Thursday, February 24, 2022

சிந்தனையின் சிதறல்கள்

 Malarga Manitham Monthly Magazine -May 2005

சிந்தனையின் சிதறல்கள்
இறைவாக்கியம்: Lk. - 23:26 இறைமகன் இயேசுவுக்கு “Ego" இல்லை என்பதற்கு மேலே கூறிய வாக்கியங்கள் தெளிவு தருகின்றன. நாமாக இருந்தால் என்ன சொல்லி இருந்திருப்போம். "மக்களுக்கு இத்தனை நன்மை செய்தும், இவர்கள் என்னை அடித்து, மிதித்து விட்டார்களே. நன்றி கெட்டவர்கள்" என்ற கோபத்தில், ஆங்காரத்தில், இந்த போர்வீரர்கள் சிலுவையை இவனிடம் கொடும் என்று சொன்ன உடன். எனக்கு தூக்க முடியும் உன் ஜோலியை பார், அல்லது "இத்தனை தூரம் தூக்கி வந்த எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் தூக்க முடியாதா" இல்லை. தர முடியாது போ என்று பல விதத்தில் நாம் செயல்பட்டிருப் போம். ஆனால் இறைமகன் உடனேயே சிமியோனிடம் சிலுவையை கொடுக்கின்றார். ஏன்??? மனிதனின் உடல் பல வீனத்தை இது காட்டலாம்... இயேசுவாக மாறி நம் கற்பனை யில் சிந்தித்துப் பார்ப்போமா....
இந்த சிலுவை மரத்தில் உன் பங்குமுண்டு... சிலுவையை கொடுத்து விட்டு அவர் முன்பே செல்லுகின்றார்....சிமியோன் பின்னே செல்லுகின்றார்...? காரணம்... உன் வாழ்க்கை சுமையை நீ சுமந்து கொண்டு என் பின்னே வா... பச்சை மரத்திற்கே
இப்படி என்றால் பட்டமரமான உங்களுக்கு என்ன கேடோ....? அதனால் அந்த கஷ்ட காலத்தில் இதை நினைவு கூறுங்கள். இந்த காட்சி உங்கள் கண்முன் இருக்கட்டும். பச்சை மரம் என்ன என்ன பாடுகள் பட்டிருக்கின்றது....?
உலகத்தின் பாரத்தை தன் தோளில் சுமந்திருக்கின்றது. மூன்று வருடங்கள் உடன் இருந்து உண்டு, மகிழ்ந்தவனே காட்டி கொடுக்கின்றான். எவ்வளவு மன வேதனை.
உனக்காக நான் என் உயிரை கொடுப்பேன் என்று சொன்ன வன்- மறுதலிக்கின்றான். யாரையும் நம்ப முடியவில்லை என்று நினைக்கும் பொழுது எண்ணத்தில் எத்தனை வேதனை? இயேசுவின் அன்பை அனுபவப் பட்டவர்கள் தொட்டு சுகமளிக் கும் பயனை அடைந்தவர்கள் கூட மக்களுக்கு பயந்து இவரை கொல்லும் என்று கூச்சல் இடுகின்றார்கள். நெஞ்சில் இதுபோல வாள் ஊடுருவ வேண்டுமா?
இறை சித்தத்தை செய்வதில் நான் தனித்து நிற்கின்றேன். என் தந்தையே எனக்கு துணை அவர் என்னை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை. நாளை இதுபோல நீ அனுபவப் படும் பொழுது இதை மறந்து விடாதே. இறை சக்தி உன்னை கைவிடாது! இழக்காதே!.
நம்பிக்கையை •
• அப்பா என்னை கைவிட்டீரோ.. தனிமை வாட்டும் பொழுது, தாங்காத துயரங்கள், வேதனை களை அனுபவிக்கும் பொழுது அப்பா என்று கூவி அழ, அவர் சக்தி உன்னை நிரப்பும். சுமக்க கை கொடுக்கின்றான். ஆம்! நாளை, உன் நம்பிக்கையை நீ இழக்கும் போது இறைவன் நீ எதிர்பார்க்காத ஆளை வைத்து உனக்கு ஆறுதல் கொடுப்பார். கை கொடுப்பார். "தன் மானம்" என்றும், நாம் சொல்லும் தனித்தன்மையின் எண்ணங்கள், செயல்கள் முழுமையாக போய் விட்டது. இது கடவுளின் சித்தம் தான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கின்றேன்.
தவறே செய்யாத பொழுது - நீ சட்டத்திற்கு விரோதமாக குற்றம் செய்தாய் என்று குற்றச் சாட்டுகள் - செய்யாததை நீ செய்தாய் என்று மற்றவர்கள் சொல்லும் பொழுது மௌன மாக இரு. உண்மை எப்படியும் வெளியே வரும்.
இவன் பொய் சொல்லுகின்றான் என்று பொய் சாட்சி சொல்லும் பொழுது மௌனம் காத்து அன்பு சக்தி அனுப்பு.
உனக்கு எதிராக ஒரு குழுவை ஏற்படுத்தி இறை சித்தத்தை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தும் பொழுது இல்லை . இவன் மேல் எப்படியாவது குற்றம் கண்டு பிடிக்க வேண்டு மென்று அலைந்து திரியும் பொழுது - விவேகத்துடன் பேசி, நடந்து கொள். தாழ்ந்து போ. இந்த இடத்தில் உன் உணர்ச்சி அல்ல. உன் தனித் தன்மை அல்ல. உன் ஆன்மீகம் உன்னை வழி நடத்தட்டும்.
• உன் எதிரிகளுக்கு அன்பு செய். தெய்வீக தன்மையின் முழுமையை நீ அறிய வேண்டு மென்றால், "அப்பா இவர்கள் செய்வது என்னவென்று இவர்கள் அறியவில்லை... அதனால் இந்த குற்றங்களின் கனாகனம் இவர்களிடம் சேர வேண்டாம். நாமாக இருந்தால் சபித்திருப்போம். கடவுள் தண்டனை உன் மேல் வரட்டும் என்று கூறி இருப்போம். சிறிய, சிறிய காரியங்கள் நமக்கு நடக்கும் பொழுது நம் எண்ணத்தில் இதை கூறி கூறி இப்பொழுதே தயார் ஆக்கி கொள்வோம். அப்பொழுது நாம் நினைக்காத நேரத்தில் பெரிய காரியங்கள் நடக்கும் பொழுது பச்சை மரம் கூறியது போல நாமும் கூறலாம்.
Selvabirland, Mercy Anjelina and 1 other
Seen by 29
Like
Comment

0 comments

No comments:

Post a Comment

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...