Thursday, February 24, 2022

இயற்கை உணவு இயற்கை சிகிச்சை முறைகள்

 MM OCTOBER 2001

இயற்கை உணவு
இயற்கை சிகிச்சை முறைகள்
மண் சிகிச்சை:
நம்முடைய உடம்பு பஞ்ச பூதங்களால் ஆனது. இதில் ஏதாவது ஒன்று கூடினாலும், குறைந்தாலும் நோய் ஏற்படுகிறது. இதற்கு மண் நேரடி மருந்தாகப் பயன்படுகிறது. மண் ஒரு தீங்கும் விளைவிக்காது. இதற்குப் பொருள் செலவு ஒன்றும் தேவையில்லை. ஏழை எளியவர்கள் எல்லாரும் இம்முறையைக் கையாளலாம்.
மண்ணின் சிறந்த பண்பு உடலில் சேர்ந்துள்ள அந்நிய பொருட்களைக் கலந்து அவற்றை தன்னில் கவர்ந்து கொள்ளும் ஆற்றலை உடையது. மண் சிகிச்சைக்குத் தேவையானது புற்றுமண், நறுமணம் கமழும் செம்மண், வண்டல்மண், ஆற்றங்கரை மண் முதலியன ஆகும். இவற்றுள் மிகச் சிறந்தது புற்று மண் ஆகும்.
மண்ணின் தூய்மையில் ஏதாவது சந்தேகமிருந்தால் அதை வெயிலில் காய வைத்துப் பின்னர் சுத்தமான தண்ணீரில் கரைய வைக்க வேண்டும். கரைய வைக்கும் பொழுது கழிவுகள் தண்ணீருடன் கரைந்து விடும். அதனை வடித்து எடுத்து விட்டு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரில் நன்றாகக் கழுவி உலர்த்தி இடித்துச் சலித்துப் பயன் படுத்தலாம்.
மண் குளியல்:
உலர்ந்த வண்டல் மண்ணைக் கொண்டு வந்து நன்றாகச் சுத்தம் செய்து சுத்தமான தண்ணீரில் குழம்பாகக் கரைத்து உடம்பு முழுவதும் குறைந்தது 1/2 செ.மீ கனம் அளவு பூசிக் கொண்டு இளம் வெயிலில் 12 மணி நேரம் நிற்க வேண்டும்.
நாள்பட்ட நோயாக இருந்தால் தொடர்ந்து பல நாட்கள் காலையிலும், மாலையிலும் மண்குளியல் கொடுத் தால் உடலிலுள்ள நச்சுப்பொருட் களை வெளியேற்றும். நோயின் தன்மையை அனுசரித்து உணவிலும் கட்டுப்பாடு வைத்துக் கொண்டால் மண்குளியல் சிறந்த பயன்தரும். மண் பட்டம்:
20 செ.மீ. அகலமும் 30 செ.மீ நீளமும் உள்ள சுத்தமான பழைய துணியை எடுத்து உலர்ந்த மண்ணைத் தண்ணீரில் குழைத்துத் துணியின் நடுவில் 16 செ.மீ நீளத்திற்கும், 8 செ.மீ அகலத்திற்கும், 1 செமீ உயரத் திற்கும் மண்ணைப் பரப்ப வேண்டும்.
துணியின் அகலத்தில் அதிகமாக உள்ள இரு பக்கத் துணிகளையும் மண்ணின் மீது மூடி நிலத்தில் அதிகமாக இருப்பதையும் மேலே மடித்து விடவும். நோயாளியை மல்லாக்காகப் படுக்க வைத்து மண்முடிச்சைத் தொப்புளுக்குக் கீழே அடி வயிற்றில் 20 முதல்
30 நிமிடம் வேண்டும்.
வரை வைக்க
உடலில் எந்த பாகத்திலோ, உறுப்பிலோ வேண்டாத பொருட்கள் அல்லது நச்சுப்பொருள் சேர்ந்து திரண்டிருந்தால் இது அதனைக் கலைத்து விடும். இது உடம்பி லுள்ள இரத்த ஓட்டத்தை விரைவு படுத்தும். சுழற்சி அதிகமானால் இரத்தம் சுத்தமாகும். இதை எல்லா நோய்களுக்கும் கொடுக்கலாம்.
சிறப்பாகக் காய்ச்சல், தலை வலி, மார்புவலி, வயிற்று வலி, வயிற்றுக் கோளாறுகள் அனைத் திற்கும் நல்லது.
மண் புதையல்:
அசுத்தம் இல்லாத மேடான இடத்தைத் தேர்ந்தெடுத்து 6 அடி நீளம், 2 அடி அகலம், 11/2 அடி ஆழமும் கொண்ட குழி தெற்கு வடக்காகத் தோண்ட வேண்டும். நோயாளியின் தலையைக் குழிக்கு மேலே தெற்கு திசையில் வைத்துப் படுக்க வைக்க வேண்டும். படுத்த பின்பு உடம்பு முழுவதையும் தோண்டிய மண்ணைக் கொண்டு மூடிவிட வேண்டும்.
அவ்வாறு 20 நிமிடம் முதல் மணி நேரம் வரை இருக்கலாம். இப்படி மூடுவதால் உடம்பிலுள்ள நச்சுப் பொருட்கள் தோல் மூலம் வெளியேறும். உயிரூட்டும் மண்ணின் ஆற்றல் மூலம் பிராண சக்தி மயிர்க் கால்வழியாக உடம்பினுள் புகுந்து இரத்த சக்தியை உண்டு பண்ணும். உடம்பு முழுவதும் சூடு சமநிலை எய்தும். மண் பற்று:
நோய் காணும் இடத்தில் நேரடி
யாக மண்ணைத் தண்ணீரிலோ, வெந்நீரிலோ கரைத்து பூச வேண்டும். வெந்நீர் கரைக்கும் பொழுது தாங்கக் கூடிய அளவாக இருக்க வேண்டும். மண்பற்று எல்லாவித வீக்கங்களுக்கும், வலி களுக்கும் போடலாம். பொதுவாக மண்சிகிச்சையின் பயன்கள்:
1. தோல் சம்மந்தமான வியாதிகளுக்கு
2. வீக்கத்திற்கு
3. வாத நோய்களுக்கு
4. தலை வலிக்கு
5. எல்லா விதமான வலிகளுக்கு
6. ஜூரம்
7. ஊனை சசையுள்ளவர்களுக்கு
8. புண்களுக்கு:
புண்ணைப் பொட்டாசியம் பெர் மாங்கனேட் 1/1000 கரைசலை விட்டுக் கழுவி, பொட்டாசியம் பெர்மாங்கனேட் திரவத்தில் சுத்தமான துணியில் நனைத்து அதில் மண்ணை வைத்து முடிந்து புண்ணின் மீது வைக்க வேண்டும். பூரண சுகம் கிடைக்கும்.
9. குளவி கொட்டியதும் மண்பற்றைப் போட்டவுடன் வலி குறையும்.
10.விஷப்பாம்பு கடித்தவர்களுக்கு உடம்பு முழுவதும் ஈர மண்ணை வைத்துக் கட்ட வேண்டும்.
11.மலச்சிக்கலுக்குச் சுத்தமான மண்ணைத் தண்ணீரில் கலந்து மெல்லிய துணியில் போட்டுக் கட்டி, இரவு முழுவதும் அடி வயிற்றில் கட்ட வேண்டும்.
வெப்ப சிகிச்சை:
உடம்பில் பஞ்சபூதங்கள்
மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் தோன்றுகிறது. இவற்றைத் தெரிந்து அவற்றைக் குறைப்பதும், நிறைப்பதும் சிகிச்சைக்கு வழி வெப்பம் பஞ்ச பூதங்களில் ஒன்று.
வெப்பம் என்பது யாது?
கூடுவதற்கு எங்கே என்று காத்திருக்கின்றன. இப்புணர்ச்சி எரிதல் எனப்படும். இச்செயற்கை யால் தான் நெருப்பு வெளியாகின் றது. செயற்கையில் வேகத்தைப் பொருத்து நெருப்பின் வலிமை அமையும். கார்பன் என்ற தாதுப் பொருளுடன், பிராணவாயு சேர்வ தால் நெருப்பு வெளிப்படுகிறது.
நெருப்பு இடம்,வலம், மேல் ஆகிய மூன்று திக்குகளிலும் பரவும். நெருப்பு நிறத்தை
குறைக்கும். நம் உடம்பில் வாதம்,பித்தம், கபம் செயலாற்றுகின்றன. பித்தம் எறிக்கும் சக்திக்கு ஒப்பாகும். இது குறிப்பாக ஐந்து இடங்களில் வேலை செய்கிறது. வெப்பம் எப்படி உண்டாகிறது?
பூமியைச் சூழ்ந்துள்ள காற்றில் 20 சதம் பிராணவாயு இருக்கிறது. இது மிகவும் விறுவிறுப்பான தாதுப்பொருள் மற்ற தாதுகளுடன். கூடுவதற்கு எங்கே என்று காத்திருக்கின்றன. இப்புணர்ச்சி எரிதல் எனப்படும். இச்செயற்கை யால் தான் நெருப்பு வெளியாகின் றது. செயற்கையில் வேகத்தைப் பொருத்து நெருப்பின் வலிமை அமையும். கார்பன் என்ற தாதுப் பொருளுடன், பிராணவாயு சேர்வ தால் நெருப்பு வெளிப்படுகிறது.
வெப்பம் ஒரு பொருளா?
பொருட்கள் எல்லாம் அணுக் களால் ஆனவை. அணுக்களைக் கண்ணால் பார்க்க முடியாது. நிரந்தர இயக்கம் அவற்றின் பொதுவான பண்பு. அணுக்களின் இயக்கம்தான் நமக்குச் சூடாகப் புலப்படுகிறது. இதுவே வெப்பம் ஒரு பொருள் அல்ல என்பதன் விளக்கமாகும்.

No comments:

Post a Comment

Master Dang Philosophy 101-Q3

Some Reflections  English - When we really practice what we learn and act on it, everything changes.   - If we give our full eff...