MM OCTOBER 2001
இந்த நாடகத்தில் நான் ஒரு நடிகை
இப்பெரிய உலக நாடக மேடையில் நான் ஒரு நடிகை. மற்ற ஆன்மாக்களும் நடிகர்கள் தான். ஒவ்வொரு ஆன்மாவும் தனக்கென உரிய தனியான உடல் என்ற வேடம் தாங்கி, தனிப்பட்ட நாடகப் பாத்திரத்தைத் தாங்கி, அதை நடித்துக் கொண்டிருக்கின்றது.
என் வீட்டிலிருந்து ஒளி நிறைந்த உலகத்திற்கு மற்றவர்களோடு நான் நடிக்க வேண்டிய நாடகப் பாத்திரத்தை நடிப்பதற்காகவே வந்திருக்கின்றேன். நாடகத்தில் சில காட்சிகள்
எனக்குத் துன்பக் காட்சிகளாகவும்,
சில காட்சிகள் எனக்கு இன்பமாக வும், விருப்பமாகவும் அமைகின்றன. மனித பிரபஞ்ச சக்தியில் நான் சேர்ந்த பிறகு என் நாடகத்தில் எனக்குத் துன்பத்தைக் கொடுத்த
காட்சிகள் இப்பொழுது எனக்குத் துன்பத்தைத் தருவதில்லை. காரணம் நான் மற்றவர்களையும் என் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையில் வளர்ந்து விட்டேன்.
அவர்களும் என் நாடகத்தின் ஒரு பகுதி என்று ஏற்றுக் கொண் டேன். அவர்களும் இவ்வுலகில் அவரவர் பாகங்களை ஏற்றுக் நடித்துக் கொண்டிருக்கின்றார். கள். அவர்கள் எனக்குத் தேவை என்று உணர்ந்து அவர்களை மதிக்கப் படித்துக் கொண்டேன்.
இந்த நாடக பாத்திரத்தை நான் நடித்தாலும் அதில் பற்றுதல் இல்லாமல், காட்சியில் நான் பாதிக்கப்படாமல் நடிக்கப் படித்துக் கொண்டேன்.
மாஸ்டர் டாங்க்கு என் நன்றி.
அமலா
No comments:
Post a Comment