MM DECEMBER 2005
பாடம் கற்றுக்கொள்
குரு : சிஷ்யா, அதோ தெரியுதுபார் அந்த மலை. அங்கு ஏறிச் சென்று சிறிது நேரம் அமர்ந்து உன்னைப் பற்றி சிறிது நேரம் உன் ஆன்மா என்ன கூறுகிறது என்று கேள் கூறும் பதிலை என்னிடம் கூறு.
சிஷ்யன் : சரி குருவே, உங்கள் கற்றுத்தாரும். சொல்லை நான் என்றும் தட்டு வதில்லை. இதோ இந்நொடியே மலைக்கு செல்கிறேன்.
(அடுத்த நாள்)
குரு : சிஷ்யா, உனது ஆன்மா உனக்கு கற்பித்த பாடம் என்ன?
சிஷ்யன் : குருவே, நீர் கூறுவ தெல்லாம் செய்தால் நான் பரமனிடம் செல்லலாம் என்று கூறியது. மேலும் மௌனத்தின் அர்த்தத்தைக் கற்றுக் கீழ்ப்படிய சொன்னது.
குரு : சிஷ்யா, மௌனம் என்றால் என்ன? தியானம் என்றால் என்ன?
சிஷ்யன் : வாயை மூடிக்கொண்டு இறைவனை நினைப்பது தான்.
குரு : எத்தனை வருடங்கள் உன்னோடு வாழப்போகிறேன். எத்தனை பாடங்கள் செயல்முறை யாகக் கூறினாலும் உன்னால் கற்க இயலவில்லை.
சிஷ்யன் : குருவே! இன்று முதல் நீங்கள் கூறுவதை செயல்படுத்தி வாழப்போகிறேன். தயவாய் கற்றுத்தாருங்கள்.
குரு : மௌனம் என்பது வாய் பேசாது இருப்பது மட்டுமல்ல உன் சிந்தனையில் எதையுமேநினையாது உன் ஆன்மாவில் உறைந்துள்ள பரம் பொருளை மட்டுமே நினைத்து மௌனத்தில் அவனை தியானிப்பதுதான்.
சிஷ்யன் : என் சிந்தையில் எந்தவித நினைவுமின்றி இருக்கக் கற்றுத்தாரும்.
குரு : அங்கு சென்று அந்த
இருட்டறைக்குள் அமர்ந்து கொள். உன் மனதில் உள்ள நினைவு களை மறந்து பரம்பொருளை நினைத்து மெளனத்தில் உன் ஆன்மாவில் உறைந்துள்ள பரம் பொருளின் உடனிருப்பை உணர்ந்து அனுபவம் பெற்று வா. உனது ஆன்மா என்னிடம் வர உன்னை வழிநடத்துகின்றதோ அப்பொழுது வா. அனுபவம் பெற இறையாசீர். நல்ல
(தியானம் நிறைவு பெற்ற பின்...) சிஷ்யன் : (மெதுவான குரலில்) குருவே!
குரு : (மிகுந்த மகிழ்வோடு) சிஷ்யா உனக்கு நிகழ்ந்ததை நான் அறிவேன். இன்று தான் உன் கடவுளை நீ கண்டு கொண்டாய்.
வாழ்த்துக்கள்
.சிஷ்யன் : மிகவும் நன்றி குருவே!
உங்களோடு நான் இருந்த காலம் பொன்னேட்டில் பொறிக்கப் படவேண்டிய காலம். வாழ்நாள் என் உள்ளவரை உம் உதவியை நான் மறவேன்.மிக்க நன்றி. என்னை ஆசீர்வதியும்.
சகோ. பேரின்பம் கோவாண்ட குறிச்சி
No comments:
Post a Comment