Malarga Manitham Monthly Magazine -May 2005
வாழவிடு
நில நடுக்கம்... நீர் நடுக்கம்... நெஞ்சை உறைய வைக்கும் உயிர் நடுக்கம்...
கடலுக்குள் காலன் வந்து.... அலையனுப்பி ஆருயிர்கள்
அலையெனவே உயர்ந் தெழுந்து.... குலையாக மனிதர்களை....
வளைத்துப்போன கடல் நடுக்கம்... விடிந்து விட்ட பொழுதினிலே.. எழுந்திட்ட பல உயிரும்
எதிர்பாரா நிமிடம் தனில்... அழிந்துவிட்ட சோகம் தனை மறந்திடவும் முடியாதே....
கடலுக்குத் தாகம் வந்து....
கடமையை அது மறந்து....
ஆணவ வெறி கொண்டு... இங்கே...
பிணமாக்கிப் போய்விட்ட...
கணங்களின் கோரம் தன்னை.....
கண்டிடவும் முடியாதே...... அம்மா பால் வேண்டும்......
அப்பா பணம் வேண்டும்..... கண்ணே நீ வேண்டும்...
மகனே உம் தயை வேண்டும் - வேறுபட்ட பந்தங்களை....
ஈவிரக்கம் ஏதுமின்றி..... சாதிமத பேதமின்றி...
சவமாக்கிப் போன அந்த.... சுனாமிப் பேரழிவை...
சொல்லியழ முடியாதே....
உப்பு முதல் முத்து வரை அடி முதல் ஆழம் வரை அள்ளிக் கொடுத்த கடல் தாயும்....
அள்ளிக் கொண்ட கள்ளம் தனை விளக்கிடவும் முடியாதே..... இன்றிருப்பார்... இனியில்லை...
வாழ்வுனக்கு நிலையில்லை..... அத்தனையும் மாயைகளே
ஆடாதீர் மனிதர்களே... என்ற அழுத்தமான வரிகளையே
அலையெனும் வடிவம் கொண்டு உணர்த்திடவே ஓடி வந்த
இறைவனது நாடகமோ.... முறையற்ற பேரழிவும்...
இந்த
விதியென்று நீ காட்டும் விளையாட்டும் போதும்...போதும்...
இயற்கைக்கு வரம் கொடுத்து ஏவிவிட்ட துயரம் போதும்....
இனி நீ செய்வதெல்லாம்.....
இரண்டல்ல
ஒன்றுதானே....
ஐம்பூத பேரழிவை அச்சமின்றி
ஏவிவிட்டு
மிச்சம் மீதி வைக்காமல்..... அத்தனையும் அழித்துவிடு....
இல்லையேல்....
இயற்கையால் அழிவுகளும் இனி இல்லை என்று கூறி.... சத்தியமாய் முடிவெடுத்து....
நித்தியமாய் வாழவிடு......
என
சுகந்தி,
ஆசிரியை, சிறுகனூர்.
No comments:
Post a Comment