Tuesday, July 18, 2023

Irudaya Thoodhan 1988

 Our Sister Dr.M.Amalavathy's First article in "Irudaya Thoodhan" magazine on December, 1988...


உள்ளத்தில் இல்லை ஊனம்!

அமலாவதி, கிறிஸ்துநகர்.

பெங்களூரிலேயே மிகச்சிறந்த கிஃப்ட் ஷாப் அது. பரிசுப்பொருட்கள் வாங்க இதைவிட நல்ல கடையே கிடையாது. அங்கே ஏராளமான கிறிஸ் மஸ் பரிசுப் பொருட்கள் பல ரகத்தில், பல விலை யில், பல வண்ணத்தில் வருவோர் போவோரைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தன.

ஏனோ அன்றொருநாள் அவ்வளவு கூட்டமும் இல்லை, வியாபாரமும் சரியில்லை. கடை உரிமை யாளன் வினோத் சோம்பலாய் உட்கார்ந்திருந் தான். திடீரென அவன் கண்களில் ஒரு சிறுமி தென்பட்டாள்.

கண்ணாடியில் தன் மூக்கை வைத்து அழுத்திக் கொண்டு கடையில் உள்ள பொருட்களை ஏக்க துடன் உற்றுப் பார்த்துக் கொணடிருந்தாள். இவனுக்குச் சற்று உற்சாகம் பிறந்தது.

"உள்ளே வாம்மா. உனக்கு என்ன வேணும்?' சிறுமி உள்ளே அடியெடுத்து வைத் தாள். அப்போது வினோத் கவனித்தான். அவ ளுக்குக் கால்களில் ஊனம். இரு சுட்டைகளின் உதவியோடு நடந்து கொண்டிருந்தாள். வினோத்தின் பரிவு இன்னும் அதிகமானது.

"அங்கிள், என் பேரு அனிதா. நானும் என் அக்காவும்தான் வீட்லே இருக்கோம். எனக்கு அம்மா, அப்பா, உறவுஎல்லாம் என் அக்காதான். அவளுக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசு வாங்கிக் கொடுக் கலாம்னு வந்தேன்...ஆனா..."என்று இழுத்தாள்.

வினோத்துக்குப் புரிந்துவிட்டது. உற்சாகத்

தோடு கூறினான்: "அனிதா, கண்டிப்பா அக் காவுக்குப் பரிசு கொடுக்கணு ம். உனக்கு எந்தப் பரிசுப் பொருள் புடிக்குதோ அதை எடு'' என்றான்.

கண்களை நாலாப்பக்கமும் சுழலவிட்ட அனி தாவின் கண்கள் ஒரு நெக்லஸ் மீதுபட்டு விலகா

மல் நின்றன. வினோத் அந்த நெக்லஸின் விலை யைக் கவனித்தான். ஆனால் சிறுமி விலையைக் கவனிக்கவில்லை என்பதும் தெரிந்தது. "வெரிகுட் செலெக்ஷன் அனிதா. அது சரி,

எவ்வளவு பணம் வச்சிருக்கே ?''

"ஒவ்வொரு நாளும் உண்டியல்லே நான் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துவச்ச எல்லாப் பணத்தையும் கொண்டு வந்திருக்கேன். இதோ... என்று கூறி பெருமையோடு தன் கைக்குட்டையை அவிழ்த்து மேசையின் மேல் பணத்தைக் கொட்டி னாள் அனிதா. சில்லறையை எண்ணினான் வினோத். இருந்தன. சரியாக 29 ரூபாய் 50 காசுகள்

நெக்லசை எடுத்தான். விலைச் சீட்டை வெட்டி எடுத்தான். அழகான பரிசுப்பேப்பரில் அதைச் சுற்றினான். மகிழ்ச்சியோடு அனிதா விடம் தந்தான். அனிதாவின் சந்தோஷத்திற்குக் கேட்கவா வேண்டும்? தத்தித்தத்தி நடந்து வெளியேறினாள். அதுவும் விரைவாக!

அடுத்த நாள் காலை! வேகமாகக் கடைக் குள் நுழைந்தாள் ஒரு பெண். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வார்த்தைகள் துள்ளி விழுந்தன :

இந்த நெக்லஸ் உங்கள் கடையிலிருந்து வாங்கப்பட்டது தானே? இதை யாருக்கு விற்றீர் கள் என்று ஞாபகம் இருக்கிறதா? இதனுடைய உண்மையான விலை என்ன?"

"இதை என் கடையிலிருந்து அனிதா என்ற சிறுமிக்கு நான்தான் விற்றேன். இதன் விலை 350 ரூபாய்.'

"இவ்வளவு பணம் அவளுக்கு இல்லையே.

பின் எப்படி இது அவள் கைக்கு வந்தது?" சிறிது மவுனத்திற்குப் பின் வினோத் கூறினான்:

அனிதாவிடம் இருந்தது ரூ.29–50 காசு தான். ஆனால் அவளைப்போல இதுவரைக்கும் யாரும் என்னிடம் ஒரு பொருளையும் வாங்கியது இல்லை. அவள் ஆசையோடு, தியாகம் செய்து சேர்த்து வைத்திருந்த எல்லாப் பணத்தையும் அன்பாகக் கொடுத்து வாங்கினாள். இது கிறிஸ்மஸ் விழாக்காலம். இத்தனை ஆபரணங் களை விற்கிற எனக்குக் கிறிஸ்மஸ் பரிசு என்று ஒன்று கொடுக்க இந்த உலகத்திலே யாருமே இல்லை. ஆனால் அவளுக்கு ஒரு பரிசு கொடுக்க ஓர் ஆள் இருந்தான். அது தவறா? அந்தப் பரிசையும் அவள் தனக்காகவா வாங்கினாள்? தனக்காக வாழ்நா ளெல்லாம் கஷ்டப்படும் அன்பு அக்காவுக்காக! இந்த அன்புக்கு ஏதம்மா விலை ? தயவுசெய்து எடுத்துக்கொள், உன் தங்கை உனக் களித்த பரிசை?"

வாயாடைத்து நின்ற அந்தப் பெண் நெக்லசுடன் வெளியேறி வாயடை னாள். பின்னாலிருந்து வினோத் கூவினான்: தங்கை அனிதாவை 66 அழைத்துக்கொண்டு கிறிஸ்மஸ் அன்றைக்கு என் வீட்டிற்கு வர மறக்க வேண்டாம்."

No comments:

Post a Comment

Achieve - think

Achieve -  think ----------------------------------- Science Perspective:- Our thinking is created by the brain communicating with the frequ...