Saturday, May 16, 2026

முதியோர் இல்லங்கள் உருவாவதற்கான பின்னணி

பிப்ரவரி 2019 மலர்க மனிதம் இதழிலிருந்து, முதியோர் இல்லங்கள் உருவாவதற்கான பின்னணி குறித்து டாக்டர் எம். அமலாவதி அவர்கள் எழுதிய கட்டுரைப்பகுதி (பக்கம் 9) அப்படியே கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

முதியோர் இல்லங்கள் உருவாவதற்கான பின்னணி
குழந்தையாக இருக்கும் பொழுது நீ எனக்கு என்ன தியாகம் செய்தாய் என்று எதிர்காலத்தில் பிள்ளைகள் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? "நான் ரொம்ப பிசியாக இருந்தேன், அதனால் ஸ்பெஷல் ஆயா (Baby Sitter) வைத்து உன்னைக் கவனித்தேன்" என்று கூறினால்... மகனும் மகளும் என்ன சொல்வார்கள்? "அதைத்தான் நான் இன்று உனக்குச் செய்கிறேன்" என்று உங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவார்கள்.

"படி, பணம் சம்பாதி என்று சொல்லி நீங்களும் அதைத்தான் செய்தீர்கள். தாங்கள் என்னை அன்று அன்பு செய்யாமல் சம்பாதித்த பணத்தை இன்று உனக்கே செலவு செய்து முதியோர் இல்லத்தில் வைக்கிறேன். பின் ஏன் நீங்கள் என்னை குற்றப்படுத்தி, சபிக்கின்றீர்கள்?" என்று பிள்ளைகள் உங்களிடம் திருப்பி கேட்கும் நிலை உருவாகும்.

நீங்கள் எதை விதைத்தீர்களோ, அதைத்தான் இன்று அறுவடை செய்கிறீர்கள். குழந்தைப் பருவத்தில் அவர்களுக்குத் தேவையான அன்பையும், தியாகத்தையும், உங்களின் நேரத்தையும் கொடுக்கத் தவறிவிட்டு, இன்று அவர்கள் உங்களைக் கைவிடும் போது அழுவதில் எந்தப் பயனும் இல்லை.

No comments:

Post a Comment

Flower Remedies

In turn, as the mental and emotional spheres are harmonized, the physical body can relax into a more functional, balanced state. The flower ...