Thursday, February 24, 2022

குணங்கள்

 MM - DECEMBER, 2005

குணங்கள்
கடவுள் நமக்கு கொடுத்த ஒரே குணம் உண்மை. அதனால் தான் நாம் சொல்லுகின்றோம் கடவுள் இருக்கின்ற இடத்தில் உண்மை இருக்கும். உண்மை இருக்கின்ற இடத்தில் கடவுள் இருப்பார் என்று. உண்மை என்ற குணம் எப்படி கடவுளிடம் பிறந்தது. எப்படி அது கடவுளின் குணமாக மாறியது. கடவுளின் சிந்தனையி லிருந்து படைப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக தோன்றின. கடவுள் திருப்தி அடைகின்றார். "எல்லாம் நிறைவாக, அழகாக, திருப்தியாக இருக்கிறது என்று அவர் கூறியது உண்மை என்று உணர்ந்ததும், பிறந்தது. "சத்தியம்” என்ற குணம் பி அதனால்தான் நாம் கூறுகின் றோம். உண்மை உள்ள இடத்தில் இறைவன் இருப்பார். இறைவன் இருக்கின்ற இடத்தில் உண்மை இருக்குமென்று..... சத்தியம் என்ற வாக்கு பிறந்தது. இறைவனின் சிந்தனையில்.......... அதனால் சத்தியம் இருக்க வேண்டிய இடம் நம் சிந்தனை.
நம் சிந்தனையில் சத்தியம் இருந்தால் அது செயல்படும் பொழுது நம் பேச்சில் செயலில் வெளிபடும். அது செயல்படும் பொழுது அது உண்மை என்ற குணமாக வெளியே வருகின்றது. உ.ம், அவர் கூறுவது உண்மை அவர் செய்தது உண்மை என்று படைப்பெல்லாம் இறை வனிடமிருந்து வந்தது. உண்மை அவர் எல்லாம் நன்றாக இருக்
கின்றது என்று உண்மை......... கூறியதும்
"அன்பிலிருந்து வந்த இறைவன் உருவாக்கி விட்ட குணம் உண்மை. சத்தியம்.
பல குணங்கள் உலகத்தில் இன்று உருவாகிவிட்டது. அந்த குணங்கள் எங்கிருந்து வந்தது யாரால் உருவாக்கப்பட்டது. அன்பு செயலில் வெளிபடும் பொழுது செயலுக்கு ஏற்ற பெயரை மக்கள் சூட்டினார்கள். உ.ம்.மற்றவர்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படும் பொழுது அன்பு இரகசியமாக செயல் பட்டது...... அதனால் இரக்க முள்ளவன் கருணை உள்ளவன் என்று கூறுகின்றோம். கடவுளை யும் இரக்க குணமுள்ளவர் என்று கூறுகின்றோம்.
அன்பு -மற்றவர்கள் நமக்கு கொடுத்த துன்பத்தை மன்னிக்கும் பொழுது இவன் பெரிய மனசு படைத்தவன் - மன்னிக்கும் குண முள்ளவன் என்று பெயர் வாங் கியது. அதனால்தான் கடவுளை பார்த்து மன்னிக்கும் கடவுள் என்று கூறுகின்றோம்.
பல வார்த்தைகள் கூறிய பல குணமாக நமக்கு தெரிகின்றது. எல்லா குணத்தின் பிறப்பிடம் "அன்பு" மாத்திரமே. 44
அதே போல "சத்தியம்" செயல் படும் பொழுது நாம் கூறுகின்றோம். இவன் உண்மை உள்ளவன். சத்தியம் தோற்றுப்போகாது சாகாது உண்மை என்றும் நிலைத்திருக்கும். இவன் பேச்சில் உண்மை உண்டு அதனால் இவன் நீதிமான். இவன் சொன்னால் செய்வான். இவன் பொறுப்புள்ளவன். கடமை குணம் உள்ளவன். இப்படியே அடுக்கி கொண்டு போகலாம். இதற் கெல்லாம் பிறப்பிடம். "சத்தியம்" "உண்மை".
இப்பொழுது என் மனதில் பிறக்கின்ற கேள்வி....... கோபக் காரன், பொறாமை குணம் உள்ளவன் நன்றி கெட்டவன். இப்படி யெல்லாம் பல குணத்தை கூறு கின்றோமே, அது உண்மையா? அப்படி என்றால் அதன் பிறப்பிடம் என்ன? சற்று சிந்திப்போம்!.
பாட்டு போடுகின்றார்கள். எல்லோரும் ஆடுங்கள் என்று கூறுகின்றார்கள். உடனே சில பேர் ஆட தொடங்கு கின்றார்கள். அதை பார்த்துக்கிட்டே இருக்கும் பொழுது சில பேருக்கு ஆட வேண்டுமென்று உணர்வு வரு கின்றது. அவர்களும் ஆடு வோருடன் சேருகின்றார்கள். ஆடுகின்றார்கள். சில பேர் தனக்கு ஆட முடியாது ஆனாலும் ஆடுவதைப் பார்த்து ரசிக்கின்றேன் என்றுகூறி ரசித்து, இருந்து கொண்டே சிந்தனையில் ஆடி மகிழ்கின்றார்கள். சிலபேர் எனக்கு ஆட தெரியாது ஆட்டத்தைப் பார்த்து ரசிக்கவும் தெரியாது என்று அமர்ந்து இருக்கின்றார் கள்....... அவர்களின் உணர்வில் என்ன மாற்றம் வருகிறது. ரசித்து, ரசித்து இருப்பார்கள்...... ஆஹாஇவன் என்ன ஆட்டம் ஆடு கின்றான். இவன் பெரிய ஆட்டக் காரன் என்ற உண்மையை வார்த்தைகளால் வெளிபடுத்து கிறார்கள்...... ஆட்டத்தையும் இவர்கள் பார்க்கின்றார்கள். அதோடு ஆட்டக்காரனையும் இவர்கள் பார்க்கின்றார்கள். மனதார வாழ்த்துகின்றார்கள். உன்னைப் போல எனக்கு ஆட்டம் வராது என்ற உண்மையையும் கூறுகின்றார்கள்.
ஆடவும் தெரி ஆட்டத் தையும் ரசிக்காமல் இருக்கும் இவர்களின் செவியில் மற்றவர்கள் கூறும் உண்மை கேட்கின்றது. இவர்கள் ஆட்டத்தை பார்க்காமல் ஆடும் நபரை பார்க்கின்றார்கள். இவர்களின் "Ego" "தான்" என்ற உணர்வு - உனக்கு இவனைப் போல ஆடத் தெரியவில்லையே என்று எடுத்து சொல்லுகின்றது.
தம் கண்ணோட்டத்தை ஆட்டத் தில் மாற்றினால் -இவர்களுடைய உணர்ச்சி அதை காப்பி பண்ணி தன்னுடைய புத்திக்கு அனுப்பி கால்களை ஆட்ட உத்தரவு கொடுத்திருக்கும். ஆனால்...... இவர்களின் கண்ணோட்டம் ஆள் மேல் பதிவு செய்து விட்டதால்..... இவர்களின் புத்தி எதிர்மறை சிந்தனைக்கு போகின்றது. உடனே அது செயல்பட்டு வார்த்தையில் வெளிபடுகின்றது. இது ஆட்டமா? சரியான பேய் ஆட்டம்..... இது போல எனக்கு ஆடத்தெரியாது என்று கூறிவிட்டு இருந்த இடத் திலிருந்து மாறி போகிறார்கள். இருந்த இடத்திலிருந்து மாறி. கொண்டாலும் அவர்கள் சிந்தனை யிலிருந்து "அவனை” மாற்ற முடியாது. அது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக் கும். அவன் செய்கின்ற எல்லா செயலுக்கும் பெயர் தான் "பொறாமை. பொறாமையின் . உச்சி கட்டம் நீ இருக்கும் மட்டும். என்னால் வாழ முடியாது ஏன் என் சிந்தனை யில் நீ இருந்து கொண்டு உன்னால் ஆட தெரியாது என்ற உண்மையை என் "Ego"வுக்கு கூறி கொண்டே இருக் கின்றாய். நீ ஒரு முள்ளாக மாறி விட்டாய். அதனால் நான் உன்னை அழித்தே தீருவேன் என்று முடிவு எடுத்துக்கொண்டு - அன்பிலிருந்தும் - சத்தியத்தி லிரு ருந்தும் வெளியே வந்து உன்னை அழிப்பேன் என்று ஒரு அழிவு செயலுக்கு அவன் "ஈகோ" அவன் உடலை செயல்படுத்த செய்கின்றது.
எல்லா எதிர்மறை குணங் களின் பிறப்பிடம், "உண்மையை ஏற்றுக் தன்மை... கொள்ள முடியாத இது செயல்படும் பொழுது கோபமாக - பொறாமை யாக மாறி இதன் முடிவு செயல் அழிக்கும் தன்மை. இதனால் தான் நாம் கூறுகின்றோம். உண்மை இல்லாத இடத்தில் தெய்வம் இருக்க முடியாது. தெய்வம் படைக்கும், அழிக்காது என்று மேலும் சில தீய குணங் களை எடுத்துப் பாருங்கள். கோள் சொல்வது பிறரைப்பற்றி பின்னால் பேசுவது இங்கும் அங்கும் பகைமையை பற்றிவைப் பது - இப்படி நம்முடைய எல்லா
எதிர்மறை குணங்களையும் எடுத்து அலசி பாருங்கள் கடைசியில் என்ன உண்மை வரும். உண்மையை சரியான ஆளிடம் சரியான இடத்தில் சொல்ல தைரியம் இல்லை........ உண்மை பேச தைரியம் இல்லை என்றால்...... அதை ஏற்று வாய் அடைத்திருந்தால் இந்த கெட்ட குணங்களை நாம் வளர்க்க வேண்டாம். உண்மையை சொல்ல தைரியம் இல்லை. ஆனால் பொய் சொல்லவும் இங்கு அங்கு பேசவும் நமக்கு தைரியம் உண்டு பார்த்தீர்களா? பார்த்துக் கொள்ளுங்கள்!.
கோபத்தை சற்று அலசிப் பார்ப்போமா? உண்மை உள்ளவன் போல பேசலாம் செயலில் காட்டலாம் - மற்றவர்களை நம்ப வைக்கலாம். யாராவது உண்மையை கண்டு பிடித்து இவர்களிடம் இதை காட்டினால் சுட்டி இல்லை ஒரு கேள்வி கேட்டால் போதும்.. சத்தத்தை உயர்த்தி கத்துவார்கள்
உடனே கோபப்படுவார்கள்.... ஏன். சத்தத்தை உயர்த்தி கத்தும் பொழுது மற்றவர்கள் இவன் கோபத்தை பார்த்து சரியப்பா நான் போகிறேன் என்று விலகி கொள்வார்கள். ஆனால் எதற்கும் பயப்படாமல் - உண்மையை கூறி அதற்காக என்ன கஷ்டங்களை அனுபவித்தாலும் உண்மையை எடுத்துக்காட்டு நான் வேன் என்று கூறி திரும்ப, திரும்ப உண்மையை கூறிக் கொண்டே இருப்பார்கள். உண்மையை நீ ஏற்றுக் கொள்
உண்மைக்குள்நீ வா என்று கூறி உண்மையை திரும்பி, திரும்பி..... நாலுபேருக்கு முன் கூறுவார்கள். சில சமயம் இவன் ஏற்றுக் கொள்ளலாம் - ஆனாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் - இவன் இருந்தால் நமக்கு ஆபத்து என்று கூறி இவனை கொல்லபார்ப்பார் கள். இது தான் நடந்தது. இயேசு பிரானுக்கு.......... அவர் கூறிய உண்மையை, ஏற்று, தன் வாழ்வில் ஏற்றுக் கொண்டவர்கள் சிலர். அவரை எதிர்த்தவர்கள் பலர். ஆனால் ஏசுபிரான் கூறினார், உண்மைக்கு சாட்சியம் சொல்லவே நான் வந்தேன் என்று. ஏற்றுக் கொள்ளாதவர்களின் பகைமை உணர்ச்சிக்கு ஆள் ஆனால் என்ன முடிவு என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
இறை தூதர்கள் எல்லோரும் அன்பையும், உண்மையையும் " நன்கு அறிந்தவர்கள். அதனால் தான் இறைவனின் கருவியாக திகழ விரும்புகின்ற எல்லோரும் இந்த உண்மையை முதலில் தனதாக்க வேண்டும் - வாழ வேண்டும் - வாழ்க்கையில் அது செயல்பட வேண்டும். இதற்காகத் தான் பவுல் அடியார் ஜெபித்தார். 'கடவுளே ஆம் என்று சொல்லும் இடத்தில் ஆம் என்றும் இல்லை ஆம் என்று சொல்லும் இடத்தில் இல்லை என்று சொல்லும் வரத்தை தா என்று கூறினார்.
HUE மாணவ மாணவிகளே ! நான் கடவுளின் கருவியாக மாற வேண்டும். தொட்டும் சுகமளிக்கும் 17
வரம் எனக்கு வேண்டும் என்று நாம் கடவுளை கேட்கின்றோம். கடவுளின் கரத்தில் பயன்படுத்தும் கருவியாக நாம் திகழ வேண்டுமென்றால்...... உங்கள் சிந்தனையில் உண்மை உண்டா? உங்கள் உள்ளத்தில் அன்பு உண்டா என்று முதலில் பாருங்கள். அதை வளர்த்து கொள்ளுங்கள். HUE யை மற்றவர்களுக்கு படித்து கொடுக்க விரும்புபவர்கள் முதலில் உங்கள் வாழ்க் க்கையில் இந்த குணம் இருக்கின்றதா என்று பார்த்து வளர்த்து கொள்ளுங்கள். அப்படி இருந்தால் தான் நீங்கள் எடுக்கும் வகுப்பில், வார்த்தையைவிட உங்கள் வாழ்க்கை பேசும் ....... அது மற்றவர்களை மாற்றும் இல்லை என்றால் பவுல் அடியார் சொல்லுவதுப் போல வெறும் மணியின் ஓசையாக போய்விடும். மாணவர்கள் நன்றாக எடுத்தீர்கள் என்று சொல்லுவார்கள். ஆனால் நீங்கள் எடுத்த வகுப்பு அவர் களின் வாழ்க்கையை தொடாது. நான் HUE ல் பயிற்று கொடுப்பது வகுப்பு அல்ல Lecterஅல்ல பிரசங்கம் அல்ல........கல்வி
என்பதை
விடாதீர்கள்.
கடவுள் இதன் வழியாக உங்களுக்கு கூற விரும்பும் பாடங்களை படித்து தியானித்து தனதாக்கி கொள்ளுங்கள். இறை ஆசிர் உங்களை வழி நடத்தட்டும்.
Director

No comments:

Post a Comment

INTIMECY

Every time you have sex with anyone, you've inherited their laws. It's a terrible thing to do. Sex is expensive. You inherit their d...