MM-DECEMBER 2005
பிரார்த்தனை
இயற்கையைப் படைத்தான்
இன்னல்கள் தீர்த்தான்
இதய தீபமான இறைவன்; இயற்கையே இன்னலானது
இன்பமும் தொலைந்து போனது இயற்கைச் சீற்றங்களால்! -மனம்
இறுகிப்போன அக்னிக்கு
கருகிப் போயின உயிர்கள்!
காட்டாற்று வெள்ளம்
வேட்டையாடியது மக்களை!
அள்ளித் தந்த அலைகடல்
தள்ளிச் சென்றது உயிர்களை அசலும் வட்டியுமாய்ச் சேர்த்து!
தன்னைத் தோண்டுபவரையும் தாங்கிய அன்னை
அடுக்கு மாடிக் கட்டிடத்தையெல்லாம் அடுத்து நொறுக்கியது பூகம்பம்!
அத்தனை கோரப்பசியா இயற்கைக்கு?
அன்னையின் அகோரப்பசிக்கு
அடுத்த பலி அமெரிக்கா
இன்னும் பசி தீரவில்லையென்று இந்தியாவையும் கேட்கிறாயே! இயற்கை அன்னையே - உன்
அகோரப் பசி அடங்கிட
ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்... (அன்பான MEL குடும்பத்தினருக்கு,
இந்த மாணவியின் அன்பான வேண்டுகோள் ! இவ்வுலகை
இயற்கைச் சீற்றத்தினின்று காக்க, தத்தமது அன்பு எண்ண அலைகளை அனுப்பிட வேண்டுகிறேன்.)
G. சிவசங்கரி,
L3 Student, St. Joseph's girls H.S.S
No comments:
Post a Comment