Thursday, February 24, 2022

பாதாம் பிஸ்தா அத்திப்பழ லட்டு

 Malarga Manitham Magazine (June,2016)

பாதாம் பிஸ்தா அத்திப்பழ லட்டு
அடங்கியுள்ள பொருட்கள்
பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, அத்திப்பழம், பேரீத்தன்பழம், முந்திரிப் பருப்பு, முந்திரிப்பழம், தேங்காய், நிலக்கடலை, ஏலக்காய், கிராம்பு அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்து இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.
இதில் கிடைக்கும் சத்துக்கள்
புரோட்டீன், அயண், பாஸ்பரஸ், மினரல்ஸ், கால்சியம், வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி1, வைட்டமின்-பி2, வைட்டமின்-பி4, வைட்டமின்-சி.
நோய் எதிர்ப்புச் சக்தி பெற, ரத்தம் கத்தம் அடைய, வயோதிகத்திலும் இளமை ஊஞ்சலாட, சிறியோர் ஆரோக்கிய வளர்ச்சி பெற்றிட மற்றும் மூளை சுறுசுறுப்பு, என்றும் இளமையுடன் இருக்க, மலச்சிக்கலி லிருந்து விடுபட, கவாச சம்மந்தமான நோய்கள் வராமலிருக்க தினசரி உண்பீர் ஒரு பாதாம் பிஸ்தா அத்திப்பழ லட்டு. இந்த லட்டில் சேர்ந்திருக்கும் பாதாம் பருப்பில் 'லிலோனிக் ஆசிட்" (Linolic Acid) ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. மூளை, இருதய நரம்புகளை சீராக இயக்க உதவுகிறது. இது உலர்ந்த பழங்களால் (Dry Fruits) தயாரிக்கப் படுகிறது. சமீபத்திய ஆராய்ச்சியின்படி உலர்ந்த பழங்கள் நீரழிவு
நோயாளிகளுக்கு சிறந்தது எனக் கூறப்படுகிறது. இந்த லட்டில் இனிப்புக்காக சீனியோ அல்லது சர்க்கரை போன்ற எந்தவிதமான இனிப்பூட்டிகளும் சேர்க்கப்படவில்லை. மாறாக பழங்களில் உள்ள இனிப்புத்தான் இதில் இருக்கிறது. மேலும் நமது முன்னாள் பிரதமர் திரு. மொரார்ஜி தேசாய் நூறு வயதை தாண்டி விட்டார். அவரது உணவில் தினசரி இதுபோன்ற உலர்ந்த பழங்களே அதிகம் இருக்கிறது. அவரது நீண்ட ஆயுளின் ரகசியம் இதுதான். இந்த லட்டை இயற்கை மருத்துவ சங்க கொட்டார கிளை அமைப்பான "சிந்தூஸ் ஆரோக்கிய உணவு தயாரிப்பகம்" தயாரிப்பதால் மிகவும் இயற்கையான முறையில் சுத்தமான சுகாதார முறையில் தயாராகும் என்பதை கூறவும் வேண்டுமா? இனிமேலும் விளக்கம் வேண்டுமா? இந்த லட்டை பற்றி.
உங்கள் தேக ஆரோக்கியமே எங்கள் குறிக்கோள்.
சத்துள்ள ஆரோக்கியமான லட்டை சாப்பிட்டு நோயற்ற வாழ்வை வாழ்வோம்.
இதுபோன்று சத்துள்ள ஹெல்த் பூஸ்டர் மால்ட், தினைமாவு, தினை
அரிசி, சத்துள்ள சப்பாத்தி மாவு ஆகியவற்றை நாம் சாப்பிட்டால் என்றும் ஆரோக்கியமாக வாழலாம். நொறுக்குத்தீனி நம்மை நொறுக்கி
விடும். நோயற்ற வாழ்வு நம் கையில்தான் இருக்கிறது. நமது நோய்க்கு காரணம் நாம்தான் என நினைத்து ஆகாரத்தை மாற்றி அமைத்தால் நோய்நொடிகள் நம்மைவிட்டு பறந்துவிடும். எந்த நோயும் நம்மை அண்டாது. நோயற்ற ஆரோக்கியமான நீண்ட வாழ்வை வாழலாம். முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.
நோயற்று வாழ இயற்கை உணவே சிறந்தது.

No comments:

Post a Comment

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...