Wednesday, February 19, 2025

ஆன்மாவுக்கு வளர்ச்சி தேவையா?

ஆன்மாவுக்கு வளர்ச்சி தேவையா?


நம் 'HUE வகுப்பு நமக்கு சொல்லி தருவது 'ஆன்மா' என்பது கடவுளின் ஒரு சிறிய பாகம். இது ஒரு சிறிய பாகமாக இருந்தாலும் கடவுளின் முழு தன்மையையும் கொண்டது. அது எப்படி ஆகும்? எ.கா: ஒரு பெரிய காந்தத்தை (Magnet) கீழே போட்டால் பல துண்டு களாக உடையும். ஒரு சிறிய துண்டை இரும்பு பக்கம் கொண்டு போனால் இரும்பு அதில் ஒட்டிக் கொள்ளும். பெரிய துண்டுக்கு என்ன சக்தி இருக்கிறதோ அதே சக்தி சிறிய துண்டுக்கும் உண்டு. இன்று இளைய சமுதாயம் கேட்கின்ற கேள்வி "கடவுள் உண்டா? காணாத கடவுளை, உங்களால் காட்ட முடியாத கடவுளை குருட்டுத் தனமாக எங்கள் புத்தியில் ஏற்றி விடாதீர்கள். இப்பொழுது நாங்கள் விஞ்ஞானத்தின் உச்சியில் இருக்கின்றோம். அதனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. விஞ்ஞானிகளின் கண்ணோட்டத்தில் அவர்கள் கூறுவது சரியே! இவர்களிடம் நான் கேட்டேன். "தம்பி, பாலுக்குள் நெய்யிருக்கிறது

என்பதை விஞ்ஞானத்தால் காட்ட முடியுமா?" என்றேன். அதுபோல உடலுக்குள் ஆன்மா இருக்கிறது என்பதை விஞ்ஞானத்தால் எடுத்துக்கூற முடியாது. பாலை கரந்து அப்படியே வைத்தால் 12 மணி நேரத்துக்குள் கெட்டு விடும். அதை நன்றாக காய்ச்சி வைத்தால் 24 மணி நேரம் கெடாமல் இருக்கும். பின் அதன் மேல் ஆடையை சேர்த்து வைத்தால் கெட்டுவிடும். ஆனால் அதை உருக்கி எடுத்தால் நெய் வரும். நெய் அப்படியே இருக்கும் கெட்டு விடாது. காய்ச்சும் பொழுது கொஞ்சம் முருங்கை இலையை போட்டு எடுத்து விட்டால் அப்படி ஒரு மணம். அதிலிருக்கும் கச்சைப் பொருள் அடியில் தங்கும். தெளிந்த நெய் கெடாமல் கடைசி மட்டும் இருக்கும். இதை நீ நம்புகிறாயா என்றேன். ஆம். அதுபோல நம் உடலை அலங்கார பொருளாக இன்று நாம் பயன்படுத்து கிறோம். தலையிலிருந்து கால் வரை கையில் என்ன என்ன கிடைக்குமோ அதை எல்லாம் தடவிக் கொள்கிறோம்.


ஏன் உயிர் அந்த உடலில் செயல் படுவதால் அந்த உயிர் ஒருவனிடமிருந்து பிரிந்து செல்லும் பொழுது பக்கத்தில் நின்றால் கூட கண்ணுக்கு தெரிவதில்லை. சிலர் சாகும்முன் கண்ணைத் திறந்து எல்லோரையும் பார்த்து விட்டு கண்ணை மூடுகிறார்கள். சிலர் வாயை திறந்து 'ஆ' என்ற சத்தத்தோடு ஆவியை விடுகிறார்கள். உடல் உணர்வு அற்ற நிலையை அடையும் பொழுது இறந்து விட்டார்கள் என்று கூறுகிறோம். அந்த உடல் 24 மணி நேரத்திற்குள் அழுகி நாறி விடுகிறது. இந்த அழுகி நாறிய உடலுக்குள் ஆன்மா இருந்தது. ஆன்மா இருந்த பொழுது நாறாத இந்த உடல் இப்பொழுது எப்படி நாறுகிறது? இதற்குப் பதில் விஞ்ஞானம் தராது. விஞ்ஞானம் தராததை மெய்ஞானம் தான் தரும். அதற்கு உன் ஆன்மா விழிப்புணர்ச்சி அடைய வேண்டும்.


ஆன்மாவுக்கு விழிப்புணர்ச்சியா? புதிதாக கேள்விப்படுகிறேன். ஆம் தம்பி! பாலை காய்ச்சினால்தான் 24 மணி நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும். அதுபோல முதலில் நாம் அறிய வேண்டும். நம் சக்திக்கு மேல் ஒரு சக்தி உண்டு. அதை நீ "Super Power" "Master Power". எது வேண்டு மானாலும் வைத்துக் கொள். உனக்குள் ஒரு சக்தி உண்டு. அந்த சக்தி செயல் பட தான் கடவுள் இந்த உடலை படைத்தார்.


என் அம்மா, அப்பா தான் இந்த உடலை படைத்தார்கள். கடவுள் படைக்கவில்லையே.


ஆம்! தம்பி இதுதான் விஞ்ஞானம். மெய்ஞானம் என்ன சொல்லித் தருகிறது என்றால், அந்த உயிர் அணுக்களை படைத்தது யார்? உன்

புத்தியால் தேடினால் விஞ்ஞானம் கிடைக்கும். உன் புத்தி, ஆன்மாவோடு சேர்ந்து தேடினால் மெய்ஞானம் கிடைக்கும். இதுதான் ஆன்மாவின் விழிப்புணர்ச்சி. இப்பொழுது உனக்கு விஞ்ஞானத்திற்கும், மெய்ஞானத்திற்கும் வித்தியாசம் தெரிகிறதா?


மாஸ்டர் டாங் கூறுவார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் உங்கள் ஆன்மாவுக்கு பாடங்கள் சொல்லி கொடுக்கின்றீர்களோ அவ்வளவு சீக்கிரத்தில் அது முதுமை அடைந்து செயல்பட தொடங்கும் என்பார்.


ஒன்றும் புரியவில்லையே! எனக்கும் கேட்டபொழுது ஒன்றும் புரியவில்லை. புத்தியில் இதை ஏற்றி சிந்திக்க வேண்டும். பின் ஆன்மாவோடு தியானத்தில் கலந்து பதிலை ஆன்மாவிடம் கேட்க வேண்டும். அப்பொழுது ஆன்மா கூறும் பதில், "ஒரு ஆன்மா, பல உடல்". நான் எத்தனையோ முறை உடல் எடுத்து பிறந்திருக்கின்றேன். என் வளர்ச்சிக்கு தகுந்தாற்போல என் பெற்றோரை தெரிந்து கொள்கிறேன். பெற்றோர் தரும் உடலுக்குள் புகுந்த பிறகுதான் எனக்கு தெரிகிறது. நான் எந்த நாட்டை சேர்ந்தவன், எந்த ஊர், என்ன ஜாதி, என்ன மொழி, ஜாதி பிரிவின் கோட்பாடுகள். இதை 'நீ' தான் அதாவது 'Ego'உன் தனித்தன்மைதான் படித்து தருகிறது. இந்த பிறப்பில் இப்படித்தான் இருக்க வேண்டும். வீட்டில், ஊரில், நாடு, ஜாதி சட்டதிட்டங்கள் இப்படியாக நீ படித்து அதை புத்தியில் ஏற்றுகிறாய். ஆன்மா விழிப்புணர்ச்சியோடு காத்திருக்கிறது. உன் புத்தி சொல்லும் கட்டளைகைள வைத்து அதே புத்தியிலிருக்கும் பகுத்தறிவை சிந்திக்க வைத்து செய்வது 'நல்லதா' 'கெட்டதா' ஆன்மாவுக்கு இது

பிடிக்குமா என்று தெளிவாக புத்திக்கு எடுத்துச் சொல்லுவதமான் பகுத்தறிவின் வேலை. பின் உன் முழு சுதந்திரத்தால் நான் இனி இதை செய்ய மாட்டேன் என்று செய்கிறாயே அதை ஆன்மாவாகிய நான் பாடம் படித்துக் கொள்கிறேன். நீ உன் சுதந்திரத்தில் எடுக்கும் எல்லா நல்ல முடிவுகளையும் நான் விழிப்போடு இருந்து படித்து எனதாக்கிக் கொள்கிறேன்.


என் புத்திக்கு தடுமாற்றம் வந்துவிட்டது. புரிந்து கொள்ளும் சக்தியை இழந்து விட்டது.


ஆம்! தம்பி. உன் புத்தி விஞ்ஞானமே உண்மை என்று பதிவு செய்துவிட்டது. அதனால் உண்மையை தேட வேண்டும் என்ற அறிவு பகுத்தறிவு செயல் இழந்திருக்கிறது. ஏன்? அந்த கதவை தட்டு திறக்கும், நிறைய 'ஆடை' கிடைக்க வேண்டுமென்றால் பாலை சுண்ட காய்ச்சியெடுக்க வேண்டும். அதுபோல உன் விஞ்ஞான புத்தியை காய்ச்சு, அந்த ஆவி, மெய் ஞான புத்தியை திறக்கும். பின் உள்ளே சென்றால் போதும். ஆன்மா முழு விழிப்புணர்ச்சியிலிருக்கிறது. தைரியமாக தட்டு, திறந்த உடன் உள்ளே ஓடி விடு. இருட்டாக இருக்கும். உன் ஆன்மாவிற்குத்தான் தெரியும். 'ஒளியின் 'பட்டன்' எங்கே இருக்கிறது என்று கொஞ்சம் தட்ட சொல்லு. வெளிச்சம் வந்து விட்டதா?


விழிப்புணர்ச்சியின் 2-ம் பாகத்திற்கு போவோம். இனி நான் பொய் பேசமாட்டேன். இனி நான் திட்ட மாட்டேன். பிறர் பொருட்களுக்கு ஆசைப்பட மாட்டேன். இப்படியாக இந்த பல பாடல்களை படித்து கொடுத்து விட்டால் ஆன்மா தலைதூக்கி

விழிப்புணர்ச்சியிலிருந்து செயல்படும் ஒவ்வொருமுறையும் தன்மை" ஆன்மாவிடம் இப்படி செயல் ன்ற கேள்வியை கேட்க படட்டுமா என்ற ஆரம்பிக்கு என்று பதில்ல்லை. வேண்டாம் என்று பதில் கூறும். நீ கேட்க, அது பதில் சொல்ல அதன் படி நடப்பதற்கு பெயர் தான் உன் சொந்த ஆன்மீக பாதை. "தனித் றயும் உன் ""



இங்கு எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. எந்த மொழியில் பேசும். காதில் வந்து சொல்லுமா? இல்லை புத்தியில் பேசுமா?


இந்த இரண்டிலும் பேசாது. மௌன மொழியில் பேசும்.


அது என்ன மொழி?


உன் 5 புலன்களையும் அடக்கி, உன் சுவாசத்தையும் அடக்கி உன் புத்தி, உடல், உணர்ச்சிகள் (மனம்) அடங்கி ஒரு இடத்தில் அமரும் பொழுது உனக்குள் ஏற்படும் அமைதியில், அமைதியாக பேசி, உணரவைக்கும் அந்த ஆன்மா. ஆன்ம மொழி 'அமைதி மொழி'.


இது மிகவும் கஷ்டம். இதை யாராலும் அடைய முடியாது?


யாராலும் அடைய முடியாது என்று சொல்வது உன் புத்தி. புத்திக்கு எப்பொழுதும் உடலை ஏதாவது ஒன்று செய்ய வேண்டும், செய்யாவிட்டால் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். இதை கட்டுப்படுத்தி ஆன்மா தரும் விழிப்புணர்ச்சிக்குள் நீ சென்றால் மெஞ்ஞானம் இதை உனக்கு படிப்பித்து தரும். இந்த வேலையை அடைந்தவர்கள் தானே "ஞானிகள்". ஞானிகள் நிறைந்த இடம் பாரதம் தானே. இதை நீ மறந்து விட்டாயா

முதலில் இந்த நிலையை அடைய வேண்டும் என்று நீ தீர்மானம் செய். பின் ஆன்மா உன்னை வழிநடத்தும். பேசாது. பேசாமல் தன் எண்ணங்களை உன் மனதில் பதித்து விடும். பின் உன் புத்தி அதை ஏற்று செயல்புரியும்.


இந்த வழியை எப்படி போய் அடைவது? இதனால் நம் வாழ்க்கைக்கு என்ன பலன்? மெய்ஞானி என்ற பட்டம் கிடைக்குமா? பணம் கிடைக்குமா? பெயர் கிடைக்குமா?


ஒன்றும் கிடைக்காது. மக்கள் இவன் பைத்தியக்காரன். வாழத் தெரியாதவன். இந்த மாதிரி பட்டங்கள் நிறைய கிடைக்கும்.


பின் ஏன் இதை தேடவேண்டும். நான் வாழ விரும்புகின்றேன். விஞ்ஞான எனக்கு பட்டம், பெயர், புகழ் வாங்கி என் பெயரை பதிவு செய்ய விரும்புகின்றேன். அதனால் இது எனக்கு வேண்டாம் என்று நினைக்கின்றேன். விடை தாருங்கள்.


சரி தம்பி, இதுதான் உன் ஆன்மா விருப்பம் என்றால் செய். போவதற்கு முன் ஒரு கேள்வி கேட்கின்றேன். நீ நினைப்பது எல்லாம் உனக்கு கிடைத்து விட்டால் நீ என்ன செய்ய போகிறாய்? நீ விஞ்ஞானி என்பதால் உனக்கு சாவு இல்லையா? உன் உயிர் யார் கையிலிருக்கிறது? திரும்பி போகும் பொழுது ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய போகிறாய்? அப்பொழுது உன் பெயர், புகழ், பட்டம், படிப்பு, பணம் வருமா உன்னோடு? அல்லது அது மரணத்திலிருந்து உன்னை தப்பிக்க உதவுமா? சற்று சிந்தித்துக் கொண்டே போ. போய்விட்டு வா தம்பி. என் ஆசீர்


ஏன் என்னை பயங்காட்டினீர்கள்? என் உடல் நடுங்குவதின் அர்த்தம் என்ன?


உன் ஆன்மா விழிப்பு அடைந்து விட்டது? இனி நீ அதன் விழிப்புணர்ச்சியிலிருந்து தப்பிக்க முடியாது.


என்னை இன்னும் பயம் காட்டாதீர்கள். என்ன சொல்ல வந்தீர்களோ சீக்கிரம் சொல்லி அனுப்புங்கள்.


உன் பற்றுதல் எல்லாம் உலகத்தை சார்ந்ததாக இருக்கிறது. 'பற்றற்ற நிலைக்கு வா'. அப்படியென்றால்... உலகத்தில் வாழ நமக்கு செல்வம், படிப்பு, பெயர், புகழ் எல்லாம் தேவை தான். இது எல்லாம் நம்மைத் தேடி வர வேண்டும். நாம் அதன்பின் அழைத்து தேடி சென்றால் ஆன்மாவை இவை மூடி செயல்படுத்த விடாமல் ஆக்கிவிடும்.


என் கடமையை நான் செய்வேன். படிப்பது மக்களுக்கு உதவி செய்ய. எனக்கு கிடைத்த பாக்கியத்தை, பாக்கியம் கிடைக்காதவர்களோடு பகிர்ந்து முன்னேற்றுவேன். அவர்களையும்


நீ டாக்டர் என்றால் அந்த அறிவை வைத்து எப்படி மக்களுக்கு உதவி செய்வாய்? படித்த அறிவை சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் பிற நிலை சேவைக்காக பயன்படுத்தினால் நாம் படித்த விஞ்ஞானம், மெய்ஞானமாக மாறிவிடும். விஞ்ஞானம் சொல்லுவ தெல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொள்ளாமல், விஞ்ஞானத்திற்கும் மேலே ஒரு மெய்ஞானம் உண்டு. அதுவே உண்மை. கண்ணால்

பார்க்காத, கேட்காத பல உண்மைகள் பிரபஞ்சத்தில் உண்டு, அதைத் தேடு.


உண்மையை கண்டறிவதால் என்ன பலன்? இதை வைத்து வாழ்வது எப்படி?


தம்பி ! நீ விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் அல்லவா? முதலில் உன்னை வைத்து தொடங்கு, உன் உடல், மனம், உயிர் எப்படி செயல்படுகிறது? உன் உடலில் ஓடும் உயிர் ஓட்டத்தை நீ அறிவாயா? விஞ்ஞானம் சொல்லுகிறது. பிட்யூட்டரி ບໍ (Pituitary gland) Master சுரப்பி. இதுதான் உடலில் உள்ள எல்லா சுரப்பிகளையும் தன் சக்தியால் இயக்குகிறது என்று அதே விஞ்ஞானம் சொல்லுகிறது. அதற்கு பக்கத்தில் ஒரு சுரப்பி உண்டு. அதன் செயல்பாடு தெரியாததால் பெயர் சூட்ட முடிய வில்லை. ஆனால் ஒன்றும் படிக்காத நம் ஞானிகள் முதலிலேயே சொல்லி விட்டார்கள். தலையிலிருக்கும் இரண்டு கோலிக்காயையும் நம் சக்தியில் வைத்துக் கொண்டால் சுகமாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று. பெயர் சூட்டுவது விஞ்ஞானிகள். நாமும் அதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கின்றோம். நீ என்றாவது சிந்தித்தது உண்டா? மாஸ்டர் சுரப்பியை செயல்பட வைப்பது யார்? ஏன் விஞ்ஞானம் பக்கத்தல் ஒன்று இருக்கிறது. அதன் செயல் என்னவென்று தெரியவில்லை என்று கூறினார்கள். அதேபோல இருதயத்தின் மேல் ஒரு சுரப்பி இருக்கிறது. அது 14 வயதில் சுருங்கி விடுகிறது. இதன் செயலும் அறியோம். ஏன் எதற்காக சுருங்கி விடுகிறது ? எப்படி சுருங்குகிறது? என்று சொல்ல முடியவில்லை. காரணத்தை இன்று மட்டும் விஞ்ஞானம்

கண்டுபிடிக்கவில்லையே. என்? ஏன் என்று பெரிய விஞ்ஞானியான நீ கேட்டதுண்டா? கடவுளை நீ வெளியே தேடுகிறாய். உள்ளே தேடு. உன் உள் உறுப்புகளே பதில் சொல்லும். சதையில் எத்தனையோ வகைகள் உண்டு என்று விஞ்ஞானம் பெயர் கொடுத்து அதன் செயல்களிலும் வித்தியாசம் உண்டு என்று சொல்லுகிறது. உன் விஞ்ஞானத்தால் இதை படைக்க முடியுமா? தம்பி நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு. வேண்டாத தர்க்கம் ஏன்? ஒருநாள் நான் விசுவசிப்பதை நீ நம்புவாய். பின் சந்திப்போம்.


மன்னிக்கவும்! சற்று அமரட்டுமா?


ஏன்? என் ஆன்மா விழிப்புணர்ச்சி அடைந்து விட்டது. அது உனக்கு எப்படி தெரியும்?சில கேள்விகளை என்னிடம் கேட்கின்றது? என்ன கேள்வி? பணம், படிப்பு, அந்தஸ்து என்று கடினமாக உழைத்தாயே பார்த்தாயா? நீ மறைத்து, ஒழித்து வைத்த பணத்திற்கு மதிப்பு இல்லை என்று வந்துவிட்டதே. இந்த சக்திகளை நல்ல விதத்தில் பயன் படுத்தியிருந்தால் உனக்கு இப்பொழுது அழுத்தம் வந்திருக்குமா? இரத்த அழுத்தம் கூடி இருக்குமா? சர்க்கரை வியாதி வந்திருக்குமா? என்று என்னை பார்த்து கிண்டல் செய்வதைப் போல உணருகின்றேன்.


உட்காரு தம்பி! உண்மைதான். இதைத்தான் ஆன்மா பேசுகிறது. அல்லது மனசாட்சி என்று பல பெயர்கள் உண்டு. ஆன்மா பேசும் பொழுது, வழிநடத்தும்பொழுதும் அதன் வழி நடந்திருந்தால் நம்மை பார்த்து "சிரிக்கிறது" என்று நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். கடவுளின் மறு பெயர் அன்பு. அவர் செயல்படும் விதம் "இரக்கம்". அவரைவிட்டு எவ்வளவு விலகிச் சென்றாலும், அவர் நம் பின்னே வருகிறார். என்னுடைய மொழியில் கூற வேண்டுமென்றால் நம்மிடம் "பிச்சை" கேட்கின்றார். என்ன? கண்ணை திறக்கிறார். உன்னிடம் எவ்வளவு 1000 ரூபாய் நோட்டிருக்கிறது. எவ்வளவு 500 ரூபாய் நோட்டிருக்கிறது. பிச்சை கொடு என்று கேட்கிறாய் என்று கண்ணை திறந்தாயா? இல்லை தம்பி, உன் சுமைகளை என்னிடம் இரக்கி வை. என் சுமை எளியது. நான் உன்னை அன்பு செய்வதுபோல நீ என்னை அன்பு செய். நான் உன்னை மன்னிப்பது போல, மற்றவர்களை நீ மன்னித்து விடு. மற்றவர்கள் மேல் இரக்கமாயிரு. கருணை காட்டு. ஏழை எளியவருக்கு நீ செய்வது எனக்கு செய்ததுபோல. நீ செய்யும் புண்ணியங்களை நான் கணக்கில் வைத்து உன் செல்வத்தை பூச்சி, கரையான் அரிக்காமல் நான் பார்த்துக் கொள்வேன். உனக்கு பெயரும், புகழும் மேலே கிடைக்கும். அன்பு பிச்சை கேட்கின்றார். கொடுப்பதும், இல்லை என்பதும் உன் இஷ்டம்.


என்ன தம்பி! மௌனமாகி


விட்டாய். கண்ணிலிருந்து கண்ணீர் வடிகிறது. நல்லது. அப்படியென்றால்ஆன்மாவின் கதவு திறந்துவிட்டது. ஆன்மாவின் 'ஒளி' பிரகாசிப்பதை பார்க்கின்றாயா? அந்த "ஒளி" உன் உடலின் உள்ளிருக்கும் இருளை அகற்றி உன் உடல் "ஒளி" பெறச் செய்யும். அப்படியே சற்று நேரம் அமைதியாக இருந்து அந்த ஒளியைப் பார். பின் அந்த 'ஒளி'யோடு சேர்ந்து விடு... உனக்குள் வரும் ஆனந்தம், அமைதி யோடு கலந்து விடு, குற்றவுணர்வில் வந்த கண்ணீர், ஆனந்தக் கண்ணீராக மாறும், ஓம் சாந்தி! ஓம் சாந்திபணம், பெயர், புகழ், சொத்து, சுதந்திரம் கொடுக்காத ஒரு ஆனந்தத்தை உணர்ந்தேன். எனக்குள்ளிருந்த ஒருவித அங்கலாய்ப்பு நின்று சாந்தி அடைந்து விட்டேன். மரியாதையில்லாமல் பேசியிருந்தால் மன்னிக்கவும். வந்ததின் பலனை அடைந்து விட்டேன். போவதற்கு உத்தரவு தர வேண்டும்.


ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! என் உள்ளக் கதவு எப்பொழுதும் திறந்திருக்கும். எப்பொழுதும் வா! சாந்தி!


சந்திப்போம். 


அமல ஆனந்தி

(Dr.M.Amalavathy)

மலர்க மனிதம் மாத இதழ் ஜனவரி 2017

No comments:

Post a Comment

ஆன்மாவுக்கு வளர்ச்சி தேவையா?

ஆன்மாவுக்கு வளர்ச்சி தேவையா? நம் 'HUE வகுப்பு நமக்கு சொல்லி தருவது 'ஆன்மா' என்பது கடவுளின் ஒரு சிறிய பாகம். இது ஒரு சிறிய பாகமாக...