MM OCTOBER 2001
என்னால் படைக்க முடியும்!
கேரளாவிலிருந்து வந்த மகள் பேத்திக்கு, பாட்டியைக் கண்டதும் அதிகம் பிடித்து விட்டது. உடனே, "அம்மச்சி, அம்மச்சி எனக்கு ஒரு கதை பறையு” என்று அழகாகக் கொஞ்சிக் கேட்டது.
உடனே அம்மச்சி பாட்டிக்கு, மனம் உருகி "வா மோளே" என்று கூறி குட்டியை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கதையைத் தொடங்கினாள்: தன்
கடவுள் உலகத்தை எல்லாம் படைத்துக் கொண்டிருந்தார். ஒவ்வொன்றாகப் படைத்தார். மேலே இருக்கும் புனிதர்கள், சம்மனசுக்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தனர்.
உடனே கபிரியேல் சம்மனசு, "கடவுளே நீர் மட்டும் தானே படைக்கின்றீர்? நானும் ஒன்றைப் படைக்கட்டுமா? என்று கேட்டது. உடனே கடவுள், "சரி படையப்பா" என்றார்.
உடனே கடவுளைப் போல சம்மனசும் காப்பி அடித்தது. ஒரு பெரிய மரம், பின் அதிலிருந்து ஒரு பூ, பின் அதிலிருந்து ஓர் அழகான பழம், பழத்திற்கு மஞ்சள் கலர், சிவப்பு கலர் கொடுத்தது.
மரத்தில் நிறைய பழங்களை உண்டாக்கியது. பார்ப்பதற்கு அழகாக இருந்தது. பிறகு தான் ஞாபகத் திற்கு வந்தது. ஐய்யய்யோ!
பழத்தில் விதை வைக்க வில்லையே எப்படி அடுத்த மரம் வரும்? என்று.
உடனே பழத்திற்கு வெளியே விதையை ஒட்டித் தொங்க விட்டது. பழம் முதலில் வந்து பிறகு விதை வந்தால், விதை ஊடுருவதற்கு முன்பு, மக்கள் பழத்தைப் பறித்து விடுவார்கள். அதனால் என்ன செய்தது தெரியுமா?
முதலில் விதை வளரட்டும். யின் பழம் வளரட்டும். பின் மக்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் பறிப்பார்கள் என்று நினைத்தது.
இதை எல்லாம் பார்த்த இறைவன், சிரித்துக் கொண்டே இருந்தார். பின் "கபிரியேல், கபிரியேல், என்ன செய்கின்றாய்? என்று இறைவன் கேட்டார்.
"இறைவா! நான் தப்பு செய்து விட்டேன். விதையைப் பழத்தின் உள்ளே வைப்பதற்குப் பதிலாக வெளியே வைத்து விட்டேன். என் படைப்புக்கு மதிப்பு இல்லாமல் போய் விடும். மன்னித்து சரி செய்து விடுங்கள்" என்றது.
உடனே கடவுள், “பயப்படாதே இனிப்பும், கசப்பும் இல்லாத உன் விதையைக் கொட்டை என்று சொல்லாமல் பருப்பு என்று சொல்லும்படி வைப்போம். அதற்குப் புரதச் சத்தை அதிகம் கொடுத்து, தேன் விலையை ஏற்றி விடுவோம். அப்பொழுது உன்
படைப்புக்கு அதிக விலை வரும் என்று கூறி படைப்பை முழுமை படுத்தினார்.
"இந்த படைப்புக்கு என்ன பெயர் வைத்தார் என்று குட்டிக்குத் தெரியுமா?" என்று பாட்டி கேட்டாள்.
"உம், உம்" என்று குட்டி தலையை ஆட்டியது "ஓ! குட்டிக்கு அதிகம் பிடிக்கும் அதற்குப் பெயர் தான் அன்புப் பருப்பு என்றதும் குட்டிக்கு ஒரே சிரிப்பு.
'அம்மச்சி! இன்னும் கதை பற” என்று மீண்டும் கேட்டது. உடனே பாட்டி, "இப்படிக் கடவுள் மிருகத்தையும் பறவைகளையும் படைக்க ஆரம்பித்தார். திரும்பவும் கபிரியேல் கடவுளிடம் வந்து, "கடவுளே, இனி தப்பு செய்ய மாட்டேன் இன்னும் ஒரு முறை படைக்க எனக்கு உத்தரவு தாரும் என்று கேட்டது! கடவுள் "செய்" என்றார்.
இந்த முறை ஒரு பறவையைப் படைக்க வேண்டும் என்று முதலில் இரண்டு கால்களைப் படைத்து அதைப் பிடித்துத் தூக்கி கையில் வைத்துக் கொண்டு பின் உடம்பு, இறக்கை எல்லாம் படைத்தது.
கடவுள் படைத்தது போல, இறக்கை இருக்கக்கூடாது என்று மெல்லியதாக, பட்டுப்போல், நீளமாகப் படைத்தது. கண் வைத்தது. பிறகு என்ன கலர் கொடுப்பது என்று, கடவுள் கொடுக்காத கலராக இருக்க வேண்டுமென்று தேடியது. ஒன்றும் ஒத்துப்போகவில்லை.
சரி போகட்டும். முழு கருப்பு கலரில் இருக்கட்டும் என்று, பறக்க விட்டது. அது சுவற்றில் முட்டி, மோதி கீழே வீழ்ந்தது. கபிரியேல் சம்மனசு ஓடி எடுத்தது.
அப்பொழுது தான் அதுக்குப் புரிந்தது, "கண் வைத்தேன், பார்வை கொடுக்கவில்லையே" என்று.
திரும்பவும் பறக்க விட்டுப் பார்த்தது. அது மரத்தில் போய், தலைகீழாகத் தொங்கி கொண்டது. தன் தப்பை உணர்ந்தது கபிரியேல். நாம் முதலில் கால்களைப் படைத்துக் கையில் தூக்கி பிடித்துக் கொண்டல்லவோ, மற்ற பாகத்தை படைத்தோம்? அதனால் தான் இது தொங்கிக் கொண்டிருக் கிறது என்று.
கண் பார்வையும் இல்லை, நிறமும் கருப்பு, தலைகீழாக வேறு தொங்குகிறது என்ன செய்வது? என்று முழித்துக் கொண்டிருந்த சமயம், என்ன கபிரியேல் படைப்பு எல்லாம் எப்படி? என்று இறைவனின் குரல் கேட்டது.
சரி! கடவுளிடம் இதைக் கொடுத்து விடுவோம் என முடிவு செய்து 'கடவுளே, தப்பு, தப்பு, இனி இந்த ஜோலியே வேண்டாம். இதை வைத்து ஏதாவது செய்யுங்கள் பாவம்!" என்று தன் அறை, குறை படைப்பை கடவுளிடம் கொடுத்தது. கடவுள், "இவ்வளவு அழகான நீண்ட மெல்லிய இறக்கையைப் படைத்திருக் கின்றாயே; இதற்கு ஓர் ஒலியைக் கொடுத்து, அதன் சப்த ஒலியைக் கேட்டுத்தான் வழி கண்டு பிடித்துப்
பறக்கச் செய்வோம். இதன் கால்கள் தொங்கத்தான் செய்யும். இதை ஒரு புனித பறவையாக மாற்றி, கோவில்களில் தங்க விடுவோம்" என்று கூறி முழுமைப் படுத்திப் பறக்க விட்டார்.
“குட்டிக்கு அறியாமோ இதன் பெயர்?" என்றாள் பாட்டி. ஓ! தெரியுமே; வௌவால்" என்று பேத்தி கூறியதும் அம்மச்சிக்கு ஒரே சந்தோஷம்.
குட்டியிடம் அம்மச்சி, குட்டி! இக்கதையிலிருந்து எந்து பாடம் படிச்சு?" என்று கேட்க, குட்டி, சற்று நேரம் கழித்து, எனக்கும் படைக்க முடியும் என்றது.
“என் குஞ்சு மோளே! படைக்கும் சக்தியைக் கடவுள் நமக்குக் கொடுத்தார் என்று ஒரு நாளும் "நானும்,கடவுளும் ஒன்று தான்" என்று பெருமை படக்கூடாது. தப்பு செய்தால், கபிரியேல்
சம்மனசு, திரும்பிக் கடவுளிடம் சென்றது போல நீயும் திரும்பிச் செல்ல வேண்டும்.
கடவுள்! மனிதனையும், மனிதனின் படைப்பையும் மதிக்கின் றார். நாம் கடவுளுக்குப் பணிந்து இருந்தால் நம் குறையை நிவர்த்தி செய்து, நம்மையும், நம் படைப்பை யும் முழுமைப்படுத்துவார்.
"என்ட தங்க மோளே! இனி என்ன செய்தாலும் கடவுளிடம் கேட்டுச் செயல்பட வேண்டும். சரியா? இனி போய் தூங்கிக் கொள்!" என்று தட்டிக் கொடுத்தாள் அருமை அம்மச்சி.
உயர் நிலை அடைந்த மாணவச் செல்வங்களே! பாட்டி சொல்லித் தரும் பாடங்களை மனதில் இறுத்துவீர்களா?
பாட்டி சொல்லைத் தட்டாதே!
சரியா?
அமல ஆனந்தி
No comments:
Post a Comment