MM DECEMBER 2001
பொங்கட்டும் கிறிஸ்மஸ் மகிழ்வு!
கிறிஸ்மஸ் விழா! தைத்திருந்த புதுச் சட்டையை அணிந்து, பவுடர், சென்ட் அடித்து கேரளா கோலத் தோடு இரவு பூசைக்குச் சென்றேன். பலியில் பங்கெடுத்தேன்.
ஆனால் என் உள்ளம் என் நண்பர்களைப் பார்க்க வேண்டும், அவர்களை என்ன ஆடை எடுத்திருக்கின்றார்கள், எப்படி தம்மை அழகு படுத்தி வந்திருக் கின்றார்கள் என்பதை அறிய வந்து வேண்டும் எனத் துடித்தது.
ஒரு வழியாக பூசை முடிந்தது. நண்பர்கள் கூட்டம் கூடியது. நாங்கள் கூடிக் கைகளைக் குலுக்கி வாழ்த்திக் கொண்டோம். பேச்சு மிகவும் சுவாரசியமாக ஆரம்பித்தது. துணிகளை எந்தக் கடையில் எடுத்தோம், என்ன விலைக்கு எடுத்தோம், என்ன ஸ்டைலில் எந்த டெய்லர் தைத்தான் என்று பேசிக் கொண்டிருந்தோம்.
உடனே 'ஒருவன் தலைவா! இன்று என்ன Programme?” என்று கேட்க இன்று நம் தலைவர் படம் வெளியாகிறது; போய் பார்ப்போம் என்று ஒருமனதாக எல்லாரும் கூறினர்.
'மாப்பிளை! இன்று நான் தண்ணிக்கு வரமாட்டேன், வீட்டில் எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிட வேண்டுமென்று நேற்றே என் அம்மா கூறிவிட்டார்கள்' என்று மெல்ல இழுத்தான் ஒருவன்.
பேச்சு போகப் போகக் காட்டச் சாட்டமானது.
என்னடா பெரிசா ஃபஸ் பண்ணிக் கொள்கின்றாய்... என்று தலைவர் அவன் சட்டையை ஒருபிடி பிடித்தான். விடுடா என்றான் வேறொருவன்.
'என்னடா,பையன் சரிப்பட மாட்டான் போலிருக்கே...' என்று தலைவனை மற்றொருவன் சூடு ஏற்றினான்.
இவன் இங்கு இழுக்க, மற்றொருவன் அங்கு இழுக்க சட்டை கிழிந்தது... 'பார்டா! இவன் பழைய ஜவுளியாக வாங்கி சட்டை தைத்திருக்கின்றான்... தொட்டாலே கிழியுது..."
'ஐய்யோ நான் எப்படி வீட்டிற்குப் போவேன்' என்றதும் அவன் கண்ணில் தண்ணீர் நிறைந்தது. 'நல்ல நாளும் அதுவுமா அழாதே. இந்தா. தண்ணீர் பைசா. போய் ஒரு டெயிலரைப் பார்த்து ஸ்டைலா ஒரு யல் போட்டு விட்டு போ' என்று பத்து ரூபாயை நீட்டினான்.
தலைவன் மனதிற்குள் ஒரு பயமும், வருத்தமும் சிறிது நேரம் உணர்ச்சியில் ஓடின. சரி போகட்டும் என்றது மனம்.
வீட்டிற்கு வந்தான். இடியாட்டமும் கோழிக்கறியும் காத்திருந்தது. ஒரு அடி அடித்துவிட்டு உறங்கப் போனான்.
8 மணிக்கெல்லாம் ஒரு தேவதை வீட்டிற்கு வந்தாள். 'பார் அம்மா உன் மகன், புதுச் சட்டையை எப்படி கிழித்திருக்கின்றான். நீங்க எல்லாம் கிறிஸ்தவர்களா? கிறிஸ்மஸ் அன்று இப்படியா செய்ய வேண்டும்? பிள்ளை வளர்த்த இலட்சணத்தைப் பார். இதை உன் பிள்ளைக்கு கொடுத்து விட்டு உன் பிள்ளையின் புதுச்சட்டையை தா. இல்லை இந்தச் சட்டைக்குள்ள பணத்தை தா' என்று கதறி வெடித்த சப்தம் என் காதில் விழ ஐய்யோ வந்து விட்டாளே பத்திரகாளி என்று எழுந்து பார்த்தேன்.
பணத்தைக் கொடுத்து சமாளித்து, கிறிஸ்மஸ் பத்திரகாளியை அனுப்பி விட்டு, 'கரண்' என்று கத்தி கூப்பிட்டாள் என் அம்மா. சரி இனி நமக்குத்தான் என்று எழும்பினேன். போய் சேர்வதற்கு முன்பு விளக்குமாறு விழுந்தது பட், பட், பட் என்று. என் முதுகில் வாங்கி கொண்டேன் அவள் ஆத்திரம் தீர்ந்தது. சரி சாயங்காலம் தண்ணீர் அடித்தால், வலி வேதனை குறைந்து விடும் என்று தாங்கிக் கொண்டேன்.
விட்டாளா அதோடு. அப்பா வந்தார். ஏற்றி விட்டாள். 'பாருங்கள் உங்கள் பையன் நமக்குத் தந்த கிறிஸ்மஸ் பரிசை' என்று அடுத்த ஒப்பாரி தீர்ந்தது. சரி என்று பொறுத்துக் கொண்டேன். அவர் 'கரண்' என்றார். ஓங்கி கொடுத்தார் முதுகில் ஒன்று. 16 வயதான என் முதுகெலும்பு பட்டென்று விட்டது.
ஆத்திரம் எனக்கு ஏறியது. 'இனி அடித்தால் நடப்பது வேற
காரியமாகி விடும். ஒரு சட்டை கிழிந்ததற்கு, என் எலும்பை உடைத்தீர்களே. இனி நீங்கள் என் அம்மா, அப்பாவும் இல்லை; நான் உங்கள் பிள்ளையும் இல்லை. இதுதான் கிறிஸ்மஸ் தாத்தா உங்களுக்கு தரும் பரிசா? என்று சட்டென்று வெளியேறினேன்.
திரும்பிப் பார்க்காமல் கால் போன திசையில் நடந்தேன். ஆத்திரம் தீர, தீர நடந்தேன். சாயங்காலம் தண்ணீர் அடிக்க நண்பர்கள் தேடுவார்களே என்ற உணர்ச்சி காலுக்கு பிரேக் போட்டது. அப்பொழுதுதான் பசியும் தெரிந்தது. கையில் பைசாவும் இல்லை. போனால் நண்பர் கூட்டம் அரிக்கும், என்ன செய்வது என்று தெரியாமல் சற்று அமர்ந்தேன்.
என்ன செய்வது, எங்கு போவது என்ற சிந்தனைகள் வந்தன. ஒரு நல்ல கிறிஸ்மஸ்சை நண்பன் கெடுத்து விட்டானே. ஒரு சட்டை நம் வாழ்க்கையைக் கிழித்து விட்டதே. இவர்கள் பெற்றோரா? என்ன நடந்தது, எதற்கு நடந்தது என்று ஒன்றும் கேட்காமல் தோசையை மாற்றி மாற்றி போட்ட மாதிரி ஒரு பக்கம் அம்மா, மறுபக்கம் அப்பா என்று சுட்டு விட்டார்களே. இவர்களை அம்மா, அப்பா என்று நினைப்பதே தவறு; பத்திரகாளிகள்; பிள்ளைபாசம் இல்லாதவர்கள்; தம் பெயர், புகழுக்காக வாழ்பவர்கள்; இவள் தான் அடித்து விட்டாளே, பின் எதற்கு அவள் புருசனிடம் கோள் சொல்லிக் கொடுத்து என்னை அடிக்க வைத்து வேடிக்கை பார்க்கும் இந்தப் பெண் ஒரு தாயா? எதற்கு இவளுக்கு எல்லாம் ஒரு பிள்ளை? குமுறிக் குமுறி அலையாகப் பொங்கிப் பொங்கி வெடித்தது....
60 வயது மதிக்க தக்க ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்தார். 'என்ன தம்பி?' என்றார். 'ஒன்றும் இல்லை. சும்மா' என்றேன். இன்று 6 மணிக்கு இளைஞர் கூட்டம் இருக்கு. அதில் என்னைப் பேசக் கூப்பிட்டார்கள். நீயும் அதற்கு வந்த பையனோ என்று நினைத்தேன்' என்றார்.
'மீட்டிங் எங்கு?
'இந்தக் கோயில் விழாவில் தான்' என்றார்.
அப்பொழுது தான் நான் கோயில் வாசலில் இருப்பதை உணர்ந்தேன்.
"எதைப் பற்றி பேசப் போகின்றீர்கள்? 'இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு அறிவுரையே பிடிக்காது. கண்டிப்பு பிடிக்காது. அதனால் தம் பிள்ளைகளிடம் பேசுவது போல் இறைவன் உங்களுக்குத் தந்த அறிவுரையை நீங்கள் மறந்து விட்டீர்கள்? என் மகனே... எபிரேயருக்கு எழுதிய
திருமுகம். 12.5-13 முடிய
வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுக்கலாம் என்று நினைத்தேன்’ என்றார்.
'அது என்ன வார்த்தை?”
ஆண்டவர்
உன்னைக் கண்டித்துத் திருத்தும்போது அதைப் பொருட்படுத்தாமலிராதே. அவர் தண்டிக்கும் பொழுது, தளர்ந்து போகாதே. ஏனெனில், ஆண்டவர் யார்மேல் அன்பு கூர்கிறாரோ, அவரைக் கண்டித்துத் திருத்துவார். தாம் ஏற்றுக் கொள்ளும் பிள்ளைகள் அனை வரையும் ஒறுக்கிறார். திருத்தப் படுவதற்காகத்தான் நீங்கள் துன்புறுகிறீர்கள். கடவுள் உங்களைத் தம் மக்கள் என நடத்துகிறார். தகப்பன் கண்டித்துத் திருத்தாத மகன் உண்டோ?
'சார் போதும் உங்கள் ரிகர்சல். சொற்பொழிவுக்கு நன்றி. அதன் பயனையும் நீங்கள் அடைந்து விட்டீர்கள். சந்தோஷமாக வீட்டிற்கு போங்கள். நானும் வீடு திரும்பு கின்றேன். அமைதி, அன்பு, மகிழ்ச்சி. நம் வீட்டை நிரப்பட்டும்' என்று கூறி எழுந்து நடந்தேன் வீட்டை நோக்கி.
அமல ஆனந்தி.
No comments:
Post a Comment