Malarga Manitham ( May 2015 )
நம் முன்னோர்களின் ஞானத்தின் விழிப்புணர்வு
வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சாக வேண்டியதுதான் என்று கிராமங்களில் விரக்தியாகச் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சில இடங்களில் அதை நடைமுறையிலும் பார்க்க முடிகிறது. ஆனால் நம் முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள். மருந்தே உணவாக இருந்தது என்று கூடச் சொல்லலாம். அவர்களது சமைய லறையில் மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன. மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி என்று பல் மூலிகைப் பொருட்களை உணவில் பயன்படுத்தினர். இவைகளைப் பயன்படுத்தி குழம்பு, ரசம் எல்லாம் சமையல் செய்தனர். மஞ்சள் பொடி முக்கிய இடம் வகித்தது. அது உணவுப் பொருள் வேகும் போது சத்துக்களை இழந்துவிடாமல் இருக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், கிருமிநாசினியாகவும் பயன்பட்டது. துவரம் பருப்பை அவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளவில்லை. பாசிப்பயிரையே அவர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர். காரம் தேவைப்படும் போதெல்லாம் மிளகையே பயன்படுத்தியுள்ளனர். கறிவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி
போன்றவற்றையே விருந்தினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
உளுந்தை அவர்கள் குறைவாகவே உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். காலையில் நீராகாரத்தை உண்டனர். தயிரைவிட மோர் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இரவு செப்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசியைப் போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து அந்த நீரைப் நகிவிட்டு தியானத்தில் பரு அமர்ந்திருக்கிறார்கள். மேலும் வாழையிலை, வாழை மரப்பட்டைகள் இணைந்த ஏடுகள், மந்தார இலை இவற்றையே உணவு உண்ண பயன்படுத்தி இருக்கிறார்கள். மற்ற உலோகங்களில் சூடான உணவை போடும் போது ஏற்படும் இரசாயன மாற்றம் இந்த இலைகளில் ஏற்படுவ தில்லை. மாறாக நன்மையே செய்கிறது என்று அறிந்து வைத்திருந்தார்கள்.
மதிய உணவுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வேறு
எதையும் உட்கொள்ள மாட்டார்கள். உணவுக்கு முன் நீர் அருந்தினால் அது ஜடராக்கினியை அவித்து விடும் என்று உணவுக்கு முன் நீர் அருந்த மாட்டார்கள். எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப் பண்டங்கள், கடின முயற்சியால் ஜீரணமாகும் உணவுப் பண்டங்கள் என்று அவர்கள் உணவு பிரிக்கப்பட்டிருந்தது. பசியினால் சுருங்கியிருக்கும் உணவுக் குழாயில் சேதம் ஏற்பட்டு விடும் என்பதால் பரிமாறி முடிக்கும் வரை உணவை தொடமாட்டார்கள். உண்ணும்போது அந்தக் குழாயை சிறிதுசிறிதாக அகலப்படுத்தும் முறையாகவே அவர்கள் உணவுப் பழக்கம் இருந்தது. இலையில் பதார்த்தங்கள் பரிமாறியதும் சாதம் வரும். அதற்கருகிலேயே பருப்பு வைக்கப்படும். நெய்யை சாதத்தின் மீது ஊற்றிய பின்னர் உண்ணத் துவங்குவார்கள். அதுவும் முதலில் சிறிதளவு நீரைக் கையில் எடுத்து இலையைச் சுற்றி ஊற்றிவிட்டு மீதம் உள்ள துளிகளைப் பருகுவார்கள். இலையைச் சுற்றி ஊற்றுவதால் இலைக்கு சிறு பூச்சிகள் எறும்பகள் வராது.
மீதமுள்ள துளிகளைப் பருகுவதால் அது சுருங்கிய உணவுக் குழாயில் ஈரப்பசையை உண்டாக்கி முன் செல்லும். இப்படி நீரால் சிறிது உணவுக் குழாய் விரிவடையும் போது, பருப்பு நெய் கலந்த சாதத்தை உண்ணுவார்கள். அது நெய்யினால் வழுக்கிக் கொண்டு போவதுடன் உணவுக் குழாயை மேலும் விரித்து விடும். பருப்பு ஜீரணமாக அதிக சக்தி தேவை எப்தால் ணவு உஷ்ணமாக இருக்கும் போதே பருப்பு மற்றும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு
விடுவார்கள். இந்த இரண்டு உணவுகளுக்குமே ஜீரண சக்தி அதிகம் தேவைப்படும் என்பதால் அடுத்ததாக எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் மருத்துவ குணமுள்ள ரசம் சாதத்தை உண்பார்கள். அடுத்து மோர் சாதம். இது உணவைப் புளிக்க வைத்து எளிதில் ஜீரணமாக உதவும். அதற்குத் துணையான ஊறுகாய்களும், அதிலுள்ள அமிலத் தன்மை (எலுமிச்சை, நார்த்தை) உப்பு, மிளகு போன்றவைகளும் மேலும் ஜீரணத்திற்கு உதவும். பண்டைய காலங்களில் ஊறுகாய்க்கு கடுகு எண்ணெயும், மிளகுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது.
இதை இவ்வளவு விரிவாக ஏன் சொல்கிறேன் என்றால், இன்றோ நாகரீகம் என்ற பெயரில் மசாலா வாடைக்கு மயங்கி, கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட உணவுகளை உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம். இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க, திட்டமிட்ட உணவுப் பழக்கங்களைக் கையாண்டதும் நம் முன்னோர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
வாய் துர்நாற்றம் போக்கிட - புதினா!!
சிலரிடம் பேசும் பொழுது துர்நாற்றத்தால் முகம் களிக்க வேண்டி வரும். அதற்கு மட்டும் அல்ல கிட்னி, பிளாடர் போன்றவற்றில் தோன்றும் கற்களையும் கரைக்க வல்லது புதினாக் கீரையாகும். இதை ஆங்கிலத்தில் மின்ட் என்று அழைப்பார்கள். மனதை மயக்கும்
வாசனையும் அழகிய இலைகளையும் உடையது மட்டுமல்ல. இது நாக்கில் உள்ள சுவை மொட்டுகளில் பிரச்சினை ஏற்பட்டாலும் அந்நிலையை மாற்றி சுவையை தருகிறது, இதை துவையல் செய்து சாப்பிடுவது அனைவரும் உபயோகிப்பது நாம் அறிந்ததே.
புதினாவின் பூர்வீகம் ஐரோப்பா. கிரேக்கர்களும், ரொமானியர்களும் புதினாவைப்பற்றி அறிந்திருந்தனர். யுனானி மருந்துகளில் புதினா ஓர் முக்கிய இடம் பெறுகிறது. நூறு கிராம் புதினா இலையில் தண்ணீர் சத்து, புரோட்டின், கொழுப்பு, தாதுக்கள் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மேலும் வைட்டமின் 'சி' சத்தும் மற்றும் பி, டி, இ ஆகியவைகளும் உள்ளது. விலை மலிவான புதினாவில் தாதுக்களும், வைட்டமின்களும் அதிகமாக இருப்பதால் பல வகையான சத்துணவுகளிலும் சாக்லேட்களிலும், பற்பசை, மருந்துகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருந்துகள் இனிப்புகள் ஆகியவற்றிற்கு பயன் படுகிறது. வயிற்றுவலி, அஜீரணக் கோளாறுகள் போன்றவை சம்பந்தமான
மருந்துகள் அனைத்திலும் புதினாவே முதலிடம் வகிக்கிறது.
கிட்னி, பிளாடர் போன்றவற்றில் தோன்றும் கற்களை கரைக்கும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. புதினா ஒரு சிறந்த பசியூக்கி. புதினா ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், தேன் ஆகிய மூன்றும் கலந்து உணவு உண்பதற்கு முன் மூன்று வேளை சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு, கோடை கால வயிற்றோட்டம், அசிடிட்டி, வயிற்று உப்பிசம், நூல் புழு, கர்ப்பகால வாந்தி ஆகியவை சரியாகும்.
காசநோய், ஆஸ்துமா உள்ளவர்கள் புதினா ஜூசை கேரட் ஜூசுடன் தேன் கலந்து பருக தொண்டை, நுரையீரலில் கட்டிக் கொண்டிருக்கும் சளியை அகற்றிவிடும். புதினாவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நம் உணவிலும், டீயுடனும் பயன்படுத்தி பலன் பெறலாம். வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கிருமிகளை புதினா எலுமிச்சை சாறு கலந்த பற்பசைகள் அழிப்பதுடன், பற்கள் சொத்தை ஆவதை தடுத்து ஈறுகள் பலம் அடைய துணைபுரியும்.
பாட்டுப் பாடுபவர்களும், ஆசிரியர்களும், அதிகமாக பேசக் கூடிய தொழில் செய்பவர்களும் தினமும் புதினா ஜூசை நீருடன் கலந்து வாய் கொப்பளித்தால் அவர்களுக்கு தொண்டை அடைக்காமல் பேசமுடியும். புதினா இலைகளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் சுத்தமான தண்ணீரால் கழுவ பருக்கள், மருக்கள் மறைவதுடன் முகம் பளபளவென்றிருக்கும்.
புதினாக்கீரை இரத்தத்தை சுத்தம் செய்து மேலும் இரத்தத்தை உற்பத்தி செய்யும். வாய்வுகளைப் போக்கும் சக்தியுடையது. வயிற்றுக்கும் குடலுக்கும் வலிமை தரும். பேதியை குணமாக்கும்.
புதினா சாற்றை நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும். புதினா இலைகளை நசுக்கி முகர்ந்தால் மயக்க நிலை மாறும். புதினா இலைகளை நீரில் ஊறவைத்து அந்த நீரை ஜூரத்திற்கும், அஜீரணத்திற்கும் பயன்படுத்தலாம். சிறுநீரக கோளாறுகளையும், ஈரல் சம்பந்தப்பட்ட பிணிகளையும், ஆஸ்துமா நோயையும் புதினா அகற்றும். இக்கீரையை சுத்தப்படுத்தி பச்சையாகவே சாப்பிடலாம். புதினா இலைகளை நைத்து தண்ணீரில் இட்டு நீர் பாதியளவாக சுண்டக் காய்ச்சி கஷாயம் தயாரித்தும் பயன்பெறலாம். புதினாக் கீரை, உடலுக்குக் சூடு தரவல்லது. மூல ரோகிகளுக்கு இக்கீரை ஆகாது.
புதினாவை வேருடன் எடுத்து சுத்தம் செய்து, காயவைத்து இடித்து சலித்த சூரணத்துடன் அரிசி திப்பிலி சூரணத்தையும் சேர்த்து தினசரி காலையிலும் மாலையிலும் தேன்விட்டு குழைத்துச் சாப்பிட்டால் விக்கல் வியாதி நிற்கும். புதினா சூரணத்தைக் கொண்டு பல்துலக்கி வந்தால், பல், ஈறு வியாதியும் நீங்கிவிடும்.
M.விக்டர் மாசிலாமணி
No comments:
Post a Comment