Thursday, February 24, 2022

புத்தரின் பொன்மொழிகள்

 MM NOVEMBER 2005

புத்தரின் பொன்மொழிகள்
1. நன்றியுணர்வு தான் மனிதனின் நெருங்கிய உறவு.
2. நண்பர்களைத் தனக்கு சமான நிலையில் நடத்த வேண்டும்.
3.நிலை மாறாத நண்பன் தன் ரகசியங்களை உன்னிடம் சொல்வான்.உன் ரகசியங்
களையும் காப்பாற்றுவான். 4. நிர்வாணத்தின் பொருள்
விடுதலை ஆகும். 5. நாக்கு உள்ளவன் பிறரின் நாக்கையும் சகித்துக் கொள்ள வேண்டும்.
6. இந்த பூமியிலே நிலையானது எதுவும் இல்லை. 7. அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும்.
8. அமைதியை விட மேலான மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை.
9. அதிகமாகப் பேசுவதனால் மட்டும் ஒருவன் அறிஞன் ஆகி
விட மாட்டான். 10. கோபத்தை அன்பால் வெல்ல
வேண்டும். தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.
பொய்யை உண்மையால் வெல்ல வேண்டும்.
11. அன்பு தான் இன்ப ஊற்று அன்பு தான் இன்ப ஜோதி அன்பு தான் உலக மகாசக்தி
12.மெய்யில் நிதானம், மொழியில்
நிதானம், மனத்தில் நிதானம், மகிழ்ச்சியில் நிதானம், எங்கும் நிதானம், எதிலும் நிதானம், எப்போதும் நிதானம் இதுவே நல்வழி.
13.பாவத்தின் திறவுகோல் ஆசை ஞானத்தின் திறவுகோல் அன்பு
14. பெரும் துன்பங் களைத் தாங்கும் சகிப்புத் தன்மையே முதன்மை யான தவம்.
15. பிறர் குற்றம் காணும் முன் தன் குற்றம் நீக்கப்பட வேண்டும்.
16. நீக்கப்பட வேண்டிய ஐந்து ஆசை, கர்வம், இச்சை, புகழ்ச்சி,அறியாமை
17.ஆசையே துன்பத்திற்குக் காரணம்.
18.பேராசை பெரும் வியாதி. அதை நீக்கி உங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்ளுங்கள்.
19.பிறரின் உயர்ந்த வாழ்வு கண்டு ஒரு நாளும் பொறாமைப் படாதே.
20.தான் என்னும் அகந்தை இல்லாதவனை யாராலும் வெல்ல முடியாது.
21.உங்கள்
ஆசிரியர்களின் போதனைகளில்நீங்கள்நம்பிக்கை வையுங்கள்.
22.சக்தியும்,செல்வத்தை முயற்சியும் அளிக்கும்.
23. பிறப்பிற்குக் காரணம் எதுவோ அதுவே இறப்பிற்கும் காரணம் ஆகும்.
24. நமக்கு நாமே துணை. தன் கையே தனக்குதவி
25.நம் நற்செயல்களும், தீயசெயல்களும் நம்மை நிழல் போல் ஓயாது தொடர்ந்து வருகின்றன.
26. தனக்குத் தானே தலைவன் தனக்குத் தானே அடைக்கலம். 27.மனிதர்களில் அறிவுக்கண் உள்ளவளே சிறந்தவன்.
28.நிலையான பாறை புயல் காற்றுக்கு அசையாது. ஞானிகள் புகழ்ச்சி, இகழ்ச் சிக்கு அஞ்சுவதில்லை. 29.எவனும் தானே தனக்கு கேடு
தேடிக் கொள்கிறான்.
30.ஒன்று தூய்மையான பேச்சில் ஈடுபடுங்கள். இல்லையேல் மைளனம் காத்திடுங்கள்.
31.பெண்ணுக்குக்
கேடு
தீயநடத்தை. கொடை வள்ளலுக்கு கேடு கருமித்தனம்.
32.மலை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை.
அறிவாளி புகழ்ச்சிக்கு அடிமையாவதில்லை.
33. பொய்யாமையை பெரிய
அறமாக மதித்துப் போற்ற வேண்டும்.
34.ஞானம் இல்லாதவனுக்குத் தியானம் இல்லை.தியானம் இல்லாதவனுக்கு
ஞானம் இல்லை
35. அடக்கியாளப் பெற்ற சித்தம் சுகம் அளிக்கும்.
36.சோம்பல் எப்போதும் இகழப் படுகிறது.
37.உனது விடுதலைக்கு வழி
பிறரிடம் இல்லை. அது உன்னிடமே உள்ளது.
38.சொர்க்கம், நரகம் - இவற்றை நமது நடத்தை உருவாக்கு கிறது.
39. பொறுமை தான் மிக உயர்ந்த பிரார்த்தனை.
40.புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி
திருமதி. மா. தமிழரசி, L6
ஆசிரியை, வடுகர்பேட்டை.

No comments:

Post a Comment

INTIMECY

Every time you have sex with anyone, you've inherited their laws. It's a terrible thing to do. Sex is expensive. You inherit their d...