Thursday, February 24, 2022

செய்தி

 

செய்தி

லூனா புதுவருடம் 2006 எனது அன்புள்ள, மனித பிரபஞ்ச சக்தியை செயலாற்றுபவர்களே, அனைவருக்கும், இந்த சக்திக் குடும்பத்தை சார்ந்தவர் அனைவருக்கும், இந்தப் புதிய நாய் வருடம் 2006-ல் எனது கனிவான வாழ்த்துக்களையும், ஆசீரையும், ஜெபத்தையும் அனுப்புகிறேன். ஒவ்வொருவருக்கும், குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி சமாதானம் நிறைவதாக. தாயகத்திலும், நாடுகளிலும் வளம் கொழிக்கட்டும், மனித நாகரீகம் மேம்படட்டும், உலக சமதானம் பெருகட்டும்.


இவ்வாண்டின் முக்கிய செய்தி அன்பு. எனவே இது அன்பின் செய்தி, கடந்த சில வருடங்களாக அன்பின் போக்கு, அர்த்தங்கள், பயன்களைப் பற்றி சொன்னேன். இதில் மிகவும் வெளிப்படையான, தெளிவான செயல்பாடு சக்தி பரிமாற்றம். இது நமது திறன்களை பலப்படுத்தி, பிறருக்கு உதவி செய்ய பலனளித்தது. இந்தப் புதிய வருடத்தில் விசேஷமாக "மானிடற்காக அன்பு" பற்றி எடுத்துள்ளேன். ஏனெனில் இதன் அர்த்தம் மனித பிரபஞ்ச சக்தி என்ற தலைப்போடு இணைந்துள்ளது. "மனிதன்-ஒளிவிப்பு-அன்பு" ஆகிய மூன்றும் அதிகாரபூர்வமான HUEவில் அடங்கியுள்ளது. நமது அன்பு தனிமனிதன், குடும்பம், சமூகம், நாடு, இனம், மொழி, வர்ணம், அரசியல்கட்சி, மதம் போன்றவற்றையும் கடந்துச் செல்லவேண்டும்.

இப்படிப்பட்ட நிலைகளைக் கடந்த மானிட அன்புதான் சிறந்த விளைவுகளை பிறப்பிக்கும். மானிடருக்கு காட்டும் அன்பு மனித இனம், நிறம், மொழி,ஏழை, பணக்காரர், பெருந்தன்மை, சிறியோர், தாழ்ந்தோர் என்ற வேறுபாட்டின் எல்லையை தாண்டி செயல்படும். நான் முன்பு கூறியது போல் தன்னிலேயே அன்பு போதாது, ஆனால் அதனை மனிதனிடம் நிலைநிற்கச் செய்யக்கூடிய ஆற்றலும், நல்ல மனதும் தேவை. மனிதனை அன்பு செய்ய ஆற்றலைக் கொடுக்கக்கூடிய கல்வி சாதனம் HUE. இதை செயல் வடிவெடுக்கச் செய்ய வேண்டும்.


உண்மையாகவே எங்கு, எப்பொழுது பார்த்தாலும் இவ்வுலகில் உள்ள மனித இனத்தில் துன்பம், வறுமை, நோய், கவலை, அவமானம், சண்டை, எதிர்ப்பு, நிந்தை, போர் ஆகியவை ஊசலாடி கொண்டிருக் கிறது. மனித அன்பானது உண்மையாக நம்மை இப்படிப் பட்ட பிரச்சனைகளை அணுகி தீர்வுகாண கட்டாயமாக அழைக்கிறது. இதில் நம் கவனத்தை ஈர்த்து துன்புறும் மனிதரின் பிரச்சினையை தீர்த்து, உழன்று தவிக்கும் மனிதனை விடுவித்து, இன்னல்களை போக்கினால் தான் "மனிதற்காக அன்பு” என்பதற்கு அர்த்தம் உண்டாகும்.


நாம் HUE ஆன்மீகக் கல்வி என்று கூறும்பொழுது அது உயர்நிலை ஆன்மாக்களின் ஆன்மீக ஆற்றலை கற்றும், இறை அன்பை முழு அனுபவமாக பெறுவதன் மூலம் நம் மனித அன்பை கொடுத்து நிலை நாட்ட முடியும். கடந்த 17 HUE ஆண்டுகளில் கண்ணுக்கு புலப்படாத சுவர்க்கலோக உபயோகமான ஆன்மீக சக்திகளை கற்றுள்ளோம். மனித குலத்திற்கு உதவிசெய்ய ஆன்மீக ஆற்றலை நமக்கு அளித்துள்ளார். இன்றும் நாம் மனிதனை முழு மனதோடு அன்பு செய்து தொடர்ந்து பணியாற்ற விரும்பினால் நம் ஆற்றலை கடவுள் ஆசீர்வதிப்பார்.


மறுமுறையும் இந்த புது வருட தொடக்கத்தில் உலகிலுள்ள அனைத்து HUE ஈடுபாட்டாளர்களையும், "மனிதற்காக அன்பு” என்ற நற்செய்தியை நடைமுறைப்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன், மனிதனை நேசிப்பது கடவுளையே நேசிப்பதாகும், ஏனெனில் மனித இனம் கடவுளின் குழந்தைகள். இந்த கடவுளின் குழந்தைகளை நேசிப்பது கடவுளையே நேசிப்பதன் அறிகுறியாகும், மனித குலத்திற்கு உதவுவது கடவுளின் சித்தத்தை உணர்வதாகும். கடவுளுக்கு அன்பு செலுத்த விரும்பினால் அதை மனிதருக்கு செலுத்த வேண்டும். கடவுளுக்கு பணி செய்ய விரும்பினால் அதை மனிதனுக்கு செய்ய வேண்டும். கடவுளை தொழ விரும்பினால் மனிதனை மதித்து வாழ வேண்டும்.


HUE ஓர் ஆன்மீக பாதை, இந்தப் பயணம் நீண்ட தூரமான ஒன்று. மனித உயிர்களுக்கு கடவுளின் சித்தத்தின்படி உதவுவது. கடந்த ஆண்டுகளில் நாம் அதிக நன்மை செய்துள்ளோம். அதேபோல் இன்னும் வரும் வருடங்களிலும் அதிக பலனளிக்கவேண்டும், முந்திய வருடங்களில் தனிநபர், குடும்பம், சமுதாயம், நாடு, இனம் ஆகிய வற்றைப் பற்றி அறிந்து அன்பு செய்ய முயற்சித்தோம். இப்பொழுது இன்னும் ஆழமாக, பரந்த முறையில் அன்பைக் கொடுக்க நேரம் வந்துவிட்டது. இதனை நன்கு கற்று, முயற்சி செய்ய வேண்டும். நாம் மனிதம், உலகம். இயற்கையை அன்பு செய்கிறோம். HUE-வின் பெயரால் இன்னும் ஆழ்ந்த ஆய்வு செய்து ஆன்மீக கல்வி, பிரபஞ்ச சக்தியைப் பற்றி படிக்க இன்னும் பிரபஞ்சத்தையும், கடவுளையும் ஆழ்ந்து நேசிக்க வேண்டும்.


உண்மையுள்ள,

மாஸ்டர் லூங் மின் டாங்


No comments:

Post a Comment

மனித பிரபஞ்ச சக்தி தியானம்

 அன்புள்ள சகோதர சகோதரிகளே நமஸ்தே! நாம் அனைவரும் உடல் அளவிலும் மன அளவிலும் ஆன்ம அளவிலும்  நலமாக இருக்கிறோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டுகி...