Malarga Manitham Magazine- June 2016
அடிப்படை நிலை
அன்புள்ள மாணவ செல்வங்களே, ஏனோ கடவுளிடமிருந்தும், மாஸ்டரிட மிருந்தும், மாணவர்கள் இன்னும் HUE-ன் அடிப்படை நிலையை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று கூறுவதாக உணருகின்றேன். மாஸ்டர் கூறுவார்கள். நீங்கள் அடிப்படை நிலையை அடைந்த பின் குறைந்தது 4 அல்லது 5 தடவை ஆடிட்டராக வந்து அமர்ந்து, திரும்பி திரும்பி இதை கேட்கும் பொழுதுதான். HUE ஆழத்தை புரிந்து கொள்வீர்கள். அதனால் திரும்பி திரும்பி அடிப்படை நிலையை புரிந்து கொள்ளுங்கள் என்று அடிக்கடி கூறுவார்கள்.
அடிப்படை நிலையில் நடப்பது என்ன? உங்களுக்கு கிடைப்பது என்ன? என்பதை சற்று தெளிவாக பார்ப்போம்.
அடிப்படை நிலையில் எடுக்கப்படும் பாடங்கள் என்ன? கடவுளின் சாயல் "அன்பு", 'கடவுள் அன்பானவர். அன்பின் தன்மைகள் என்ன? அன்பின் குணங்கள் என்ன? மனிதனை ஏன், எதற்கு, எப்படி படைத்திருக்கிறார். நமக்கும், அவருக்கும் உள்ள உறவு, ஒப்பந்தம் என்ன? எதற்காக உலகத்திற்கு வந்தோம்.
வரும்பொழுது அவர் கொடுத்த கொடை என்ன? யாருமே எடுக்க முடியாத அன்பு, ஆனந்தம், மகிழ்ச்சி என்ன? உயிர் ஒட்டம் என்றால் என்ன? ஆன்மீக உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள் என்ன? உயிர் ஓட்டத்தைதடை செய்கிற "அழுத்தங்கள்" என்ன? அழுத்தத்தை நாம் எப்படி நமக்குள் உருவாக்கி கொள்கிறோம். வெளியே இருந்து வரும் தடைகளை எப்படி கையாள வேண்டும். அவைகளை அழுத்தமாக மாற்றி உள்ளே எடுக்காமல், வெளியே வைத்து எப்படி கையாளுவது. முழுமை என்றால் என்ன? கடவுளின் கொடைகளை நாம் எப்படி இழக்கின்றோம். இழக்கின்றோம் என்று உணர்ந்தவுடன் எப்படி அதை மீண்டு எடுக்க வேண்டும். உயிர் ஒட்டத்தை உடலில் தங்க வைத்திருக்கின்ற சக்கராக்களின் அமைப்பு, இடம், உறுப்புகளின் தொடர்பு, செயல்படுத்தும் முறை, உயிர் சக்திகள் குறைவதால், உறுப்புகளில் ஏற்படும் குறைகள், அதை நிவர்த்தி செய்யும் முறைகள்.
இதை எல்லாம் நல்ல முறையில் செயல்பட வேண்டுபென்றால் நம் வாழ்க்கை மாற வேண்டும். அப்படி என்றால் என்ன? மேலே கூறிய விபரங்களை அறியாத சமயத்தில் வாழ்ந்த வாழ்க்கையும், அறிந்த பின்
வாழ்கின்ற வாழ்க்கையும் நிச்சயமாக மாற வேண்டும். இதைத்தான் நாம் மாஸ்டரின் எதிர்பார்ப்பு என்று கூறுகின்றோம்.
முதலில் நீ தீர்மானம் செய். எதற்கு? பழைய வாழ்க்கையை விட்டு விட்டு, அன்பை புரிந்து வாழ்க்கையை மாற்றி அன்போடு வாழ. நான் தீர்பானம் செய்கின்றேன். வாழ்க்கையில் தீர்மானம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அன்பை மையப்படுத்தி வாழ வேண்டுமென்றால் நமக்கு தேவைப்படும் ஒரே குணம் "மன்னிக்கும்” தன்மை. இது சுலபம் அல்ல. எத்தனை முறை மன்னிப்பது என்று இயேசுவிடம் கேட்டதற்கு ஏழு. ஏழுபது முறை என்றார். நான் கூறுகின்றேன். பிறந்ததிலிருந்து உயிர் நம்மை விட்டு போகும் வரை மன்னிக்க வேண்டியது நம் கடமையாக தெரிகிறது. எல்லா நிகழ்வுகளையும், எல்லா நேரத்திலும் மன்னித்தால் தான் நம் உயிர் நிம்மதியாக நம்மிடமிருந்து பிரிந்து, அடுத்த பிறப்புக்கு நிம்மதியாக போக முடியும். இதைத்தான் மாஸ்டர் இரண்டாவது எதிர்பார்ப்பாக கூறுகிறார். நாம் நம்மைப்பற்றி அறிய வேண்டும். மாற்ற வேண்டிய குணங்களை மாற்ற வேண்டும் என்றால் நம் தினமும் தியாளம்' செய்ய வேண்டும். "தியானம்" என்றால் என்ன? கடவுள் முன் நான் யார், கடவுள் என்னிடம் கூற விரும்புகின்ற செய்திகள் என்ன. "கடவுளே என்னிடம் பேசும், நான் கேட்கின்றேன். நீ என்னிடம் விரும்பாத குணங்கள் என்ன? என்று கேட்டு அறிவதற்கு பெயர் தான், "தன்னை அறிவது, மாற்ற வேண்டிய குணத்தை மாற்றுவது, ஆன்மீகத்தை வளர்த்து எடுப்பது'. சக்தி மையத்தை
முழுமையாக மீண்டும் செயல்பட வைப்பதால், குணமளிக்கும் வரத்தை கொடையாக நீ பெற்றுக் கொள்கிறாய். நான் உன்னை ஒரு கருவியாக பயன் படுத்துவேன். அதனால் இன்றிலிருந்து நீ உன் கரங்கள் சுகமளிக்கும் வரத்தை பெறுகிறது. நீ யார், யாருக்கு சுகமளிக்க விரும்புகின்றாயோ, என்னிடம் கூறு, என்னோடு சேர்ந்து, கையை அவர் மேல்வை. நான் அவர்களை சுகப்படுத்துவேன் என்று வாக்குறுதி தந்து ஒப்பந்தம் செய்கிறார். நான் என் ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதால் என் பிரபஞ்ச சக்தியில் சந்தேகப்படாதே. என்னால் ஆகாதது ஒன்றுமில்லை. விசுவாசம் கொள் என்கிறார். உன் விசுவாசம் உன்னை சுகப்படுத்தும் என்று உறுதியாக கூறுகின்றார். பின் உன் உள்ளத்தை திறந்து, என் படைப்புக்களுக்கு அங்கே இடம் கொடு. எல்லா படைப்பும் என் அன்பின் வெளிப்பாடு. எல்லா படைப்டையும் உன்னை நம்பி படைத்தேன். அவைகளுக்கு சக்தி கொடுத்து. பரிணாம வளர்ச்சிக்கு நீ தான் உதவி செய்ய வேண்டும். "படைத்தேன், படைப்பெல்லாம் மனிதனுக்காக, மனிதனை படைத்தேன். எனக்கு தலைவணங்க," படைப்புகளுக்கு உதவி செய்வது நம் கடமை. எல்லா படைப்புக்கும் எப்படி சக்தி அதனால் பரிமாற்றம் செய்யும் யுக்திகளை நமக்கு சொல்லித் தருகிறார். மிருகங்களுக்கும், தாவரங்களுக்கும் எப்படி சக்தி பரிமாற்றம் செய்ய வேண்டுமென்று தனித்தனியாக யுத்திகளை தந்திருக்கின்றார் மாஸ்டர்.
அடிப்படை நிலையில் நமக்கு கிடைத்த சக்திகள் என்ன?
1.100 சதமானம் 2-7 வரை
சக்கராக்கள் முழுமையாக செயல்பட வைத்தது. ஒரு புது வாழ்வு தந்தது.
2. 'சக்தி' உடல் வற்றாமல் இருக்க எல்லா சக்கராக்களும் சேர்த்து தரப்பட்டது.
3. தொட்டு சுகப்படுத்தும் வரம் கிடைத்தது.
4. தியானத்தின் வழியாக இறைவனோடு தொடர்பு கொண்டு அவரின் சித்தத்தையும், நாம் வாழ்க்கையின் உடன்படிக்கையும் அறிந்து, தன்னுடைய ஆன்மீகப் பாதையை அறிந்து வழிநடத்த செயல்பட முடிகிறது.
5. கடவுள் நம்மை ஒரு கருவியாக, மற்றவர்களுக்கு சக்தி பரிமாற்றம் செய்ய உதவி செய்கிறார்.
6. உயிர் உள்ள ஆன்மாக்களுக்கும், இறந்த ஆன்மாக்களுக்கும், எதிர்மறை சக்திகளை விரட்டும் சக்தியும் கிடைக்கிறது.
7. இறைவன் நம் உடலை எப்படி படைத்திருக்கிறார் என்ற ஞானம் கிடைத்தது.
8. உடல் இறைவன் தங்கும் புனித இடம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
9. சக்தி மையங்கள் அதனுடன் தொடர்புள்ள உடல் உறுப்புகள் செயல்படும் முறைகளை புரிந்து கொள்ளும் ஞானம் கிடைத்தது.
10.வியாதியை உருவாக்காமல் ஆனந்த வாழ்க்கை வாழக் கற்றுக் கொண்டது.
நாம் செய்யும் எல்லா சக்தி பரிமாற்றமும், கடவுளின் சக்தி, கடவுளோடு இணைகின்றோம். அவர் நமக்கு இலவசமாக தருகிறார். ஆதனால் நம் கரங்களை மட்டும் பயன்படுத்து வதால் சக்தி பரிமாற்றத்திற்கு பணம் கேட்கக் கூடாது, "இலவசமாக பெறுகிறோம். இலவசமாக கொடுக்க வேண்டும்" என்று அழுத்தமாக கூறுகின்றார்.
உன்னுடைய உண்மையான விண்ணப்பமும், வியாதிகாரர்களின் விசுவாசமும் சேர்ந்தால் என் சக்தி புதுமை செய்யும். புதுமை செய்யும் என் சக்தியை வைத்து நீ பெயரோ, புகழோ சம்பாதிக்கக் கூடாது என்கிறார். காரணம் இந்த பெயர், புகழ் எல்லாம் நம் 'Ego' தனித்தன்மையோடு ஒட்டியிருக்கும். பெருமையை வளர்த்து விடும். எனக்கு தலைவணங்க வேண்டிய மனிதன் பெருமையில் வளர்ந்தால், நான் என்னிடமிருந்து தள்ளி விடுவேன். சிதறடித்து விடுவேன் என்கிறார் ஆண்டவர். அதனால் தான் மாஸ்டர் அழுத்தமாக மனத்தாழ்ச்சியோடு இருங்கள். இறைவனிடம் கேட்டு செய்யுங்கள். இறைவனின் சித்தத்திற்கு கீழ்படிந்து நடங்கள் என்கிறார்.
இறைசித்தத்தை அறியவும், நம் ஆன்மீக உடலுக்கு சக்தி கொடுக்கவும் தினமும் தியானம் செய்து. நமக்குத் தானே சக்தி பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள். சக்தி பரிமாற்றம் தினமும் செய்வதால், உங்கள் உயிர் ஓட்டம் சாகாது. அன்பில் வாழ்ந்து, மற்றவர்களுக்கு சக்தி பரிமாற்றம்
செய்வதால், உங்கள் சக்தியின் வோட்டு அதிகப்படும் என்கிறார். ஆதனால் உடல் நலமாக இருந்தாலும் நாம் எல்லோரும் எல்லா விதத்திலும் முழுமை அடையவில்லை.உணர்ச்சியில் புத்தியில் இன்னும் சமநிலை அடைய வில்லை. இறை உறவில் வளர நமக்கு அவரின் சக்தி தேவை. அவரின் சக்தி நமக்குள் செயல்பட, செயல்பட நாம் இறைத்தன்மையை அடைவோம். இறைவனின் நோக்கம் இறைத் தன்மையை மனிதன் அதிகரித்து இறைவனாக நடமாடும் தெய்வமாக மாற வேண்டுமென்பதே. இந்த நிலையை அடைய ஒவ்வொரு சித்தர்களும், மகான்களும் எவ்வளவு கடுமையான தியாகங்கள் செய்து தெய்வத்திடமிருந்து வரங்கள் பெற்றிருக்கிறார்கள்! நாம் என்ன செய்தோம்? தவமும் செய்யவில்லை. ஆசை, பாசங்களை விடவும் இல்லை. பின் ஏன் நமக்கு இந்த வரங்கள்? இத்தனை சுலபமாக என் இறைவன் கொடுத்தார்? நம் முன்னோர்களின் ஆசீரோ அல்லது நம் முன்பிறவியின் ஆசீரோ என்று நாம் நினைக்கலாம். ஆனால் மாஸ்டர் என்ன கூறினார் என்றால் நாம் எதிர்பார்க்கும் இருட்டு நாட்களில் அல்லது மனிதகுலம் கஷ்டப்படும் பொழுது நாம் தான் முன்னோடிகள். நாம் உடனே முதல் உதவி செய்ய, ஆன்மாக்களை வழிநடத்த, நாம் இறங்க வேண்டும். இதற்காகத்தான் கடவுள் நம்மை தெரிந்தெடுத்து இத்தனை வரங்களை நாம் கேட்காமலே நம் கையில் தந்திருக்கின்றார். அதிகம் பெற்றுக் கொண்டோம். அதிகமாக கணக்கு கொடுக்க வேண்டும். அந்த தெய்வ
பயத்தோடு சேவை செய்ய வேண்டும். சேவை செய்ய வேண்டிய காலகட்டத்தில், தன்னலமாக, குடும்ப பற்றோடு. தன்னை காத்துக் கொள்ள செயல் படாமல் இருந்தால் கடவுள் கண்டிப்புள்ளவர் என்றும் மறந்து விடக்கூடாது. அன்பானவர், கண்டிப்பும் உள்ளவர்தான் நம் கடவுள். அதனால் ஒரு பற்றற்ற வாழ்க்கையை கடை பிடிக்க வேண்டும். நாம் உலகத்தில் வாழ்கின்றோம். ஆனால் உலகத்தை சார்ந்தவர்களாக வாழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 100 சதமானம் நம் சக்தி மையத்தை செயல்பட வைப்பது என்பது கடவுள் நமக்கு கொடுக்கும் மறு ஜீவியம், புனிதமான ஜீவியம். அதை கடைசி மட்டும் புனிதத்தன்மைக்கு பயன்படுத்திக் கொள்வோம். சக்தியை எதிர்மறை சிந்தனை செயல்பட உபயோகிக்காமல் இருக்க இறைவன் கூறியபடி எல்லா நேரமும் விழிப்பாக இருப்போம். எதிர்மறை சக்தி நம்மை சோதனையில் உட்படுத்தும் பொழுது ஜெபிப்போம். உயிர் நிலை ஆன்மாக்களின் உதவியை கேட்போம். இறைவா? எங்களை சோதனையில் விழ விடாதேயும். தீமையிலிருந்து விடுவித்தருளும். எல்லா வரங்களையும் சக்திகளையும் பெற்றுக் கொண்டோம். அதற்கு தகுந்தால்போல நடக்க எங்களுக்கு ஞானத்தை தாரும். வழிநடத்தும் என்று தினமும் நமக்காகவும் இந்த வரத்தை பெற்ற எல்லோருக்காகவும் சக்தி பரிமாற்றம் செய்வோம்.
நிர்வாகி Dr. அமலாவதி
No comments:
Post a Comment