Thursday, February 24, 2022

உண்மை சம்பவம் மனநோய் யாருக்கு?

 Malarga Manitham - November 2001

உண்மை சம்பவம்
மனநோய் யாருக்கு?
"சிஸ்டர் அம்மா, என் பிள்ளையை பாருங்கள். எதையோ மனதில் வைத்துக் கொண்டு, சாடை, சாடையாக பேசி எங்களை துன்பப் படுத்துகின்றாள். சாப்பிடுவதும் இல்லை, குளிப்பதும் இல்லை. நல்ல துணி உடுத்துவதும் இல்லை. டாக்டரிடம் சென்றால் அவர் உன் மகளுக்கு மனநோய் பிடித்திருக் கின்றது. என்று சொல்லுகின்றார். சிஸ்டர் அம்மா, என் பிள்ளைக்கு மனநோய் இல்லை. யாரோ என் பிள்ளைக்கு, என் குடும்பத்திற்கு ஏதோ செய்து விட்டார்கள். தயவு செய்து உதவி செய்யுங்கள், உங்கள் கரம் வைத்து ஜெபியுங்கள்" என்று மாலை, மாலையாக கண்ணீர் விட்டு என் கரங்களை பற்றினாள் ஒரு தாய்.
"உன் பிள்ளைக்கு மனநோய் வர சான்ஸ் இல்லையே. நான் அன்று, உன்னை உன் பள்ளி பெற்றோர் விழாவில் பார்க்கும் பொழுது நீ தானே அந்த கரும்பலகையில் அழகான வசனத்தை எழுதிக் கொண்டிருந்தாய். அந்த பொன்னான வார்த்தை என் உள்ளத்தில் பதிந்து விட்டதே. The Greatest gift, parents can give
their children is their love. Mother is food, she is love, She is warmth. she is means
To be loved by mother means
To be alive, to be rooted. To be at home.
இவ்வளவு
அழகான வசனத்தை எழுதும் தாயின் மகள் எப்படி மன நோயால் கஷ்டப்பட முடியும்?
"சிஸ்டர் அம்மா!" என்று குழந்தை கத்தியது. இது எல்லாம் பொய், இது Notice Board-க்குத் தான். ஒரு பெற்றோரும் இதை செய்வதில்லை.
Mother is food: இதற்கு என்ன அர்த்தம்? ஏனோ, தானோ என்று சமையல் செய்து பாத்திரத்தில் அடைத்து பள்ளிக்கு கொண்டு போ என்று அனுப்பும் தாய்மார்கள் இவர்கள்.
She is Love: யாருக்கு? இவர்கள் வகுப்பில் படிக்கும் கெட்டிக்கார மாணவிகளை இவர்கள் அன்பு செய்கின்றார்கள்.
She is Warmth: காலையில் 5 மணிவரை இவர்களிடமிருந்து வருவது கோபக் கனல் காற்று. She is earth: சிரிப்பு வருகின்றது.
To be rooted at home : இவர்கள் இருப்பது செங்கற்களால் கட்டி, சிமிண்ட் பூசி, பளிங்கு கல் இட்ட வீடு. வெளியிலிருந்து பார்த்தால் பெரிய வீடு. கண்களை கவரும்; உள்ளே போனால் ஜாமான்களும், துணிமணிகளும் எங்கும் கிடக்கும். குப்பை வீடு இதையா home என்று எழுதினார்கள்? வீட்டில் அன்பு இல்லை. தெய்வம் இல்லை. பக்தியில்லை. பணம். இஷ்டம் போல உண்டு. ஆனால் மனம் இல்லை. தான தர்மம் இல்லை.
“அப்பா! கடவுளே! போதும், போதும். செவிகள் வலிக்கின்றன. குழந்தாய். ஆம் தாயே. பெண்கள் படிக்க வேண்டும். ஆனால் என்று, படித்த படிப்பு அவர்களை வேலை செய்து, பணம் சம்பாதிக்க வேண்டு மென்று ஆணாக மாற்றிவிட்டதோ, அன்றே அவர்கள் பெண் அல்ல. வீட்டிற்கு இரண்டு ஆண்கள் உண்டு. கை நிறைய சம்பளம். ஒரு பெண் இல்லையே! பெண் ஆண்களாம். ஆண் பெண்ணாக முடியுமா? அழகாக விழாவிற்கு வருகின்ற பெரியோர் எல்லோரும் பார்க்கும் படியாக Home Virtues என்று எழுதி இருந்தாயே ஞாபகம் இருக்கின்றதா?
The beauty of a home is harmony The security of a home is loyalty The joy of a house is love
The plenty of a house is in children
The rule of a house is in contented spirits
அம்மா! நீ வாழ்ந்து காட்டாததை ஏன் கரும்பலகையில் எழுதினாய்? இன்னும் 10 வருடத்தில் இந்த மாதிரி நிறைய குழந்தைகள் மனநோயால் கஷ்டப் படுவார்கள். அதுவும் முக்கியமாக டீச்சரின் குழந்தைகளாக இருப்பார்கள்".
ஐய்யோ அம்மா! சபிக்காதீர்கள்.
"இதற்குப் பெயர் சாபம் இல்லை. உண்மை. உங்கள் அன்பு எல்லாம், இந்த குழந்தை சொல்லுவதுப் போல கெட்டிக்கார மாணவிகளுக்கு கொடுத்துவிட்டு, காலையில் உன் பிள்ளைகள் பள்ளிக்கும், மாலையில் மற்றொரு
டீச்சரிடம் Tutionக்கும் அனுப்பி விட்டு உன் வீட்டை Hotel ஆக மாற்றி விட்டாயே. பின் உன் குழந்தைக்கு மனநோய் வராமல் என்ன நோய் வரும் என்று நீ எதிர்பார்க்கின்றாய்? உன் தவறை நீ சிந்திக்காமல் யாரோ செய்வினை செய்து விட்டார்கள் என்று பழியும், பாவத்தையும் ஏன் மற்றவர்கள் மீது சுமத்துகின்றீர்கள்?
முதலில் போய் உன் பளிங்கு வீட்டை, குடும்பமாக மாற்று. அது மட்டும் இந்த குழந்தை என்னோடு இருக்கட்டும். என்று, உனக்கு வேலையும் பணமும் பெரியது அல்ல; குழந்தைத் தான் பெரிது என்று நீ நினைக்கின்றாயோ. அன்று வந்து குழந்தையை அழைத்து செல். உண்மையான சொத்து பணமும் பொருளும் அல்ல, அன்பு செல்வங்கள்தான் என்று உணருகின்றாயோ, அன்று இந்த குழந்தையை, நீ அழைத்து செல்... வா! மகளே வா! இந்த ஆஸ்ரமத்தில் அன்பு உண்டு. உன்னை அன்பு செய்கின்ற தெய்வம் உண்டு. நிம்மதி உண்டு. சந்தோஷம் உண்டு. உன்னை பெற்றவர் வரவில்லை என்றாலும் தாயாக நான் உண்டு. என்னோடு உன் வாழ்க்கையை கழித்துக் கொள் என்று சொன்னதும் அந்த குழந்தை ஒடிவந்து என்னை அணைத்துக் கொண்டது.
வேலை செய்யும் தாய்மார்களே! சற்று சிந்தியுங்கள். வாழ்ந்து காட்டுங்கள். கரும்பலகையில் எழுதியது போதும். சிந்தித்து செயல்படுங்கள்.
Dr. M. அமலாவதி

No comments:

Post a Comment

மனித பிரபஞ்ச சக்தி தியானம்

 அன்புள்ள சகோதர சகோதரிகளே நமஸ்தே! நாம் அனைவரும் உடல் அளவிலும் மன அளவிலும் ஆன்ம அளவிலும்  நலமாக இருக்கிறோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டுகி...