Malarga Manitham ( May 2015 )
இன்றைய விஞ்ஞான உலகத்தில் ஆன்மீகம் என்ற வார்த்தை மக்களுக்கு ஒரு கசப்பு உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதுமட்டும் அல்ல ஒரு ஏளன சிரிப்பையும் கொடுக்கிறது. ஆன்மீகம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெளிவுபடுத்த வேண்டும். ஆன்மீகம் என்பது கடினமான தவம் அல்ல. இது கருணை தவம். அந்த கோவிலுக்கு போக வேண்டும், இந்த கோவிலுக்கு போக வேண்டும். பரிகாரம் செய்ய வேண்டியதும் அல்ல. கடவுளை இப்படித்தான் வழிபட வேண்டும் என்ற சடங்குகளும் அல்ல. இது எல்லாம் மனிதன் ஏற்படுத்திக் கொண்டது. இப்படி எல்லாம் செய்தால் தான் ஆன்மீகத்திற்கு போக முடியுமா? அதுவும் அல்ல. அப்படியென்றால் உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன?
ஆன்மீகம் என்றால் ஒரு பெரிய விழிப்புணர்ச்சி தன்னை அறிந்து, தன் முழுமையை அறிந்து ஏன் வந்தோம்.
எதற்காக வந்தோம், தனக்குள்ளிருக்கும் ஜீவ ஆத்துமாவை உணர்ந்து, அதன் குரல் கேட்டு, அக்குரலுக்கு கீழ்ப்படிந்து, தன் வாழ்க்கையை நடத்தி, தன்னை ஏற்று தனக்குள் இருக்கும் மாற்ற வேண்டிய குணங்களை ஏற்று, தன் ஜீவ ஆத்துமாவை சந்தோஷமாக, ஆரோக்கியமாக, நிம்மதியாக வைப்பதற்குப் பெயர்தான் ஆன்மீகம்.
சந்தோஷமாக இருக்கிற ஆன்மா பொங்கி வரும் சந்தோஷத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பும். இந்த பகிர்வுத்தன்மை, பிறரை நோக்கி இருப்பதால் பிறரை அன்பு செய். அவர்களை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்யும். இப்படியாக உறவை வளர்த்துக் கொள்ளும். உறவு வந்த பிறகு சும்மா இருக்க முடியுமா, பிறர் கஷ்டத்தை, தன் கஷ்டம் போல உணரத் தொடங்கும். உதவி செய்ய ஆரம்பிக்கும். இதற்குப் பெயர்தான் கருணை செயல். கருணை செயல் என்றால் மற்றோர் பசிப்பிணியை
தீர்க்கும். 2. மற்றவர்களின் நோய், பிணியை தீர்க்கும். 3. வறுமையை ஒழிக்கும். 4. மற்றவர்களின் அறியாமையை நீக்கி, ஞானத்தை கொடுக்கும். 5. மரண பீதியை மாற்றி, மரணத்தை வெல்வது எப்படி என்ற வழிமுறைகளை படிப்பித்து கொடுக்கும். பிறப்பு - இறப்பு தத்துவத்தை எடுத்துரைக்கும். விண்ணுலகில் இறந்தால், மண்ணுலகில் பிறக்கின்றோம். மண்ணுலகில் இறந்தால் விண்ணுலகில் பிறக்கின்றோம். அப்படிபென்றால் ஜீவ ஆத்துமாவுக்கு இருப்பது பிறப்பு மட்டுமே, இறப்பு அல்ல.
இப்படியே தானும், வாழ்ந்து, தன்னுடன் பிறந்த மற்றவர்களையும் வாழ வைப்பதற்கு பெயர்தான் ஆன்மீகம்.
உலகத்திற்கு வருகிற ஒவ்வொரு ஆத்துமாவும், இந்த ஜீவ ஆன்மீகத்தை அறிய வேண்டும். உடலை கொடுக்கும் பெற்றோர்கள் உண்மையான ஆன்மீகத்தை கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. தொட்டில் ஆட்டும் பொழுதே, தெய்வீக பற்றையும் நாட்டுப்பற்றைவும் கொடுக்க அறிந்திருக்க வேண்டும்.
ஒரே வார்த்தையில் ஆன்மீகம் என்றால் என்ன? என்று கூற வேண்டுமென்றால் கர்ப்பத்திலிருந்து மரணம் மட்டும் தன்னை அன்பு செய்து தன்னைப்போல பிறரை அன்பு செய்வதே ஆன்மீகம்.
-ஆனந்தி
🙏🙏
ReplyDelete