MM NOVEMBER 2001
ஆசிரியரின்
சிந்தனையிலிருந்து...
அன்பு மாணவச் செல்வங்களே!
வணக்கம். சண்டை எப்பொழுது துவங்கும், துவங்குவது அமெரிக்காவா, இல்லை ஆப்கானிஸ்தானா என்று உலகமே எதிர்பார்த்த சமயத்திலிருந்து, நம் மாஸ்டர் மட்டும் சண்டையை எப்படி நிறுத்தி வைப்பது, இல்லை அதன் கனாகனத்தை எப்படிக் குறைப்பது என்று ஆராய்ந்து, ஜெபித்து, நமக்கும் ஒரு ஜெபத்தை அனுப்பித் தந்தார்கள்.
அது போன மாத இதழில் ஆங்கிலத்தில் வந்துள்ளது. அதுவே இவ்விதழில் தமிழில் வந்திருக்கின்றது.
என்று அன்பு மாணவர்களே, தினமும் செய்தியைக் கேட்டோம். T.V. பார்த்தோம், விட்டுவிடாமல், நம் அன்புச் சக்தியை அனுப்புவோம். தினமும் மாஸ்டர் கொடுத்த ஜெபத்தைச் சொல்ல மறந்து விடாதீர்கள். இறக்கின்ற ஆன்மாக்களை நினைவுகூருங்கள். இந்த நேரத்தில் நம் பிரபஞ்ச சக்தியை அதிகம் பயன்படுத்துங்கள்.
எத்தனையோ ஆன்மாக்கள், உடல் எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக் கின்றார்கள். அவர்களின் உணர்ச்சிகள் என்ன என்பதை அட்டைப்படம் தெளிவாக நம்மிடம் பேசுகின்றது.
இனியாகிலும் கருக்கலைப்பை நிறுத்தி, நல்ல மக்களைப் பெற்றெடுத்து, நாட்டை வளர்ப்போம். அப்பொழுதுதான் குழந்தைகள் தினம் அர்த்தமுள்ள விழாவாக மாறும்.
'ஒன்றுபடுவோம். வென்று விடுவோம்' நம் சக்திகளைப் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றுப்படுத்திச் செயல்படுவோம்.
நம் உள்ளத்தில் உள்ள அமைதி, உலகத்தில் பரவட்டும்.
ஆசிரியர்.
No comments:
Post a Comment