Thursday, February 24, 2022

கேள்வி/பதில்

 Malarga Manitham ( May 2015 )

கேள்வி/பதில்
கேள்வி:நண்பன் என்று ஒரு நபரிடம் பழகுகின்றோம். நம்பினேன். என்னை அவன் ஏமாற்றி விட்டான். இவன் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டான் என்று விலகி இருந்தேன். HUE க்கு வந்த பிறகு அவனை மன்னித்து, பழகினேன். மீண்டும் அவன் எனக்கு துரோகம் செய்து விட்டான். பின் மன்னித்து என்ன பலன்? மீண்டும் நண்பனாக எடுத்து பழகினதின் பலன் என்ன? அவன் திருந்தவில்லையே. இதற்கு உங்கள் விளக்கம் என்ன?
பதில் : இந்த கேள்வியை நான் மூன்று, நான்கு பகுதியாக பிரித்து விளக்கம் தருகின்றேன். 1. நண்பன் யார்? 2. அவன் உன்னை ஏபாற்றினானா? இல்லை நீ ஏமாற்றப்பட்டாயா? ஏமாற்றியது யார்? 3. அவனை நீ மன்னித்ததால் அவன் திருந்தி விடுவானா? 4. மன்னிப்பு என்றால் என்ன?
1. நண்பன் யார், நீ எப்படி நண்பனை தெரிந்து கொள்கின்றாய் என்பது தான் கேள்வி.
நண்பர்களை நான் ஐந்து வகையாக பிரிக்கின்றேன். 1. கொடுத்து, வாங்குதலில் ஏற்பட்ட நட்பு - நண்பனாக மாறியது. 2.
பயணத்தில் பழகி நண்பனாக மாறியிருக்கலாம். 3. கொடுக்க வந்தவன் நண்பனாக உதவி மாறியிருக்கலாம். 4-வது உயிர் நண்பனாக இருக்கலாம். 5. நிரந்தர நண்பனாக இருக்கலாம்.
1. கொடுத்து வாங்குதலில் ஏற்பட்ட நண்பன் - தொழில் செய்கின்றோம். பழக்கம் ஏற்படுகிறது. பணம் கொடுக்கின்றேம், வாங்குகின்றோம். கஷ்டம், நஷ்டம் வரும் பொழுது உதவி செய்கின்றோம். நண்பன் என்று அழைக்கின்றோம். திடீரென்று ஒரு கஷ்டத்தில் உதவி கேட்கும் பொழுது உதவி கிடைக்கவில்லை என்றால் 'நீ எல்லாம் நண்பனாக இருந்து என்ன பயன்" என்று நட்பை, நண்பன் என்ற உறவை முடித்து விடுகின்றோம்.
2. வாழ்க்கை பயணமாக இருக்கட்டும், வண்டி பயணமாக இருக்கட்டும், மற்றவர்களைப் பற்றி பேசுகின்றோம். எண்ண அலைகள் ஒரே விதத்தில் செயல்படுகிறது என்று தெரிகிறது. விலாசம், போன் நம்பர் எல்லாம் வாங்குகின்றோம். பழகுகின்றோம், நண்பன் பட்டியலில் சேர்க்கின்றோம். முழுமையாக நம்பி ஏற்றுக் கொள்கின்றோம். பேசும் பழக்கத்தில் ஒருவர் மற்றவர்களை குத்தி காட்டட்டும், மற்றவர்களைப் பற்றி பேசும் பொழுது நேர்மறை அலைகளாக இருந்த சிந்தனை அலைகள் இப்பொழுது எதிர்மறை அலைகளாக மாறிவிட்டன. பின் இந்த ஆளை நம்பி மற்றவர்கள் கதை எல்லாம் சொன்னோமே, இனி இவன் நம்மை மாட்டி வீட்டு விடுவானே என்ற பயத்தில் நண்பனாக வைத்திருப்பதா, இல்லை எதிரி என்று சொல்வதா, வாயில் வைத்திருப்பதா? இல்லை விழுங்குவதா?
3.உதவி கொடுக்க வந்தவன் நண்பனாக மாறியிருக்கலாம். நம் உள் உணர்வுகளை வெளியே சொல்லாமல், மற்ற நபர் நம் துன்பத்தை உணர்ந்து, அவரே முன்வந்து உதவி செய்து நன்றி உணர்வோடு பழகி, பின் நண்டனாக மாறியிருக்கலாம். இவர்களை நாம் நம்பலாம்.
4. உயிர் நண்பன் - சிறுவயதிலிருந்தே தொடங்கிய நட்பு - இன்று மட்டும் தொடர்கதையாக இருக்கின்றது. சந்திக்கும் பொழுது தன் உள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுதல், துன்பத்தில் துணை நிற்பது. பற்றவர்களின் உள் உணர்வுகளை புரிந்து செயல்படுவது. அவர்களின் பழக்க வழக்கம் என்ன? செயல் முறை என்ன? தோற்றம் என்ன? சுருக்கமாக சொல்லப்போனால் அவர்களின் முழுமையை, முழுமையாக புரிந்து செயல்படுவது.
5. நிரந்தர நண்பன்: இவர் யார்? நம்மை படைத்தவன் தான். நாம் விலகினாலும் விலகாதவர், அன்பு செய்யவில்லை என்றாலும் அன்பு செய்பவர். ஜெனித்ததிலிருந்து மரணம் மட்டும் நம்மோடிருப்பவர். முதல் நான்கு நண்பர்களையும் நம்ப வேண்டும். அதே சமயத்தில் நம்பக் கூடாது. இவர்களை விகவசிக்க வேண்டும். அதே சமயத்தில் விசுவகிக்கக் கூடாது. என்ன புதிராக இருக்கிறது என்று யோசிக்கின்றீர்களா? மற்றொரு வகையில் சொல்லுகின்றேன்.
இந்த 5 நண்பர்களையும் எப்படி நம்புவது?
முதல் இரண்டு நண்பர்களையும் வீட்டு வாசலில் வைத்துக் கொள்ள வேண்டும். 3வது, 4வது நண்பர்களை வீட்டின் மத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். 5வது நண்பனை நாம் நம் தலைக்கு மேல் வைத்திருக்க வேண்டும்.
இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லையா? இந்த இரண்டையும் பிரித்து, பழகி, நண்பன் என்ற பட்டியலில் சேர்க்கும் முன், 5வது நண்பனை கேளுங்கள். அவர் நமக்கு கொடுக்கும் 'ஞானம்' இதை பிரித்து காட்டும். கள்ளனை கள்ளனாக, நண்பனை நண்பனாகப் பிரித்து எடுக்கும். எப்படி தீக்கோழி நெருப்பையும், தண்ணீரையும் பிரித்தெடுக்கிறதோ, அப்படி நாமும் பிரித்தெடுக்கலாம்.
UE மாணவன்/மாணவி இதை எளுதில் பிரிக்கலாம். 100 சதமானம் நம் மிக முக்கிய சக்கராக்கள் திறந்து
செயல்படுவதால் யாரிடம் பழகினாலும், பேசினாலும் அவர்களின் சக்தி எந்த சக்கராவில் செயல்படுகிறது என்பதை உணர்ந்து, நம் அடிப்படை நிலையில் அன்பு வளையத்தை பார்த்து அவர்களை, எந்த வட்டத்திற்குள் வைக்கின்றீர்களோ, அதற்கு தகுந்தாற்போல நம்புங்கள். அதற்கு தகுந்தாற்போல், உங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள். மனதில் நாம் நிறுத்த வேண்டியது. மனிதன் மனிதன்தான், மனிதன் என்றும் மாறுபவன். இன்று இருக்கும் மனிதன் நாளை இருக்கமாட்டான். நம்பணும். நம்பக்கூடாது, விரவசிக்கணும், விசுவகிக்கக்கூடாது." கடவுள் நமக்கு பகுத்து, அறியும். அறிவை கொடுத்திருக்கின்றார். அதனால் பகுத்து அறிந்து கொள்ளுங்கள்.
கேள்வியின் இரண்டாம் பாகத்தை விவரிக்கின்றேன். அவன் என்னை ஏமாற்றி விட்டான். அவன் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டான். யாரை இன்னும் குற்றப்படுத்துகின்றீர்கள்? இந்த குற்றத்திற்கு யார் பொறுப்பு? அவன் உங்களிடம் திரும்பி கேட்கின்றான். உன்னை யாரு என்னை நம்பச் சொன்னது? என்னைப் பற்றி நான் ஏதாவது உன்னிடம் பகிர்ந்திருக்கின்றேனா? உன்னை யாரு என்னிடம் எல்லாம் சொல்லச் சொன்னது? நான் கேட்டேனா? போடா முட்டாள் என்று கூறினால்தான் நமக்கு புத்தி வருமா? எத்தனை முறை நான் கூறுகின்றேன். “நாம் பேசுவதற்கும், செய்வதற்கும் நான் தான் பொறுப்பு". இது இன்னமும் உங்கள் தாய் சிந்தனையாக மாறவில்லை என்பதுதான் உண்மை. இதை திரும்பிச் சொல்லிப் பாருங்கள். "நான் ஏமாந்து விட்டேன்", "நான் நம்பி மோசம் போனேன்". இப்படி உங்கள் 'Ego' தனித்தன்மை பத்து முறை கூறினால், உடனே புத்தி, எப்படி ஏமாந்து விட்டாய். ஏன் நம்பினாய்? யாரை நம்புவது என்று பல பாடங்களை உங்களுக்கு சொல்லித் தரும். ஒருமுறை தப்பு செய்யலாம். தப்பிலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்களை படித்து விட்டாள். அதே தப்பை திரும்பி செய்ய நம் புத்தி விடாது. அதனால் நாம் செய்வதற்கும், பேசுவதற்கும் நாம் பொறுப்பு எடுப்போம்.
கேள்வியின் 3-ம் பாகம்: நாம் மன்னித்து, மீண்டும் பழகினேன். ஆனால் அவன் திருந்தவில்லை. "மன்னிப்பு" என்றால் என்ன? ஏன் மன்னிக்க வேண்டும். நாம் மற்றவர்களை மன்னிப்பதால், நமக்கு நல்லதா? அவனுக்கு நல்லதா? அன்பு - நட்பாக செயல்படும் பொழுது நமக்கு கிடைப்பது உறவு. நட்பை முறிக்கும் பொழுது நாம் உடைப்பது உறவு. அந்த உறவு நம் உள்ளத்தில் உள்ள அமைதி, ஆனந்தத்தையும் உடைத்து விட்டுச் செல்லுகிறது. மனம் உடைந்திருக்கும் பொழுது, மனம் சோர்வு அடைகிறது. மனம் சோர்வு அடைந்தவுடன் உள்ளே வருகிறான் மாற்றான் சக்தி, பார்த்திய, பார்த்திய உன்னை ஏமாற்றி விட்டான் அல்லவா? என்று கத்தாடி நம் புத்தியை செயல் இழக்க செய்து உணர்ச்சியை தூண்டி விடுகிறது. கோபம், ஆத்திரத்தை ண்டி விடுகிறது. பகைமை தூ வளருகிறது. பழிவாங்க வைக்கிறது. பழிவாங்கி விட்டால், அதன் பின் விளைவு என்ன என்பதை நம் புத்திக்கு காட்டுவதில்லை. செயல்படும் மட்டும் தூண்டி விடுவான், செய்து
முடித்த உடன் நம்மை கைவிட்டுவிட்டு ஓடிவிடுகிறான். அவன் மறைந்த பிறகு நம் புத்திக்கு விழிப்புணர்ச்சி வருகிறது. பின் விளைவை நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இதைத்தான் நாம் சாத்தானின் வேலை என்று கூறுகின்றோம். இதிலிருந்து நாம் தப்ப வேண்டுமென்றால் மாற்றுச் செயலுக்கு நாம் போக வேண்டியதுதான்.
"நான் ஏமாந்து விட்டேன். இந்த ஏமாற்றத்திற்கு நான் தான் பொறுப்பு. எப்டியோ நான் ஏமாந்து விட்டேன் என்று’ பலமுறை நமக்குள் கூறினாள். ஏமாந்த உடன் மனதில் வருத்தம் தோன்றலாம். ஆனால் கோபம் வராது. நம் புத்தி வேலை செய்யத் தொடங்கி விடும். நம் தவறுகளை சுட்டிக்காட்டி விடும். இந்த பாடங்களை நீ படித்து விட்டாய் அதனால் அவனுக்கு நன்றி, நன்றி என்று கூறு என்று ஆன்மா கூறும். மனதில் தயக்கம் வரும். இந்த தயக்கத்தை நாம் ஜெயித்து நன்றி
கூற வேண்டுமென்றால், நம் உணர்ச்சியில் ஏற்பட்ட துக்கத்தை நாம் மன்னிக்க வேண்டும். அவனால் என் உணர்ச்சியில் வந்த துக்கத்தை நான் மன்னிக்கின்றேன். மன்னிப்பு நான் இழந்த உறவை, அமைதியை, ஆனந்தத்தை மீண்டும் எனக்குத் தருகின்றது. மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மன்னிப்பது நமக்காக, மற்றவர்களுக்காக அல்ல. நான் மன்னித்தும் அவன் மாறவில்லையே என்று கூறுவது நீங்கள் இன்னும் மன்னிப்பின் தன்மையை புரிந்து கொள்ளாதது தான். மன்னிப்பின் பலன் நாம் தான் அனுபவிக்கின்றோமே தவிர அடுத்த ஆள் அல்ல.
வாசித்தால் மட்டும் போதாது. சிந்தித்து, தியானித்து இதன் பலனை அடைந்து கொள்ளுங்கள்.
ஆசிரியர்

No comments:

Post a Comment

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...