Thursday, December 12, 2024

மனித பிரபஞ்ச சக்தி தியானம்

 அன்புள்ள சகோதர சகோதரிகளே


நமஸ்தே!


நாம் அனைவரும் உடல் அளவிலும் மன அளவிலும் ஆன்ம அளவிலும்  நலமாக இருக்கிறோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டுகிறேன் .


உங்களுக்கு நலம் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால். நீங்கள் இந்த பிரபஞ்ச சக்தி தியானத்தை செய்து பார்த்து பயனடயலாம்.


முதலில் நீங்கள்   இறைவனிடம் அல்லது பிரபஞ்சக்தியிடம் இறைவா!  இந்த நோயை (நீங்கள் நினைக்கும் ) நான்தான் உருவாக்கியுள்ளேன். அன்புக்கு விரோதமாக போய் நான் தான் இந்த நோயை உருவாக்கி வைத்திருக்கிறேன் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் ,   நீங்கள் இந்த நோய் வருவதற்கு யாரிடம்  வருத்தமும் வேதனையும் துன்பமும், பொறாமை அல்லது  கோபமோ அல்லது தீய எண்ணங்கள் வைத்திருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமோ அந்த ஒவ்வொரு நபர்களிடமும் (தாய், தந்தை, கடவுள்,குடும்ப உறுப்பினர்கள் முதலாக அனைவரிடமும், இறந்தவர்களாக இருந்தாலும் )நீங்கள் மனதார மன்னிப்பு கேளுங்கள் அதேபோல் அவர்களை நான்மனதார மன்னிக்கிறேன் என்று சொல்லுங்கள். எத்தனை வேதனை அவர்கள் தந்திருந்தாலும் சரி நீங்கள் மனதார அவர்களை மன்னிக்கிறேன் என்றும், அவர்களிடம்  எத்தனை வேதனை நீங்கள் கொடுத்திருந்தாலும் ஒவ்வொரிடமும் தனித்தனியாக மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறுங்கள் ( வாயால் உங்கள் காதிற்கு கேட்க்கும்படி ). நேரடியாக கேட்க முடிந்தால் மிகவும் நலம்.


பின்பு இறைவா!

நான் செய்த குற்றங்கள் குறைகளை  மன்னித்து எனக்கும் என் குடும்பத்தாருக்கும், இந்த உலகில் வாழும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அருள் புரிய வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறுங்கள் .


பின்பு அமைதியாக அமர்ந்து மூன்று முறை மூக்கு வழியாக நம்மை படைத்த அந்த இறைவனின் எல்லையில்லாத அன்பை நான் சுவாசிக்கிறேன் எனது அன்போடு சேர்க்கிறேன் மனித குலத்துக்கு மனித பிரபஞ்ச சக்தியாக வெளிவிடுகிறேன் என்று நினைத்து 3 முறை மூக்கு வழியாக சுவாசம் எடுத்து வாய் வழியாக வெளி விடவும். பிறகு இயல்பான நார்மல் சுவாசம்.


பிறகு கண்களை மூடி இந்த பிரபஞ்சத்திலிருக்கும் கடவுளின்  எல்லையில்லாத அன்பு உங்களது தலை வழியாக உள்ளே வந்து கால் பாதம் வரை நிரப்புவதாக நினைத்து  குறைந்தது  ஐந்து நிமிடம் அதிக பட்சம் முப்பது நிமிடங்கள் அமைதியாக இருக்கவேண்டும்.இறைவனுடைய அன்பு  வந்து உடல், மனது மற்றும் ஆன்மாவையும் முழுவதும் நிறைத்துக் கொண்டு இருப்பதாக நினைத்து உங்கள் சுவாசத்தில் மட்டும் கவனம் வைத்து தியானம் செய்யவும். 


தியான முடிவில் 3 முறை மூக்கு வழியாக மீண்டும் சுவாசம் எடுத்து வாய் வழியாக  வெளி விடவும்.


தொடர்ந்து ( ஒரு மண்டலம் 48 நாட்கள் )  செய்து வரவேண்டும்.


உங்கள் வாழ்வில் எல்லாம் வல்ல இறைவன்/பிரபஞ்சசக்தி மிகப் பெரிய அற்புதங்களை செய்வார்.

இந்த தியானம் முடித்தவுடன் பிரபஞ்சத்திற்கு நன்றி கூறவும்.


இது குருவின் வெளிப்பாடு .

"மனிதன் தான் மனிதனுக்கு உதவும் கரம் " - மாஸ்டர் டாங் 


இத்த தியானத்தை தொடர்ந்து செய்து பயன் அடையுங்கள். பயனடைத்தவர்கள், மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்கவும்.


நன்றி

மனித பிரபஞ்ச சக்தி தியானம்

 அன்புள்ள சகோதர சகோதரிகளே நமஸ்தே! நாம் அனைவரும் உடல் அளவிலும் மன அளவிலும் ஆன்ம அளவிலும்  நலமாக இருக்கிறோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டுகி...