Thursday, February 24, 2022

அன்பில் உருவாகும் வித்து

 Malarga Manitham Monthly - December, 2005

அன்பில் உருவாகும் வித்து
M. விமலா, Level 7, Lalgudi
மனிதன் அவனது எண்ணங் களின் தலைவன்!, அவனது குணங் களை அமைக்கும் சிற்பி!, சூழ் நிலையை உருவாக்கும் ஓவியன்.
நம் தகுதி பிறர்க்குத் தெரிய வேண்டுமானால் முதலில் பிறர் தகுதியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் எதையும் தைரியமாக அணுக முடியாதவர் களுக்கு அவர்கள் விரும்பிய எதுவும் கிடைப்பதில்லை.
அதிர்ஷ்டம் என்ன என்பதை ஒரு துரதிஷ்டம் நமக்கு சொல்லித் தருகிறது.
அன்பு நிறைந்த இனிய சொல்லானது இரும்புக் கதவைக் கூட திறக்கும் வலிமை வாய்ந்தது.
எல்லோரிடமும் இன்முகத் தோடு பேச வேண்டும். அதைவிட இனிமையான இசை இந்த உல கத்தில் வேறு எதுவும் இல்லை.
நாம் விரும்பியதை எல்லாம் பெற முடியாததால் நாம் பெற முடிந்ததில் திருப்தி கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை விட நம்மைப்பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதுதான் முக்கியமானது.
இறைவனால் கொடுக்கப் படுவதை யாராலும் தடுக்க முடியாது.
இறைவனால் தடுக்கப்படுவதை
யாராலும் கொடுக்க முடியாது. அன்பு என்பது ஒரு பாதை அதில் வாய்பேச முடியாதவர் பேசலாம்!, கண்பார்வை இல்லா தவர் பார்க்கலாம்!, காது கேட்க முடியாதவர் கேட்கலாம்!.
அன்பால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை!, பணம்மட்டும் வாழ்க்கையை நிர்ணயம் செய்து விட முடியாதது. ஒருவரிடம் பணம் நிறைய இருந்தும் இல்லாமல் இருப்பதுபோல்தான். பணம் இருந்தால் வாங்கக் கூடியது மட்டுமே பெறமுடியும். ஆனால் அன்பு இருந்தால் உலகத்தில் எதையும் பெற முடியும்.
உடனே, அன்பு மட்டும் இருந்தால் திருச்சியில் இருந்து நாகர்கோவில் வரைக்கும் போக முடியுமா? என்று நினைக்காதீர்கள்.
பணம் இருந்தால் படுக்கை வாங்கலாம் ஆனால் உறக்கத்தை
வாங்க முடியாது. புத்தகத்தை வாங்கலாம்.
அறிவை வாங்க முடியாது. உணவை வாங்கலாம், பசியை வாங்க முடியாது.
மருந்தை வாங்கலாம், ஆரோக் கியத்தை வாங்க முடியாது.
ஆடம்பரத்தை வாங்கலாம். அழகை வாங்க முடியாது.
பகட்டை வாங்கலாம், பண் பாட்டை வாங்க முடியாது.
கேளிக்கையை வாங்கலாம்.
மகிழ்ச்சியை வாங்கமுடியாது.
ஆயுதங்களை வாங்கலாம், வீரத்தை வாங்க முடியாது. மூக்கு கண்ணாடிகளை வாங்
கலாம், கண்பார்வையை வாங்க
முடியாது. நண்பர்களை வாங்கலாம், உயிர்கொடுக்கும் நண்பர்களை
வாங்கமுடியாது.
வேலைக்காரர்களை வாங்க முடியும், சேவகர்களை வாங்க முடியாது.
தாய்யைக்கூட வாங்க முடியும், தாய்அன்பை வாங்க முடியுமா? வாழ்க்கைக்கு பணம் கொடுத்து வாங்க கூடியது அனைத்தும் தேவைதான். ஆனால் வாழ் வதற்கு? அதுவும் அன்பு மயமான வாழ்வுக்கு?
சிந்தித்துப் பாருங்கள், சகோதர சகோதரிகளே! பணம் வேண்டும், மறுக்கவில்லை, அன்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கலாமே! அன்பு இல்லாமல் வாழலாம், ஆனால் அந்த வாழ்வு பிறர் ரசிக்கும்படி இருக்காது, குறை கூறும்படி அமைந்துவிடும்.
அப்படிப்பட்ட வாழ்வு வாழ் வதனால் நமக்கே தெரியாமல் நிறைய இழந்துவிடுகிறோம். அன்புக்குள் வந்துவிட்டால் இழந்தவை அனைத்தும் பெற்று விடுகிறோமே, அதில் கிடைக்கும் சந்தோஷம், அமைதி, நிம்மதி, ஆனந்தம் பணத்தால் கொடுக்க முடியுமா?
அன்று கோடீஸ்வரனாக இருக்கலாம், சுனாமி வந்து போனதால் மற்றவர்களிடம் எதிர்பார்த்து நிற்க வேண்டிய சூழ்நிலை.
ஆனால் எத்தனை சுனாமி வந்தாலும், நிலநடுக்கம் வந்தாலும் நம்மிடம் உள்ள அன்பை அடித்து செல்ல முடியுமா?
அந்த அன்பினால் எத்தனை
உயிர்கள் இன்று மண்ணில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். உணர்ந்து உண்மை புரியும். பாருங்கள்,
அன்புடன் பழகுவதே ஒரு கலை, அன்பு இல்லையேல் உயிர்கள் இல்லை.
நமது வாழ்க்கையை அன்பு மயமான வாழ்வாக மாற்ற முயற்சி எடுப்போமா? வாழ்க அன்புடன், வளர்க இன்பமுடன்.
நன்றி!

No comments:

Post a Comment

Achieve - think

Achieve -  think ----------------------------------- Science Perspective:- Our thinking is created by the brain communicating with the frequ...