல் இரவு சூழும்வேளை
வெளிச்சம் இருட்டு நிற்கும் நிலை ஆணும் பெண்ணும் ஓடிவர
நேர்மறை எதிர்மறை பின்னி அமைதி கலவரங்கள் வெடிக்க
உயர்வும் தாழ்வும் தீண்ட வெண்மை கருமை மாற
தர்மம் அதர்மம் சூழ பருவங்கள் சுழன்று வர
மணி கணக்கில்
நாட்கணக்கில்
மாத கணக்கில்
வருட கணக்கில்
யுகம் பிறக்க ஞானம் பெற
ஞானத்தில் திளைக்க பக்குவம் மலர
பண்பட்ட மனம் வர
மனமே! கேள்! நீ யார்?
நீ எங்கிருந்து வந்தாய்? உலகம் எங்கே?
உன் பிறப்பு, இறப்பு என்ன? தொடக்கம் உண்டா?
முடிவு உண்டா?
கடலை நோக்கி நதிகளும்
விளக்கை நோக்கி ஒளியும் இறைவனை எதிர்காண மனிதம்
இல்லத்தில் சிறக்க இன்முகம் மலர
அன்பு தவழ ஆசை பிறக்க
அமைதி என்றும் இருக்க
உணர்வுகள் மலர
உறவுகள் தாங்கிட உள்ளத்தை ஊன்றி
உண்மையில் நிரப்பி ஆன்மாவை அறியும்
ஆண்டவனை தேடும் ஒளியே! நீ பிரகாசம்
ஒளிரும் சுடரே தெய்வமே நீ எங்கும்
தென்றலிட்டு காண்கிறாய் உன் உண்மை நிலை என்ன?
உன் ஆற்றல் உன் பிறப்பின் ரகசியம் என்ன?
இறைவனை தேடு என்றும் சமநிலையோடு இரு
எதிலும் நோக்கு உன்னை ஆராய்ந்து அறி
உணர்வுகளால் மேம்படுத்து உலகை வெல்
உலகம் உன்னை அறியும்.
-S.ஜாண்சன்,
நிலை 5, திருச்சி.
No comments:
Post a Comment