Malarga Manitham Monthly Magazine - YEAR JANUARY 2001
ஏடிட்டோர் இயல்!
பேரன்புடையீர்!
மலர்ந்துவிட்டது 21-ஆம் நூற்றாண்டு இருகரம் நீட்டி அதனை வரவேற்போம்!
இப்போதெல்லாம் "வாழ்க வளமுடன்!" என்ற வாழ்த்துக்களைக் கேட்கிறோம். அத்தோடு "வாழ்க நலமுடன்!”, “வாழ்க மகிழ்வுடன்!", "பெறுக முழுமனித விடுதலை!", "மலர்க மனிதம்!" என்ற சிறப்பு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வோம்.
ஆம்! மனிதர் முழுவிடுதலை அனைத்து நிலைகளிலும் விடுதலை பெறும்போது மனிதம் மலர்கிறது, மனிதாபிமானம் - வளர்கிறது என்று நம்புவோம்! மனித குலத்தின் நிறைவுக்கு, முழு வளர்ச்சிக்கு இந்த 21 ஆம்
நூற்றாண்டு நம்மை அழைத்துச் செல்லட்டும்! எண்ணங்கள் மனிதனை உருவாக்குகின்றன. அவை நலம் பயக்கின்ற நேர்முக (Positive) எண்ணங்களாக இருக்க வேண்டுமே யன்றி கேடு விளைவிக்கின்ற எதிர்மறை (Negative) எண்ணங்களாக இருக்கக்கூடாது என்ற கொள்கை முழக்கத்தோடும், "மலர்க மனிதம்!"
என்ற வேண்டுதலோடும் மலர்ந்திருக்கிறது இந்தச் சிற்றேடு.
இது எல்லா மதத்தினரையும் ஒரே மனித குலத்தில் ஒன்று சேர்த்து வழிநடத்தும் என்று முழுமையாக நம்புவோம். இந்த மலரின் ஒவ்வோர் இதழும், நம்மை நலமாக, மகிழ்வாக, முழுமையாக வாழ வழி காட்டும் வகையில் அமையும்.
இது மாதந்தோறும் மலர, மக்களுக்கு வளமை கூட்ட உங்களது ஒத்துழைப்பைக் கோருகிறோம். உங்கள் நண்பர்கள் எல்லாருக்கும் இவ்விதழை அறிமுகம் செய்யுங்கள். இதில் வெளிவந்துள்ள படைப்புகள் பற்றிய உங்களது பார்வைகளை, பரிந்துரைகளைத் தெரிவியுங்கள்.
வாழ்த்துங்கள், வளர்கிறோம்! வளருங்கள், வாழ்த்துகிறோம்!!
என்றும் அன்புடன், ஆசிரியர்
அட்டையில்: பேராசிரியர், டாக்டர், மாஸ்டர் லுவாங் மின் டாங் (வியட்நாம்)
No comments:
Post a Comment