Thursday, February 24, 2022

எல்லா நாட்டுக்கான பிரார்தனை

 

எல்லா நாட்டுக்கான பிரார்தனை


எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். ஒரு வடிவில் மனிதர்களைப் படைத்தீர்கள். மக்கள் அனைவரும் ஒரு குடும்பமாக வாழ கட்டளையிட்டீர்கள். 

உமது புனிதத்தின் முன் நாங்கள் நிற்பதோடு, மனிதர்கள் அனனவரும் உங்கள் நிழலின் கீழ் இருக்கிறார்கள். எல்லோரும் உங்கள் அருளைச் சுற்றி வாழ்கிறார்கள்

மற்றும் எல்லோரும் உங்கள் விதியால் வழிநடத்தப்படுகிறார்கள்.


படைத்த இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். நீங்கள் அனைவரையும் அன்பு செய்கிறீர்கள். ஒவ்வொருவரையும் படைத்து எல்லோருக்கும் உயிர் கொடுத்தீர்கள். 

நீங்கள் ஒவ்வொரு நபருக்கும் திறமைகளை வழங்குகிறீர்கள் மற்றும் கடலைப் போல் நிரம்பிய உமது ஆசீர்வாதத்தால் அனைத்து மக்களையும் வெள்ளத்தில் மூழ்க செய்கிறீர்கள்.


நான் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன், மனிதர்கள் அனைவரையும் ஒன்று படுத்தவும், எல்லா மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், 

எல்லா நாடுகளையும் ஒன்று சேர்க்கவும், எல்லா மக்களுக்கும் உதவிக் கொண்டு ஒருவருக்கொருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரன் சகோதரியாக 

பார்த்துக் கொண்டு மற்றும் இந்த பூமியை ஒரு நாடாக பார்த்து, எல்லா மக்களையும் அமைதியுடன் வாழ ஆசிர்வதிக்குமாறு வேண்டுகின்றேன்.


எல்லா மனிதர்களையும் ஒன்று சேர்க்கும் சக்தியை தொடங்க இறைவனிடம் வேண்டுகின்றேன். அமைதிக்கான அடித்தளத்தை கட்ட உங்களிடம் வேண்டுவதோடு, 

எல்லா உள்ளங்களையும் ஒன்றிணைக்கக் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். கருணை நிறைந்த இறைவா, உங்கள் அன்பின் நறுமணத்தால் என் இதயத்தை நிரப்பும்படி 

கேட்டுக்கொள்கிறேன், உங்கள் தெய்வீக ஒளியால் எங்கள் கண்களைத் திறக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், உங்கள் மென்மையான வார்த்தைகளால் எங்கள் காதுகளைத்

திறக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் மற்றும் உங்கள் விதியின் கோட்டையில் எங்களை வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


நீங்கள் சர்வ வல்லமையுடவர், எல்லையற்றவர் மற்றும் நித்தியமானவர். நீங்கள் கருணை நிறைந்தவர், நீங்களே மனிதகுலத்தின் தாழ்ச்சியையும் பலவீனத்தையும் மன்னிப்பவர்.


என் பிரார்த்தனையை கேட்குமாறு மன்றாடுகின்றேன்.


செயின்ட் லூயிஸ், அமேரிக்கா, ஏப்ரல் 24, 1999

லுவாங் மிங் டாங்


No comments:

Post a Comment

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...