Thursday, February 24, 2022

அறிவுக்கு விருந்து 1. அவரவர் அர்த்தம்

 MM - NOVEMBER 2005

அறிவுக்கு விருந்து
1. அவரவர் அர்த்தம்
தேவர்கள், மனிதர்கள், அரக்கர் கள் என அனைவரும், ஒரே சமயம் பிரமனிடம் சென்று அறிவுரை வழங்குமாறு கேட்டனர். பிரம்மா வும் "தீ" என்ற எழுத்தை மட்டும் சொன்னார். உடனே தேவர்கள், த என்றால் தமனம். தமனம் என்றால் புலனடக்கம். நமக்கு காம இச்சை அதிகம். தேவர்களாகிய நாம் காமம் இன்றி புலனடக்கத்துடன் வாழவேண்டும். அதனால் தான் பிரம்மா 'த' என்றார்" என்றனர்.
மனிதர்களே, "த என்றால் தானத்தைக் குறிக்கிறது. மனிதர் களாகிய நாம் கருமிகளாக இருக்கக் கூடாது. தானம் செய்து வாழ வேண்டும், அதற்காகத் தான் பிரம்மா 'த' என்றார்" என்றனர்.
அரக்கர்களோ, "த என்றால் தயை. தயை என்பது இரக்கத்தைக் குறிக்கிறது. அரக்கர் களாகிய நாம் கொடூரமான செயல்களில் ஈடுபடக் கூடாது. இரக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக 'த' என்றார்" என்றனர்.
இவ்வாறு அவரவர் செய்யும் தவறுகளுக்கேற்ப 'த' வார்த்தை யைப் புரிந்து கொண்டு, அதன் படி வாழ்ந்து வளம் பெற்றனர். 2. பொறுமையின் சிகரம்
சர். ஐசக் நியூட்டன், செல்லப் பிராணியாக நாய் ஒன்றை வளர்த் தார். அதனிடம் அவர் மிகுந்த அன்பு காட்டினார். புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்த சர். ஐசக்
நியூட்டன் 20 ஆண்டு கால மாக ஆய்வு செய்த அறிவியல் குறிப்பு களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறிப்புகளாக எழுதி வைத்திருந் தார். இரவு நேரத்தில் அவர் வேறு பணியில் ஈடுபட்டிருக்கும் போது, நாய் விளக்கைத் தட்டிவிட, குறிப்பு கள் எழுதப்பட்டிருந்த நோட் முழு வதும் தீயினால் எரிந்தது. இதனைப் பார்த்த சர். ஐசக் நியூட்டன் நாயின் மீது சிறிதும் கோபப் படாமல், நாயைச் செல்லமாகத் தடவிக் கொடுத்து விட்டு மீண்டும் ஒரு நோட்டை எடுத்து, தன் நினைவில் உள்ள அறிவியல் குறிப்புகளை எழுத ஆரம்பித்தார். 3. லிங்கனின் பணிவு
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனிடம் அவரது அலுவலக உதவியாளர் நடத்திய உரையாடலைக் காண்போம்.
அலுவலக உதவியாளர்: ஜனாதிபதி அவர்களே! உங்கள் அப்பா தைத்த செருப்பைத் தான் நான் காலில் அணிந்திருக்கிறேன்.
ஆபிரகாம் லிங்கம்: பார்த்தீர் களா! என் அப்பா தைத்த செருப்பு எவ்வளவு உறுதியாக இருக்கிறது. நான் ஜனாதிபதியாக இருந்தாலும், செருப்பு தொழிலாளி தான். உங்கள் செருப்பு கிழிந்தால் என்னிடம் தாருங்கள். நான் அதைத் தைத்து தருகிறேன்.
4. டென்ஷன் வேண்டாம் மாவீரன், நெப்போலியன்
போனபார்ட் மிகவும் நிதான மானவர். எதற்கும் டென்ஷன் ஆகாதவர். இவரது தளபதிகள் எப்படியாவது நெப்போலியனைப் பதட்டம் அடைய வைக்க வேண்டும் என்று நினைத்தனர். பெரிய விருந்து ஒன்றிற்கு மாவீரன் நெப்போலியன் அவர் களை அழைத்திருந்தனர். நெப்போலியனோடு ஏராளமான அரச பிரமுகர்களும் வந்திருந் தனர். அனைவரும் கையில் மதுக் கிண்ணத்தை எடுக்கும்போது, வெடிகுண்டு ஒன்று பலத்த சத்தத்துடன் விருந்து மேடைக் கருகில் வெடித்தது. அனைவரும் பதட்டத்தோடும், பயத்தோடும், தங்கள் கையில் வைத்திருந்த மதுக்கிணத்தைக் கீழே போட்டனர். ஆனால் மாவீரன் நெப்போலியன் மட்டும் பதட்டமின்றி, பயமின்றி கையில் இருந்து மதுக்கிண்ணத் தில் உள்ள மதுவை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந் தார். தளபதிகளோ, நெப்போலி யனின் மனஉறுதியையும், தைரியத்தையும் மனதிற்குள் பாராட்டிக் கொண்டிருந்தனர். 5.சந்தோஷப் படு
வயதான பாட்டி ஒருவர் தன் மூத்த மகளை செருப்பு வியா பாரிக்கும் தன் இளைய மகளைக் குடை வியாபாரிக்கும் திருமணம் செய்து கொடுத்திருந்தார். வெயில் காலத்தில் குடை விற்பனை அதிகம் ஆகாது, அதனால் இளையமகள் கஷ்டப்படுவாளே என்றும், மழைக் காலத்தில் செருப்பு விற்பனை சூடு பிடிக்காது, அதனால் மூத்த மகள் கஷ்டப்படுவாளே என்றும்
மனம் வருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவ்வூருக்கு வந்த மகான் ஒருவரிடம் இந்த கஷ்டத்தைப் பாட்டி எடுத்துச் சொன்னார். மகானோ, "அம்மா! இப்படி மாற்றி நினைத்துப் பாருங் களேன். மழைக் காலத்தில் இளைய மகள் சந்தோஷமாக இருப்பாள், இப்படி நினைத்துப் பார்த்து உங்கள் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங் கள். இன்பமோ, துன்பமோ அது நம் செயலில் இல்லை, எண்ணும் எண்ணத்தில் தான் இருக்கிறது என்றார். மகானின் ஆசியுரைக்கு மனதார நன்றி தெரிவித்து, மகிழ்ச்சியுடன் சென்றார் பாட்டி.
6. உண்ணா நோன்பு காட்டிலே வசித்த குரங்கு ஒன்றிக்கு திடீரென்று உண்ணா நோன்பு இருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. நேரமாக, நேரமாக குரங்கின் பசி அதிகரித்தது. மாமரத்தில் அமர்ந்திருந்த அந்த குரங்கு, அதில் பழுத்திருந்த மாம்பழத்தைப் பார்த்தது. அதைத் தொட்டுப் பார்ப்பதில் தவறில்லை என்று நினைத்த அது, மாம்பழத் தைப் பறித்து கையிலே வைத்துக் கொண்டது. சிறிது நேரமானதும் "வாசனை பார்ப்பதில் தப்பில்லை என வாசனை பார்த்தது. இன்னும் சிறிது நேரம் கழித்து நாக்கால் தடவிப் பார்த்தால் தப்பில்லை என்று நாக்கால் தடவியது. பின் ஆசையாலும், மனச்சபலத்தாலும் முழு மாம்பழத்தையும் அது சாப்பிட்டது. உண்ணா நோன்பு, உண்ணும் நோன்பாக மாறியது.
7. நல்லதைச் சொல்வேன்
துறவி ராமானுஜர், திருக் கோட்டியூர் நம்பியிடம் மந்திரங் களைக் கற்கச் சென்றார். திருக் கோட்டியூர் நம்பி, “இந்த மந்திரங் களை மற்றவருக்குச் சொன்னால், சொன்னவருக்குத் தீமை ஏற்படும், கேட்பவர்களுக்கோ நன்மை ஏற்படும்” என்று சொல்லி மந்திரங் களை உபதேசித்தார். மந்திரங் களைக் கற்ற ராமானுஜர் திருக் கோட்டியூர் கோயில் கோபுரம் மீது ஏறி நின்று, தான் கற்ற மந்திரங் களை அனைத்து மக்களுக்கும் உபதேசித்தார். இதைக் கண்ட திருக் கோட்டியூர் நம்பி, "ராமானுஜம், இந்த மந்திரத்தைச் சொன்னால், சொன்னவனுக்குத் தீமை ஏற்படும், கேட்டவனுக்கு நன்மை ஏற்படும்" என்றார். ராமானுஜமோ, "பரவா யில்லை. இந்த மந்திரத்தைக் கேட்டு பலர் நன்மை அடைகிறார்கள் என்றால், அதனால் எனக்கு எந்த தீமை வந்தாலும் பரவாயில்லை, அதனால் தான் இந்த மந்திரங் களை எல்லா மக்களுக்கும் உப தேசிக்கிறேன்" என்றார். இதைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, "நீரே என் வழிகாட்டி" என்றார்.
8. வரம் வேண்டும்
இறைவன் தரிசனம் வேண்டி நீண்டநாள் பக்தன் ஒருவன் தவம் செய்தான். இறைவனும் நேரில் தோன்றி பக்தனிடம் என்ன வேண்டும் என்று கேட்டார். தங்கம் வேண்டும் என்ற பக்தனிடம், கடவுள் "தருகிறேன்" என்று சொல்லி அவனது வீட்டு பீரோவை நோக்கித் தன் ஆட்
காட்டி விரலை நீட்டினார். பீரோ முழுவதும் தங்கமானது. உள்ளேயும் தங்கக் கட்டிகள் குவிந்தன. வேறு என்ன வேண்டும் என்று கேட்ட இறைவனிடம் பக்தன், "பணம் வேண்டும்” என்றான். கடவுளும் தருவதாகச் சம்மதித்து அவன் வீட்டில் உள்ள புத்தகங்களை நோக்கித் தம் ஆட்காட்டி விரலை நீட்ட, புத்தகங்கள் அனைத்தும் பணக்கட்டுகளாக மாறின. தனாலும் பக்தன் திருப்தி அடையாததைக் கண்டு “வேறு என்ன வேண்டும்? என்று கேட்டார். பக்தன் "வெள்ளி வேண்டும் என்றான். இறைவன் அவன் வீட்டுப் பாத்திரங்கள் அனைத்தையும் நோக்கித் தம் ஆட்காட்டி விரலை நீட்ட பாத்திரங்கள் யாவும் வெள்ளிக் கட்டிகளாயின. ஆனாலும் பக்தனுக்கு மனநிறைவு ஏற்பட வில்லை. "வேறு என்ன தான் வேண்டும்?" என்று கேட்ட இறைவனிடம், பக்தன், "கடவுளே, உங்கள் ஆட்காட்டி விரலை என்னிடம் தாருங்கள்" என்றான். மனிதனின் திருப்தியடையாத உள்ளத்தையும், பேராசையையும் கண்ட இறைவன் சிரித்துக் கொண்டே மறைந்தான்.
9. ஏன் முளைக்கவில்லை?
சின்னக் குரங்கு ஒன்று தோட்டத்திலே பத்து விதைகளை நட்டது. தினம் தினம் ஒவ்வொரு விதைக்கும் பத்து குடம் தண்ணீர் ஊற்றியது. நாட்கள் பல சென்றன. விதை முளைக்கவே இல்லை. ஆச்சரியம் அடைந்த சின்னக் குரங்கு, பெரிய குரங்கிடம் சென்று ஏன் விதைகள் முளைக்க வில்லை என்று கேட்டது. பெரிய குரங்கோ தினசரி நீர் ஊற்ற வேண்டும் என்றது. சின்ன குரங்கோ, ஒவ்வொரு விதைக்கும் 10 குடம் நீர் ஊற்றுவதாகச் சொன்னது. இதைக் கேட்ட பெரிய குரங்கு, ஒரு விதைக்கு 10 குடம் ஊற்றியதால் விதை அழுகியிருக் கலாம், அதனால் அவை முளைக் காமல் இருந்திருக்கலாம் என்றது. உடனே சின்ன குரங்கு, "இல்லை, இல்லை, விதைகள் அழுகவே இல்லை, நான் தான் தினம் தினம் தண்ணீர் ஊற்றியதும், மண்ணைத் தோன்டி விதைகள் எப்படியிருக் கின்றன என்று தோண்டிப் பார்ப்பேன். ஒரு விதை கூட அழுக வில்லை. ஆனாலும், ஏன் தான் அவை முளைக்கவில்லையோ? என்று வருத்தப்பட்டது.
10.உலகம் எப்படிப்பட்டது?
ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம் சரிடம் ஒருவர், "ஸ்வாமி, இந்த உலகம் நல்லதா? கெட்டதா" என்று கேட்டார். உடனே ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர்,பூனையின் பல் நல்லதா, கெட்டதா என்று பூனைக் குட்டியிடம் கேட்டால் அவை பூனையின் பற்கள் நல்லவை என்று சொல்லும். ஆனால் அதே கேள்வியை எலி யிடம் கேட்டால் அவை பூனை யின் பற்கள் கெட்டவை என்று சொல்லும். அதுபோல் உலகம் நல்லதா? கெட்டதா? என்பது உலகத்தைக் காண்பவரைப் பொறுத்தது" என்றார்.
11. நன்றி சொல்வோம்
இஸ்லாமிய அறிஞரிடம் ஏழை ஒருவன், "நான் எப்போதும் கடவுளை வழிபடுகிறேன் எந்த செல்வமும் அவர் எனக்குத் தரவில்லை. கேட்டான். ஏன்?” என்று
அறிஞர்: நண்பா! நான் 1000 வெள்ளிக்காசுகள் உனக்குத் தருவதாக இருந்தால் உன் இரண்டு கண்களையும் எனக்குத் தருவாயா?
ஏழை: கண்டிப்பாகத் தர மாட்டேன்.
அறிஞர்: 2000 வெள்ளிக் காசுகள் உனக்கு நான் தரு கிறேன். உன் கால்கள் இரண் டையும் வெட்டி எனக்குத் தருவாயா?
ஏழை: நிச்சயம் தரமாட்டேன். அறிஞர்: உன் கண்களுக்கும், காலுக்குமே இவ்வளவு மதிப்பு என்றால் உன் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் எண்ணிப்பார். எத்தகைய நிறை வான செல்வத்தை அவர் நமக்குத் தந்திருக்கிறார். இதைக் கொண்டு உழைத்து முன்னேறு வதை விட்டு, கடவுளைக் குறை சொல்வதில் நேரத்தைச் செல வழிக்காதே. கடவுளுக்கு நன்றி சொல்லி, உன் பணியைச் செய்.
ஏழை: நன்றி அறிஞரே! இறைவனுக்கு நன்றி செலுத்த இதோ இப்போதே மசூதிக்குச் செல்கிறேன்.
மா. தமிழரசி, நிலை 7, ஆசிரியை, வடுகர்பேட்டை.

No comments:

Post a Comment

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...